ஒரு தாயின் கதை
அன்று திங்கட்கிழமை.வழக்கம் போல இறைவனுக்கு அபிஷேகம், ஆராதனைகளை தன்னால் முடியாத போதிலும் மிகவும் சிரமபட்டு முடித்து விட்டு நிமிர்ந்த போது உடம்பெல்லாம் தெப்பமாக நனைந்திருந்தது.பத்மா தன் அவலநிலையை நினைத்து கண்ணீர் கூட விட முடியாது , தப்ப்புன்னு இருக்கையில் சாய்ந்தார். தன் இந்த நிலைக்கு என்ன காரணம் என்பதற்கான கேள்விகள் மனதில் ஓடியது.
கர்மா,கர்மா என்கிறார்களே, அது தான் இந்த அவல நிலைக்கு காரணமான? சிந்தனை கடந்த காலத்தை நோக்கி திரும்புகிறது. தன் இளமை காலத்திலிருந்தே பிறர் சொல்லும் கூற்றை அப்படியே நம்பும் குணமுடையவள்.பிறர் சொல்லுவது தவறாகவே இருந்தாலும்,அவர்கள் தன்னைப்பற்றி தவறாக நினைத்து விடுவார்களோ என்று நினைத்து தன் மனதிற்குள் பூட்டி வைத்து விடுவாள். இந்த குணம் தானா மற்றவர்கள் அவளை பலியாடாக நிறுத்தி வைத்துஉள்ளது.? தெரியவில்லை.
தான் பெற்றது நன்றாக வாழ வேண்டும் என்று நினைத்து,தன்னிடமிருந்த எல்லாவற்றையும் கொடுத்தது தவறென்றால் தாய்ப்பாசம் என்பதின் விளக்கம் யாது?.
ஒருமுறை ஏமாறலாம் அல்லது இருமுறை ஏமாறலாம்,என்ன அடுத்தடுத்தா ஏமாறுவார்கள் என்று கேட்பவர்களுக்கு ஒரு கேள்வி ? சிக்கலான சந்தர்ப்பங்களில் வேறு வழியில்லை என்று நிற்கும் போது,எப்படியோ இனியாவது நன்றாக வாழட்டும் என்று தானே ஒரு தாய் நினைப்பாள்? தான் பெற்று வளர்த்தது தன்னிடமே நாடகமாடுகிறது என்றா சந்தேகப்படுவாள்?
பணம் தான் பாசத்தை விட பெரியதா? பாசம் வேண்டாம், பணம் தான் பெரியது என்று நினைப்பர்களிடம் பாசத்தினால் தெரிந்தே உதவுவது ஏற்றுக்கொள்ளதக்கதா?
இந்த எல்லா கேள்விகளுக்கும் ஒரு நாள் இல்லாவிட்டால் ஒருநாள் நிச்சயமாக பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் , தான் வணங்கும் தெய்வத்தை நினைக்கிறாள். ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது, யாரும் தனக்காக துணையாக நின்று தீர்மானமான முடிவை எடுக்க உதவ மாட்டார்கள். தனக்கான முடிவை தானே தான் எடுக்க வேண்டும். அதற்கு நிச்சயமாக இறைவன் ஒருவனே கை கொடுப்பான். மனிதர்களை நம்பாதே , தெய்வத்தை நம்பு, அவன் ஒரு நாளும் கை விட மாட்டான் என்ற நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் தெளிவுடனும், உறுதியுடனும் புது மனுஷியாக எழுந்து நின்றாள்.


Comments
Post a Comment