குரங்கு குட்டியும் பூனை குட்டியும்
பக்தியில் பலவகை இருந்தாலும் பகவான் இராமகிருஷ்ணரின் பக்தியோ சற்று வித்தியாசமானது. பாமர மக்களுக்கும் புரியும் வகையில் சின்ன,சின்ன கதைகள் மூலமாக விளக்குவார்.பக்தியை இரண்டு வகையாக பிரிக்கிறார். 1) குரங்கு குட்டி பக்தி 2) பூனை குட்டி பக்தி குரங்கு குட்டி தாயின் வயிற்றை இறுக பற்றிக்கொள்கிறது. தாய் குரங்கு கிளைக்கு,கிளை தாவினாலும் சரி,நடந்தாலும் சரி அதன் பிடியை விடுவதே இல்லை.அதைபோலத்தான் இவ்வகை பக்தனும்.எவ்வளவுதடைவந்தாலும்,துயரங்கள் வந்தாலும்சரி ,குரங்குகுட்டியை போன்றே இவன் இறைவனின் மேலுள்ள நம்பிக்கையை விடுவதே இல்லை அபிராமி பட்டர் நாயன்மார்கள்,ஆழ்வார்களை போல. நீயல்லால் எனக்கு யார் கதி? கல்லுடன் கட்டி கடலில் பாய்ச்சினும் சொல்லும் நாமம் நமச்சியாயவே! இறைவனின்நாமத்தை கெட்டியாக, குரங்கு குட்டி தாயின் வயிற்றை இறுக பற்றிஇருக்கும் படி , கொண்ட உறவுகள் கை விட்டு. உன்னை வீதியில் தள்ளினாலும் மனம் தளராது சிந்தையை அவன் தாளில் வைத்திருப்போர்க்கு துயர் தான் பாதிக்குமா? தாய் குரங்கை பற்றிய குட்டிக்கு தான் கீழே விழமாட்டேன் என்று நம்புவதை போன்றே இறை சிந்தனையில் இருப்போர்க்கு இறைவன் காப்பாற்றுகிறான். பூனை ப...