அலகிலா விளையாட்டுடையான்
உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டு உடையான் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே (கம்பராமயணம் பாயிரம்)
இறைவனும் தாயும் தம் பிள்ளைகளை பேணுவதில் ஒத்துயிருக்கிறார்கள்
ஆம், சிந்தித்து பாருங்கள். ஒரு தாய் தன் குழந்தைக்கு எப்படியெல்லாம் விளையாட்டு காட்டி மகிழ்விக்கிறாள். பொய்கோபம் காட்டுகிறாள்.குழந்தை அதை உண்மை யென்று அழும் போது வாரியணைத்து உச்சி முகர்கிறாள்.கேட்கும் பொருளை மறைத்து போக்கு காட்டி Surpriseஆக கொடுத்து அதன் மனம் மகிழ்வதைக் கண்டு இவள் மகிழ்கிறாள். தடம் மாறும் போது தண்டிக்கிறாள். நல்ல வாழ்க்கைக்கு வழிகாட்டுவதும், நன்றாக வாழும் போது மகிழ்வதும் அவளே தான்.
படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல்என்றஐந்தொழில்களையும் செய்கிறாள்.
இந்உலகமே ஆண்டவனின் விளையாட்டிற்காக படைக்கப்பட்டதுதானேஉயிர்களைபடைக்கிறான்,காக்கிறான்,பின் அவனே அதை அழித்து தன்னிடமே சேர்த்துக்கொள்கிறான்.இது எப்படி இருக்கிறதுஎன்றால்குழந்தைகள்மண்வீடுகட்டிவிளையாடுகிறது,விளையாடிசலித்தவுடன்அதேதன் காலால் எட்டியுதைத்து கலைத்து விடுகிறதல்லவாஅதுபோலத்தான்இறைவனின்திருவிளையாடல்களும்.அறிவுஎன்பதைநமக்குகொடுத்து தன் விளையாட்டிற்கு பயன் படுத்துகிறான்.
எப்படி?நல்வழியில்பயன்படுத்தும்போதுஅதற்குண்டானபரிசுகளைகொடுக்கிறான்,அதையேதீயவழியில் உபயோகித்தால் தெய்வம் நின்று கொல்லும்.
சரி,தெய்வம்எப்படியெல்லாம்நம் வாழ்க்கையில் விளையாடுகிறது என்று பார்ப்போமா!
ஒருவனுக்குபட்டம்,பதவி,பணம்எல்லாம் வேண்டியஅளவு கிடைக்கிறது. இந்த மூன்றும் என் உழைப்பிற்கு கிடைத்த பரிசு. இதை ஏன் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கவேண்டும்? என்றுஎண்ணினால்,ஒரேநிமிடத்தில் அவையெல்லாம்கையைவிட்டுபோகசெய்துவிடுவான்.
பணம் என்பது இறைவனின் சொத்து.அதை நம்மிடம்கொடுத்திருப்பது,அதைநம் சுயநலத்திற்காகஉபயோகபடுத்துவற்காக அல்ல. மற்றவர்களுக்கும் அதை பயன் படுத்துவதற்காகத்தான். நாம் ஆண்டனின் கையில் உள்ள ஒரு கருவியே! என்பனை உணர்ந்து செயல் படவேண்டும்.
இதை விடுத்து, தன்னை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களைபேணாததுமட்டுமல்ல,அவர்களின்பாசத்தையும்,நேசத்தையும்,நம்பிக்கையையும் தனக்குசாதகமாக்கி,அவர்களின்வாழ்வாதாரத்தையேகேள்விகுறியாக்கும்மக்கள்தான் எத்தனை,எத்தனை!இதுவும்அவனின் விளையாட்டு தான்.
இப்படி விளையாடி விளையாடி,பலபிறவிகளை கொடுத்து, அவர்களின் தவறுகளை உணர வைத்து,தன்னிடம் சேர்த்துக்கொள்கிறான்.
ஆதலால் நாம் ஒவ்வொருவரும் கடவுளின் அங்கங்களே!
அஹம் பிரம்மாஸி!

Comments
Post a Comment