பணம் படுத்தும் பாடு
அமுதா ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி இருந்தாள். தன் ஒரே பேரனுக்கு விடிந்தால் கல்யாணம். மனம் விச்ராந்தியாக கிடக்க என்ன காரணம்? இதுதான் அவளது சிந்தனை. பேரன் மிகுந்த புத்தி உள்ளவன். பாட்டியின் மீது மிகுந்த பாசம் கொண்டவன். எந்த பிரச்சனைக்கும் நடைமுறையில் ஒத்து போகக்கூடிய வகையில் தீர்வைசொல்பவன். அமுதா பாட்டியே பல முறை பேரனிடம் தன் பிரச்சனைகளுக்கு உதவியை நாடியுள்ளார். ஆனால் இப்போது கல்யாண மகிழ்ச்சியில் இருக்கும் அவனிடம் தன் கஷ்டத்தை பகிர்ந்து கொள்ள முடியாது. மனம் கடந்த கால நிகழ்வுகளை அசை போட ஆரம்பித்தது. தன் மீது உயிரையே வைத்திருந்த கணவர் சேகர். மகன் ஹரி, மகள் கோதை. இவ்வளவு தான் குடும்பம். பிள்ளைகள் இருவரிடமும் மிகுந்த பாசம் இருவருக்கும். இந்த பாசம் தான் இப்போது வினையாக வந்து முடிந்திருக்கிறது. கால் ரொம்ப வலிக்கிறதா? நீ போய் படுத்துக்கொள் அமுதா, நான் t.v சிறிது நேரம் பார்த்து விட்டு வந்து படுக்கிறேன். நான் போய் விட்டாலும் நீ பிழைத்துக்கொள்வாய். உங்களுக்கு போதுமான சொத்து சேர்த்து வைத்துள்ளேன். என்ன உன் மகனால் தான் தொந்தரவு இருக்கும்.என்றார் சேகர். ...