கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
கூட்டு அமைப்பிற்கு எப்போதும் வலிமை அதிகம். உதாரணத்திற்கு தனிநபர் கோரிக்கைகள் எந்த இடத்திலும் எடுபடாது. அதுவே ஒரு கூட்டு அமைப்பான சங்கத்தின் மூலம் அணுகினால் பலன் விரைவில் கிட்டும். கூட்டு பிரார்த்தனை செய்தால் ,அது இறைவனை உடனே சென்றடைகிறது என்பது கண்கூடான உண்மை. அது போலவே கூட்டு குடும்பத்திலும் நன்மைகள் அதிகம் இல்+அறம்= இல்லறம் வீடு என்பது வெறும் கட்டிடம் தான்.அதற்கு உயிரோ,உணர்ச்சியோ கிடையாது. ஆனால் இல்லம் என்பது அதில் வசிக்கும் மனிதர்களை குறிக்கிறது. அந்த இல்லம் எப்படி இருக்க வேண்டும் என்றால் அறத்தை சார்ந்து இருக்க வேண்டும். இல்லம் என்பதை அதில் வாழும் குடும்பத்தினரை தான் குறிக்கிறது. வசிக்கும் வீடு என்பது அதில் வாழும் குடும்பத்தினரின் ஒரு அடையாளம். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா,அக்கா,தங்கை, அண்ணன், அண்ணி, தம்பி சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா,மாமா, அத்தை இவர்களெல்லாம் சேர்ந்ததே குடும்பம். கடந்த காலத்தில் குறைந்த பட்சம் மூன்று தலைமுறைகளாவது ஒரே வீட்டில் வசிக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இன்று காலத்தின் கட்டாயத்தில தனி தனி வீடுகளில் வசிக்க வேண்டியுள்ளது. இத...