Posts

மாற்றங்கள்

Image
மாற்றங்களே இல்லா உலகினை நாம் பார்க்க முடிகிறதா? இல்லையே! மாற்றங்கள் எல்லா உயிரினங்களிலும்  இடைவிடாது நடந்துக்கொண்டே தானே இருக்கிறது.?  விதையில் ஏற்படும் மாற்றம் வேராக,பின்பு மரமாகி நிற்கவில்லையா? குழந்தையின் மாற்றம் நாளை மனிதன். இன்றைய தோல்வி நாளைய வெற்றி இன்றைய சேமிப்பு  நாளைய முதலீடு இன்றைய  துன்பம் நாளைய இன்பம். இன்றைய வலிகள்  நாளைய வளர்ச்சி. அதனால் தான் என்னவோ பெரியோர்கள், ஆண்டவன் ஒரு கதவை மூடினால் இன்னொரு கதவை திறப்பான் என்றார்களோ! மாற்றங்களே மாற்றம் இல்லாதது. இவ்வுலகில் எல்லாவற்றிலும்  இடைவிடாது மாற்றங்கள்நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றது. 1) மாற்றங்கள் வளர்ச்சியை கொண்டு வருகின்றது. 2)மாற்றங்கள் மனமகிழ்ச்சியை அதிகரிக்கிறது 3)மாற்றங்கள் நம்மின் உணர்ச்சிகளை மாற்றுகிறது. 4)மாற்றங்கள் நம்பிக்கையை கொடுக்கிறது. 5) மாற்றங்கள் புதிய உறவுகளை கொண்டு சேர்க்கிறது. 6) மாற்றங்கள் புதிய , புதிய அனுபவங்களை கொண்டு சேர்க்கின்றது.    மிதி வண்டியில் பயணித்த நாம் இன்றைய தலைமுறையினர் ஸ்கூட்டருக்கும் ஏன்   வானஊர்த்திக்கும்  மாறி விட்டதை பார்க்கிறோம்...

குரங்கு குட்டியும் பூனை குட்டியும்

Image
பக்தியில் பலவகை இருந்தாலும் பகவான் இராமகிருஷ்ணரின் பக்தியோ சற்று வித்தியாசமானது. பாமர மக்களுக்கும் புரியும் வகையில் சின்ன,சின்ன கதைகள் மூலமாக விளக்குவார்.பக்தியை இரண்டு வகையாக பிரிக்கிறார். 1) குரங்கு குட்டி பக்தி 2) பூனை குட்டி பக்தி குரங்கு குட்டி  தாயின் வயிற்றை இறுக பற்றிக்கொள்கிறது. தாய் குரங்கு கிளைக்கு,கிளை தாவினாலும் சரி,நடந்தாலும் சரி அதன் பிடியை விடுவதே இல்லை.அதைபோலத்தான் இவ்வகை பக்தனும்.எவ்வளவுதடைவந்தாலும்,துயரங்கள் வந்தாலும்சரி ,குரங்குகுட்டியை போன்றே இவன் இறைவனின் மேலுள்ள நம்பிக்கையை விடுவதே இல்லை அபிராமி பட்டர் நாயன்மார்கள்,ஆழ்வார்களை போல. நீயல்லால் எனக்கு யார் கதி? கல்லுடன் கட்டி கடலில் பாய்ச்சினும் சொல்லும் நாமம் நமச்சியாயவே! இறைவனின்நாமத்தை கெட்டியாக, குரங்கு குட்டி தாயின் வயிற்றை இறுக பற்றிஇருக்கும் படி , கொண்ட உறவுகள் கை விட்டு. உன்னை வீதியில் தள்ளினாலும் மனம் தளராது சிந்தையை அவன் தாளில் வைத்திருப்போர்க்கு துயர் தான் பாதிக்குமா? தாய் குரங்கை பற்றிய குட்டிக்கு தான் கீழே விழமாட்டேன் என்று நம்புவதை போன்றே இறை சிந்தனையில் இருப்போர்க்கு இறைவன் காப்பாற்றுகிறான். பூனை ப...

வாழ்க்கை

Image
நல்ல வாழ்க்கை எது தெரியுமா.. நன்றாக வாழ்வது அல்ல.. கிடைத்த வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் வீணடிக்காமல் வாழ்ந்தோம்.. நாலு பேருக்கு நலம் பயக்காவிட்டாலும் கூட.. அவர்களைப் பாதிக்காத வாழ்க்கை வாழ்ந்தோம் என்பதுதான்.  வாழும் வாழ்க்கையை அழகாக்குவது பணமோ,புகழோ மட்டுமல்ல,நாம் பெரும் மனநிம்மதியும்  ஆரோக்கியமான உடலும்,மனமும் கூடத்தான்.            ஆரோக்கியமான உடல்:- இதற்கு உணவில் மனக்கட்டுபாடு மிகவும் அவசியம். நம் மனம் விரும்பும் உணவை சாப்பிடாது,உடல் கேட்கும்  உணவை  சாப்பிட கற்றுக்கொள்ள வேண்டும்.  உடற்பயிற்சி மிகவும் அவசியம்.எந்த வயதினர்களாக இருந்தாலும் அவரவர் வயதிற்கேற்ப பரிந்துரைக்கும் உடற்பயிற்சியினை,  பரிந்துரைக்கும் நேரங்களில் செய்வது அவசியம். இக்காலங்களில் பணம் சம்பாதித்து கஷ்டமில்லாத வாழ்க்கையை தான் மட்டுமில்லாது தன்னை சார்ந்தவர்களும் வாழ பசியை பார்க்காது கண் துன்ஜாது ஓடி,ஓடி உழைக்கிறார்கள். அதனால் என்ன பயன்? ஆரோக்கியம் கெட்டு, சம்பாதித்த பணத்தை மருத்துவத்திற்காக செலவழிக்க வேண்டி வருகிறது.  உடல் கெட்டவுடன் மனமும் சோர்வடைந்து வி...

பீஷ்மம்

Image
 #பிதாமகரின் பீஷ்மம். பிரம்மசரியம் மட்டும் கடைபிடிப்பதில்லை பீஷ்மம் .இறுதிவரை இந்த மண்ணை ஆளுவதற்கு ஆசைபடாது,தன் குலத்தை காக்க,நாட்டை காக்க உழைப்பதுதான் பீஷ்மம் என்பதனை இவ்வுலகிற்கு உணர்த்தியவர் தான் பீஷ்மர் . களத்தில் வீழ்த்தப்பட்டார் பீஷ்மர் என்ற செய்தி கர்ணனை அடைந்ததும், அதிர்ந்துபோனான். எவர் வீழ்த்தியது என ஆவேசப்பட்டான். அர்ஜீனனின் பெயர் கேட்டவுடன் கொதித்தான்.  பிதாமகரை அத்தனை எளிதாய் வீழ்த்திவிட்டானா அர்ஜீனன் ?.. என கோபப்பட்டான் கர்ணன். இல்லை. சிகண்டியை முன்னிறுத்தி பீஷ்மரை வீழ்த்திவிட்டார்கள்.. என்றான் தகவல் கொண்டுவந்த வீரன். அதர்மத்தின் பக்கம் நாங்கள் நிற்கிறோம் என்று எங்களை குறைகூறிய பாண்டவர்களே, அதர்மத்தினைக் கையாளுவதுதான் தர்மமா ? அர்ஜீனா.. இதோ வருகிறேன். சந்திக்கிறேன் உன்னை களத்தில். உன்னைக் கொல்லவேண்டும் என நான் நினைத்ததற்கான காரணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக கூடிக்கொண்டே போகின்றன.. என தனக்குள் பொங்கினான்.  இறுதியாக ஒருமுறை, பீஷ்மரின் திருமுகத்தைக் கண்டுவரக் கிளம்பினான் குருஷேத்திரம் நோக்கி. கௌரவர் சேனையும், பாண்டவர் சேனையும் அணிவகுத்து நின்று, ஒவ்வொருவராய் பீஷ்மரைக்...

ஞானம் by velukudi krishnam

Image
  ஞானத்தை இரண்டு வகையாக நம் வேதங்கள் பிரித்திருக்கின்றன.அவை மெய்ஞானம் விஞ்ஞானம் மெய்ஞானம்   அழியாத,மாற்றடையாதது மெய்ஞானம். ஆத்மாவோ,ஆண்டவனோ,பஞ்ஜபூதங்களோ மாற்றமடையாதது,மட்டுல்ல,அது அழியாததும் ஆகும். விஞ்ஞானம்:- அழியக்கூடியது,மாறிக்கொண்டே இருக்கக்கூடியது. மெய்ஞானம் இல்லாது விஞ்ஞானம் இல்லை. இதை விளக்க ஒரு உதாரணத்தை காட்டுகிறார். அரிசியை வேக வைத்தால் சோறு கிடைக்கிறது.எப்படி?   இதற்கு விஞ்ஞானம் கண்டு பிடித்த அடுப்பு மட்டும் போதுமா? இல்லையே!அதற்கு ஒரு பாத்திரம் வேண்டும். அது மண் பாத்திரமோ அல்லது உலோகமோ,அது செய்வதற்குண்டான மூலப்பொருள் பூமியிலிருந்து தான்  கிடைக்கிறது.( நிலம் ). அடுத்து அதை கழுவவேண்டுமே!அதற்கு தண்ணீர் தேவை.( நீர்) வேக வேண்டும் என்றால் நெருப்பு தேவை. நெருப்பு எரிய. காற்றின் துணை தேவை. கால் பங்கு அரிசிக்கு மூன்று மடங்கு தண்ணீர் ஊற்றி வேக வைத்தால் முக்கால் சட்டி அல்லது முழு சட்டி சோறு கிடைக்கிறது.அரிசி சோறாக மாறும் போது சட்டியிலுள்ள வெற்றிடத்தை ஆக்ரமித்துக் கொள்கிறது. அந்த வெற்றிடம் தான் ஆகாயம் . பஞ்ஜ பூதங்கனின்  துணை எந்த ஒரு கண்டு பிடிப்பிற்கும் தே...

அலகிலா விளையாட்டுடையான்

Image
உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டு உடையான் அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே (கம்பராமயணம் பாயிரம்)  இறைவனும் தாயும் தம் பிள்ளைகளை பேணுவதில் ஒத்துயிருக்கிறார்கள் ஆம், சிந்தித்து பாருங்கள். ஒரு தாய் தன்  குழந்தைக்கு எப்படியெல்லாம் விளையாட்டு காட்டி மகிழ்விக்கிறாள். பொய்கோபம் காட்டுகிறாள்.குழந்தை அதை உண்மை யென்று அழும் போது வாரியணைத்து உச்சி முகர்கிறாள்.கேட்கும் பொருளை மறைத்து போக்கு காட்டி Surpriseஆக கொடுத்து அதன் மனம் மகிழ்வதைக் கண்டு இவள் மகிழ்கிறாள். தடம் மாறும் போது தண்டிக்கிறாள். நல்ல வாழ்க்கைக்கு வழிகாட்டுவதும், நன்றாக வாழும் போது மகிழ்வதும் அவளே தான். படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல்என்றஐந்தொழில்களையும் செய்கிறாள் . இந்உலகமே ஆண்டவனின் விளையாட்டிற்காக படைக்கப்பட்டதுதானேஉயிர்களைபடைக்கிறான்,காக்கிறான்,பின் அவனே அதை அழித்து தன்னிடமே சேர்த்துக்கொள்கிறான்.இது எப்படி இருக்கிறதுஎன்றால்குழந்தைகள்மண்வீடுகட்டிவிளையாடுகிறது,விளையாடிசலித்தவுடன்அதேதன் காலால் எட்டியுதைத்து கலைத்து விடுகிறதல்லவாஅதுபோலத்தான்இறைவனின்திருவிளையாடல்...

தவம் என்பது யாதெனில்........

Image
தவம் என்பது தனியாக ஓர் இடத்தில் அமர்ந்து இறைவனிடத்து ஒரு காரியம் நிறைவேற்றுமாறு வேண்டுவது மட்டும் தவமல்ல. ஒரு குறிக்கோளை அடைய , விடாது செய்யும் முயற்சி கூட தவமேயாகும். இது மூன்று வகைப்படும் . 1) காமிய தபஸ் :- துருவன் செய்தது,காரிய தபஸ். தான் உயர் நிலை அடைய செய்தது. இது சுயநலமானது. தனக்காக செய்வது. 2) அஸூர தபஸ்: -  தன் உடலை வருத்தி செய்வது,இராவணன்,ஹிரண்யகசிபு போல. 3) தெய்வீக தபஸ்:- வால்மீகி,திருநாவுக்கரசர்,விவேகானந்தர், போல இந்த சமுதாயத்திற்காக,அதன் நன்மைக்காக செய்வது.  இதில் மூன்றாவது வகை தபஸ் தான் எல்லாவற்றிலும் சிறந்தது.தன் நலம் கருதாது பிறர் நலம் கருதி செய்யும் தொண்டே சிறந்த தவம். ஏனென்றால் இவ்வுலகை படைத்த இறைவனின் மனம் மகிழ இவ்வுலகம்  சிறப்புடன் வாழ தொண்டு செய்கிறார்கள் அல்லவா! தவம் என்பது உடல் ,மொழி, உள்ளத்தோடு சம்பந்தப்பட்டது. இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று  தொடர்புடையது. உடலின் செய்யும் தவம்: - எவ்வளவு கடினமான காரியமாக இருந்தாலும் ,உடல் சோர்வடைந்தாலும், அதை பொருட்படுத்தாது, உடலை வருத்திக்கொண்டு எடுத்த காரியத்தைமுடிப்பது.உண்ணாநோன்பு,பூ மிதித்தல்,கிரி வலம் வருதல்,...

ராமாயணமும் நாமும்

Image
  ராமாயணம் என்னும் ஆதிகாவியத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ஒவ்வொரு பாடத்தை நமக்கு கற்றுக்கொடுக்கிறது. நீ செய்யும் கர்மாவின் வினைப்பயனுக்கு நீயே தான் பொறுப்பு வால்மீகி :- ரத்னாகர் வேடனாக பல  குற்றங்களை செய்து பணம் சம்பாதித்து தன் குடும்பத்தைகாப்பாற்றிக்கொண்டிருக்கிறான். தன் குடும்ப உறுப்பினர்கள் மீது அளவற்ற நம்பிக்கை. தனக்கு ஏதாவது தீங்கு நேர்ந்தால் தன் செல்வத்தை பகிர்ந்து கொள்வதை போல இதையும் பகிர்ந்து கொள்வார்கள் என்று உறுதியாக நம்புகிறான். அப்போது வந்த நாரதரை கொள்ளை அடிக்க நெருங்குகிறான். அப்போது நாரதர் கேட்கிறார்,"நீ யார் பொருட்டு  இந்த கொள்ளை தொழிலை கைக்கொண்டுள்ளாய்?" "ஏன் என் குடும்பத்திற்காகத்தான்"என்று பதிலளிக்கிறான் அப்படியானால் நீ ஒன்று செய், என்னை இங்கேயே கட்டி போட்டுவிட்டு,உன் குடும்பத்தாரிடம் சென்று, கொள்ளையடிப்பதால் வரும் பாபத்தை பகிர்ந்து கொள்வார்களா என்று கேள்.அவர்கள் சொல்லும் பதிலை என்னிடம் வந்து சொல் என்கிறார்.  வேடனும் சென்று நாரதர் கேட்கக் சொன்ன மாதிரியே போய் கேட்க,அவர்கள் நீ எந்த வழியில் சம்பாதிக்கிறாய் என்பது பற்றி எங்களுக்கு கவலையில்லை, அ...

கர்மா

Image
திணை விதைத்தவன் திணை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்--என்பது எல்லோருக்கும் தெரிந்த பழமொழி. ஆம்! நாம் என்ன விதைக்கிறோமோ அது தானே விளையும். சோளத்தை விதைத்து விட்டு நெல்லை அறுவடை செய்ய நினைத்தால் நடக்குமா?  அது போலத்தான் நாம் செய்யும் வினைப்பயன்களும். மறுபிறவியில் நம்பிக்கை உள்ளதோ, இல்லையோ, இந்த பிறவியிலேயே பல நிகழ்வுகளை நாம் கண்கூடாக பார்க்கிறோம். அரசன் அன்றே கொல்வான் .தெய்வம் நின்று கொல்லும் . ஆம்!நாம் செய்யும் தவறுகள்தெரியவந்தால் அரசிடமிருந்து தண்டனை   உடனே கிடைத்து விடும். ஆனால் தெய்வத்திடம் எந்த தவறையும் மறைக்க முடியாது. செய்த தவறுக்கானகூலியை பெற்றே ஆக வேண்டும். கர்மாவும் மனமும்:- கர்மாவிற்கும் மனதிற்கும் நெருங்கிய தொடர்புண்டு. அது எப்படி? மனம் ஆசையின்படி நடக்கிறது. இன்று நான் பலருக்கும் பயன்படும் படியாக, ஒரு கல்விக்கூடத்தையோ, அல்லது சமுதாய கூடத்தை கட்ட வேண்டும் என்று நினைத்தால், அது நல்ல கர்மா. பக்கத்து வீட்டுக்காரன் சொத்தையும்  அபகரிக்க வேண்டும் என்று நினைத்தால் அது கெட்ட கர்மா. இரண்டு செயல்களும் மனதில் ஏற்படும் ஆசையே. அந்த ஆசையின் படி மனம் செயல்படுகிறது...

அண்டமும்,பிண்டமும்

Image

நான் பார்க்கும் யோகி.

Image
  யோகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது யோகாசனங்கள் தான். இது உடலுக்கு வலுவேற்றக்கூடியது. நான் பார்க்கும் யோகியோ மனதுக்கு வலுவேற்றி,பிறவிகளை சுருக்கி,இறைவனை அடையும் யோக த்தை பற்றி தான். Doctor இடம் வைத்தியத்திற்கு  போனால், உங்கள் life style ஐ மாற்றுங்கள் என்று கூறுகிறார்கள்.மன நல வைத்தியரிடம் போனால் negative thinking ஐ விட்டு   positive thinking  - -க்கு மாறுங்கள் என்கிறார்கள். Motivational speakers ம் அதையேதான் insist செய்கிறார்கள். உங்கள் வாழ்க்கையில் magic நடக்க வேண்டுமா, அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருங்கள்  என்று ஊடகங்களில்  பல அமைப்புகளும் சொல்கின்றன. நம் யோகிகளும், ஞானிகளும் சொன்ன மருந்தை புது பாட்டிலில் ஊற்றி கவர்ச்சிகரமான குரலில், அழுத்தமாக,லேபில் ஒட்டி மறைமுக வியாபாரத்தில் காசு பார்க்கிறார்கள். எப்படியோ மக்களுக்கு நல்லது தான் செய்கிறார்கள். அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சியே!. யோகியோ ,போகியோ இறுதியில் இணையும் இடம் அந்த பரம் பொருளிடம் தான். புனைரபிஜனனம்,புனைரபிமரணம்.இதுவே சாதாரண மனிதனின் வாழ்க்கை.ஆனால் யோகியின் வாழ்க்கையோ இதிலிருந்து...

ஒரு தாயின் கதை

Image
  அன்று திங்கட்கிழமை.வழக்கம் போல இறைவனுக்கு அபிஷேகம், ஆராதனைகளை தன்னால் முடியாத போதிலும் மிகவும் சிரமபட்டு முடித்து விட்டு நிமிர்ந்த போது உடம்பெல்லாம் தெப்பமாக நனைந்திருந்தது.பத்மா  தன் அவலநிலையை நினைத்து கண்ணீர் கூட விட முடியாது , தப்ப்புன்னு இருக்கையில் சாய்ந்தார். தன் இந்த நிலைக்கு என்ன காரணம் என்பதற்கான கேள்விகள் மனதில் ஓடியது. கர்மா,கர்மா என்கிறார்களே, அது தான் இந்த அவல நிலைக்கு காரணமான? சிந்தனை கடந்த காலத்தை நோக்கி திரும்புகிறது. தன் இளமை காலத்திலிருந்தே பிறர் சொல்லும் கூற்றை அப்படியே நம்பும் குணமுடையவள்.பிறர் சொல்லுவது தவறாகவே இருந்தாலும்,அவர்கள் தன்னைப்பற்றி தவறாக நினைத்து விடுவார்களோ என்று நினைத்து தன் மனதிற்குள் பூட்டி வைத்து விடுவாள். இந்த குணம் தானா மற்றவர்கள் அவளை பலியாடாக   நிறுத்தி வைத்துஉள்ளது.? தெரியவில்லை. தான் பெற்றது நன்றாக வாழ வேண்டும் என்று நினைத்து,தன்னிடமிருந்த எல்லாவற்றையும் கொடுத்தது தவறென்றால் தாய்ப்பாசம் என்பதின் விளக்கம் யாது?.  ஒருமுறை ஏமாறலாம் அல்லது இருமுறை ஏமாறலாம்,என்ன அடுத்தடுத்தா ஏமாறுவார்கள் என்று கேட்பவர்களுக்கு ஒரு கேள்வி ?...

பணம் படுத்தும் பாடு

Image
       அமுதா ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி இருந்தாள். தன் ஒரே பேரனுக்கு விடிந்தால் கல்யாணம். மனம் விச்ராந்தியாக கிடக்க என்ன காரணம்? இதுதான் அவளது சிந்தனை. பேரன் மிகுந்த புத்தி உள்ளவன். பாட்டியின் மீது மிகுந்த பாசம் கொண்டவன். எந்த பிரச்சனைக்கும் நடைமுறையில் ஒத்து போகக்கூடிய வகையில் தீர்வைசொல்பவன். அமுதா பாட்டியே பல முறை பேரனிடம்  தன் பிரச்சனைகளுக்கு உதவியை நாடியுள்ளார். ஆனால் இப்போது கல்யாண மகிழ்ச்சியில் இருக்கும் அவனிடம் தன் கஷ்டத்தை பகிர்ந்து கொள்ள முடியாது.  மனம் கடந்த கால நிகழ்வுகளை அசை போட ஆரம்பித்தது. தன் மீது உயிரையே வைத்திருந்த கணவர் சேகர். மகன் ஹரி, மகள் கோதை. இவ்வளவு தான் குடும்பம். பிள்ளைகள் இருவரிடமும் மிகுந்த பாசம் இருவருக்கும். இந்த பாசம் தான் இப்போது வினையாக வந்து முடிந்திருக்கிறது.  கால் ரொம்ப வலிக்கிறதா? நீ போய் படுத்துக்கொள் அமுதா, நான் t.v சிறிது நேரம் பார்த்து விட்டு வந்து படுக்கிறேன். நான் போய் விட்டாலும் நீ பிழைத்துக்கொள்வாய். உங்களுக்கு போதுமான சொத்து சேர்த்து வைத்துள்ளேன்.  என்ன உன் மகனால் தான் தொந்தரவு இருக்கும்.என்றார் சேகர். ...

இறைவன் என்ற ஒனறு உள்ளதா?

Image
 இந்த தலைப்பு ஆண்டாண்டு காலமாக மாபெரும் விவாதத்திற்கு ஒன்றான பொருளாக விளங்குகிறது. ஒவ்வொருவரும் அவரவர்க்கு உள்ள மனதின் போக்கிற்கேற்ப விளக்கம் கொடுக்கிறார்கள்.  சிலர் இருக்கிறார் என்கின்றனர், சிலர் இல்லை என்கின்றனர், மற்றும் சிலர் அது இயற்கை என்னும் சக்தியே என்பார்கள். வேறு சிலரோ அப்படியெல்லாம் ஒன்றுமில்லை , மனிதனே தான் தெய்வம் என்கின்றனர். இந்த விவவாதத்தில் இறுதியாக சொல்லப்பட்ட மனிதனே தெய்வம் என்னும் கூற்றை எடுத்துக்கொள்வோமா? மனிதனே தெய்வமெனில்  இயற்கையில் நடக்கும் நிகழ்வுகளை ஏன் மாற்றியமைக்கவோ, நிறுத்தவோ, முடிவதில்லை? உதாரணமாக, கிழக்கே உதிக்கும் சூரியனை  ஏன் மேற்கே உதிக்கவைக்க முடிவதில்லை? இல்லை பத்து மாதத்தில் பிறக்க வேண்டிய குழந்தையை ஒரு 15 அல்லது 20 மாதத்தில் பிறக்க வைக்க முடிவதில்லை? விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறியுள்ளது  என்பது மறுக்க முடியாத உண்மை. நிலவில் மனிதன் கால் பதித்து விட்டான். ஆனால் வரும் பேரழிவான சுனாமியை தடுக்க முடியுமா? ஆகவே,இந்த கூற்றை ஒத்துக்கொள்ள முடியாது. மனிதனுக்கும் அப்பாற்பட்ட , எளிதில் புரிந்துகொள்ள முடியாத சக்தி ஒன்று இந்த பிரபஞ்சத்தை தன்...

நட்பு

Image
  நட்பு என்பதற்கான இலக்கணம்:- இது சாதி, மொழி, இனம், ஆண், பெண், போன்ற எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட புனிதமான உறவு. இந்த உறவில் எதிர்பார்ப்புகள் இல்லை. ஆனால் விட்டுக்குடுத்தலும், தியாகமும் உண்டு. வள்ளுவனார் இதற்குரிய இலக்கணத்தை மிக சுருக்கமாக ஒன்றே முக்கால் அடியிலே அழகாக கூறியிருக்கிறார். உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. இடுக்கண் வரும் காலத்தில் மட்டுமல்லாது , வழி தவறி பாதை மாறும் போதும், இடித்தரைத்து, நல்வழிக்கு அழைத்து செல்பவனும் நல்லநண்பனே!   காதலும்,நட்பும் காதலுக்கும் , நட்பிற்கும் நூலிழை தான் வித்தியாசம். பொதுவாக எதிர்பாலினத்திற்கிடையே காதல் மலர்கிறது. ஆனால் நட்பு என்பதோ இனம், மொழி, நாடு,சமூக அந்தஸ்து போன்றவற்றை பார்த்து வருவதில்லை.  ஔவையார் அதியமானுக்கிடையே இருந்த நட்பு. பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழனுக்கிடையே, இருந்த நட்பு, ஒருவரை நேருக்கு நேர் பார்க்காமலேயே நேசித்து,நண்பன் உயிரிழந்தான் என்பதை கேள்வியுற்று தானும் வடக்கிருந்து உயிர் விட்ட கதையை படிக்கும் போது நெஞ்செல்லாம் உருகுகின்றது.  நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுகொடுக்கலாம்.ஆனால் எ...

இளைய சமுதாயமே! எங்கே செல்கிறாய்?

Image
 ஒரு நாட்டின் வளர்ச்சி, தேர்ச்சி, அந்நாட்டின் இளைஞர்கள் கையில் தான் உள்ளது, என்பதனை யாராலும் மறுக்கமுடியாது. ஆனால் இளவயது ஆண்களோ, பெண்களோ, இன்றைய கால கட்டத்தில் எப்படி உள்ளார்கள்? மூத்தோர்  அவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும் படி நடந்துகொள்கிறார்களா? இல்லையே! இன்றைய மூத்த சமூதாயத்தின் கவலையே இன்றைய இளைய சமுதாயத்தை பற்றியதே ஏ!இளைய சமுதாயமே! நீ எதை நோக்கி பயணிக்கிறாய்? எதை அடைய இந்த வேகம்? சொல்!  பயணம் :- உலக இன்பங்கள்  எத்தனை உள்ளதோ அவை யாவையும் துய்த்து விட வேண்டும் என்ற தவிப்பு. ஆடம்பர வாழ்க்கை வாழ அடங்கா ஆவல். இதற்காக உற்ற உறவுகளை விட்டு விட்டு, பிறந்த நாட்டையும் துறந்து தொலை தூரம் செல்வதற்கும் தயாரே!  என்னப்பா இது கொடுமை! விளக்கு வெளிச்சம் விட்டில் பூச்சியை ஈர்ப்பது போன்றே , இன்றைய புது ,புது கண்டுபிடிப்புகள் இவர்களை ஈர்க்கிறது? இது எப்படி காரணமாகும்? என்ற உங்கள் கேள்வி என் காதில் விழுகிறது.  இன்று மிதி வண்டியை ஓட்டுபவர்கள், பைக்கின் வேகத்தை கண்டு, அதை வாங்க ஆசை கொள்கிறார்கள்.ஆமாம் , இதிலென்ன தப்பு? தப்புதான்.நேரத்தை மிச்சப்படுத்த நீண்ட தூரம் செல்வதற்கு ...

பிள்ளை வளர்ப்பு

Image
  இந்த மண்ணில் பிறக்கும் எல்லோரும் நல்லவரே! சரியில்லாத வளர்ப்பினாலும்,  தகுதியில்லாத நட்பினாலும், சூழ்நிலையாலுமே, ஒருவன் கெட்டவனாகிறான்.  வளர்ப்பு:- நாடு நலமாக இருக்க வேண்டுமானால், சமுதாயம் சிறந்ததாக இருக்க வேண்டும். சமுதாயம் சிறக்க, அதன் அங்கமான குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டும். இதற்கு குடும்ப உறுப்பினர்கள் நற்சிந்தனையோடு இருக்கவேண்டும். ஆகவே ஒரு நாட்டின் பெருமை குடிமகனின் கையில் தான் உள்ளது. நன்மக்கள் பெற்று வளர்ப்பதில் தான் பெற்றோர்கள் பெருமை அடங்கியுள்ளது. மக்களை பெற்றவர்கள் பெருமை படுவதில் மட்டும் நின்று விடுவதில்லை,  பெற்றோர்களை பார்த்து மற்றவர்கள் இவன் தந்தை எந்நோற்றான் கொல் எனும் சொல் என்பதற்கேற்ப பெற்றோர்களும்  நடந்துகொள்ள வேண்டும்.  பிள்ளை வளர்ப்பு:-  1)பிள்ளை கர்பத்தில் வளரும் போதே எப்படி ஊட்டமான உணவினை உண்கிறாறோ, அப்படியே நல்ல விஷயங்களை மட்டும் கர்பத்தை சுமக்கும் தாய் கேட்டு உள் வாங்க வேண்டும். உ.ம்:- பிரகலாதன் கதை. 2) குழந்தை பருவத்திலிருந்தே நல்ல ஆன்மீககதைகளையும்,நீதிக்கதைகளையும்  அறிமுகப்படுத்த வேண்டும். 3) நேர்மறை சுற்றுசூழல், நே...

ஊழ்

Image
  ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்.    ஊழ் என்பது நாம் முற்பிறவிலோ அல்லது இப்பிறவியிலோ செய்த பாவங்களின் பயன். இது முன்னோர்கள் செய்ததாக கூட இருக்கலாம். அதனால் தான் பெரியவர்கள் செய்யும் பாவம் பிள்ளைகளை சேரும் என்கிறார்கள். இதை  அனுபவித்தே ஆக வேண்டும். இது தெய்வத்தின் கருணையால் குறையவோ, அல்லது எதிர் கொள்ளும் சக்தியோ கிடைக்குமே தவிர முற்றிலும் ஒழிந்து போகவே போகாது. போன பிறவியில் சேர்த்த பாவங்களும் இப்பிறவியில் செய்யும் பாவங்களும் , இல்லை இனி செய்யப்போகும் பாவங்களால் தான் நாம் பல பிறவிகளை எடுத்து மேன்மேலும் துன்பப்படுகிறோம்.  நம் பாவ வினைகள் தான் மிகவும் சக்தி வாய்ந்தது. அதுவே எல்லாவற்றுககும்  முன்னதாக நின்று துன்பத்தை தர வல்லது. யாரால் ஊழை வெற்றி பெற முடியும்:- யார் ஒருவர் நல்ல செயல்களை செய்து,  ஓயாது உழைக்கிறாரோ அவருக்கு முன் வி னை நல்லதே செய்யும். தீ வினை செய்வோருக்கு தீமையே விளையும். நல்வினை, தீவினை என்றால் என்ன? நல்வினை செய்வோர் உடலால் மட்டும் நன்மை செய்வதில்லை,அவர்கள் உள்ளத்தாலும் மற்றவர்களுக்கு தீமை நினைக்காததோடு , மற்றவர்கள் நன...