Posts

Showing posts from June, 2022

நம்மில் ராமாயணம்

Image
  ராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் 1)ராமர்--பரமாத்மா,இவ்வுலகில் ஒருவன் எப்படி வாழ வேண்டும் என்பதனை வாழ்ந்துகாட்டிய மகான்.  2)சீதை--ஜீவாத்மா 3)ராவணனன்---மனம் 4)அனுமன்--------குரு. சரி, இக்கதாபாத்திரங்கள் எவ்வாறு நம்மோடு பொருந்தும்? ராவணனின் மனம் ஆசையால் அலைகழிக்கப்படுகிறது.ராவணனுக்கு, பலர் பிறன் மனையை விழைவது தவறு,சிறை பிடித்தது தவறு என்று எடுத்யுரைகின்றனர். கேட்டானா? இல்லையே! மனதுள்ளே இருந்த  ஆசை, ஆங்காரமாய் எழுந்து நின்று , உற்றார் ஒவ்வொருவரையும் இழக்க வைக்கிறது.  ஜீவாத்மாகிய நம் மனமும்,கட்டுப்பாட்டை இழந்து ஆசை வலையில் அகப்பட்டு இங்கும் அங்கும் அலைகழிக்கப்பட்டு துன்புறுகிறது. ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் தகுதியுள்ள ஒருவன் இலட்ச ரூபாய்க்கு ஆசைபடுகிறான்.அதற்காக போகாத வழிக்கெல்லாம் போய் அல்லலுற்று இருப்பதையும் இழந்து தவிக்கிறான்." நான் அதிர்ஷ்டமில்லா பாபி,எனக்கு மட்டும் ஏன் இந்த கஷ்டம்" என்று அரற்றுகிறான். நாம் எல்லோரும் இறைவனின் வீட்டில் வாடகைக்குஇருப்பவர்கள் தான்.வந்தவேலை முடிந்தவுடன்,புறப்படும்போது,காதருந்த ஊசியைக்கூடநம்முடன் கொண்டு செல்ல முடியாது,என்பதை எல்லோரும...

பெண்

Image
பெண்ணின் நிலை:- பெண்ணின்நிலை சமூகத்தில் நான்காக பிரிக்கப்படலாம் . 1)வேத காலத்தில் 2) இடைபட்ட காலத்தில் 3) 19-ம்நூற்றாண்டில் 3) இன்றைய காலத்தில் வேத காலம்:- பெண்கள் அறிவிற்சிறந்தவர்களாக , ஆண்களுக்கு நிகராக,அவர்களுடன் சரிசமமாக வாதம் செய்யும் உரிமையையும் , தகுதியையும் பெற்றிருந்தனர். கணவனிடம் இம்மைக்குஉதவும் செல்வத்தை விட மறுமையில் உதவும் ஞான செல்வமே பெரிது என வேண்டி பெற்றவள் மைத்ரேயி என்ற மங்கை.ஆண்களும் தயங்கிய கூட்டத்தில் தைரியமாக எதிர்த்து வாதாடியவர் கார்கி என்ற காரிகை.பெண்கள் வேத காலத்தில் இரு பிரிவுகளாக இருந்தனர். 1)திருமணத்திற்கு முன்பாக வேதத்தை கற்றவர். 2)வேதம் கற்றுக்கொள்வதற்காகவே திருமணம்செய்துக்கொள்ளாதவர்கள். வேதத்தை கற்றதனால் அந்த காலத்தில் , நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும்.... உடையவர்களாக பாரதியின் புதுமை பெண்ணாக திகழ்ந்தனர்.அவர்கள் தேவியின்அம்ஸமாகவேகருதப்பட்டனர். இடைபட்ட காலம்:- அந்நியர்படையெடுப்பு கலாசாரமாற்றம்தலைதூக்கியகாலம்.இக்காலகட்டத்தில் கூட வேதம் கற்பதற்கு உரிமை மறுக்கப்பட்டதே ஒழிய மற்ற எந்த உர...

நமசிவாய

Image
மனிதனுக்குஇருதயம்எவ்வளவுமுக்கியமோஅவ்வளவு முக்கியம் இந்த நமசிவாய மந்திரம். மந்திரங்களிலேயே தலையாயது. அதனால் தான் மணிவாசகரரும் சிவபுராணத்தை நமசிவாய வாழ்க என்று தொடங்குகிறார். நமசிவாய வேறு சிவன் வேறு அல்ல. இறைவனை விட இறை நாமத்திற்கு மகிமை அதிகம். இந்த பிரபஞ்சத்தில் உள்ள  அதிர்வலைகள் இம்மாதிரியான மந்திர ஓசையை கிரஹித்து நல்ல நேர்மறை எண்ணங்களை நம் சிந்தையில் சேர்க்கின்றன. நேர்மறை எண்ணங்கள் வளர,வளர ஆன்மா சுத்தி யடைந்து யாருக்கும் தீங்கு செய்யா மனநிலை வளர்கிறது.நன்மையே செய்யும் மனநிலைவளர்ந்தால்,நம்மனமஅமைதியடைகிறது. அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை விட பெரிய சொத்து ஒன்றும் இவ்வுலகில் கிடையாது.ஆகவே கிடைத்தற்கரிய பெரிய சொத்துஇம்மகாமந்திரத்தில்தான்அடங்கியுள்ளது. நமசிவாயத்தைஉருவேற்றுவதுஎங்ஙனம்? நமசிவாயத்தை உண்ணும் போதும், உறங்கும்போதும்,நின்றாலும்,நடந்தாலும்,மென்றாலும்துயின்றாலும்,இடைவிடாது ஜெபிக்க,ஜெபிக்க அது நம் உணர்வில் ஊறி,ஊறி எந்த வேலை செய்துக்கொண்டிருந்தாலும் அந்நாமம் நம் நாவில் ஒட்டிக்கொண்டுவிடும்.  அவன் மலர் பாதம் ஒன்றே நம் நெஞ்சில் நிலைத்து நின்றுவிடும். பலன்கள்:- 1)யார் நம்மை அலட...