தவம் என்பது யாதெனில்........
தவம் என்பது தனியாக ஓர் இடத்தில் அமர்ந்து இறைவனிடத்து ஒரு காரியம் நிறைவேற்றுமாறு வேண்டுவது மட்டும் தவமல்ல. ஒரு குறிக்கோளை அடைய , விடாது செய்யும் முயற்சி கூட தவமேயாகும். இது மூன்று வகைப்படும்.
1) காமிய தபஸ்:- துருவன் செய்தது,காரிய தபஸ். தான் உயர் நிலை அடைய செய்தது. இது சுயநலமானது. தனக்காக செய்வது.
2)அஸூர தபஸ்:- தன் உடலை வருத்தி செய்வது,இராவணன்,ஹிரண்யகசிபு போல.
3)தெய்வீக தபஸ்:- வால்மீகி,திருநாவுக்கரசர்,விவேகானந்தர், போல இந்த சமுதாயத்திற்காக,அதன் நன்மைக்காக செய்வது.
இதில் மூன்றாவது வகை தபஸ் தான் எல்லாவற்றிலும் சிறந்தது.தன் நலம் கருதாது பிறர் நலம் கருதி செய்யும் தொண்டே சிறந்த தவம். ஏனென்றால் இவ்வுலகை படைத்த இறைவனின் மனம் மகிழ இவ்வுலகம் சிறப்புடன் வாழ தொண்டு செய்கிறார்கள் அல்லவா!
தவம் என்பது உடல் ,மொழி, உள்ளத்தோடு சம்பந்தப்பட்டது. இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது.
உடலின் செய்யும் தவம்:- எவ்வளவு கடினமான காரியமாக இருந்தாலும் ,உடல் சோர்வடைந்தாலும், அதை பொருட்படுத்தாது, உடலை வருத்திக்கொண்டு எடுத்த காரியத்தைமுடிப்பது.உண்ணாநோன்பு,பூ மிதித்தல்,கிரி வலம் வருதல்,போன்றவற்றை இறை சிந்தனையோடு செய்தல் ஆகியவையும் இதில் அடங்கும். அன்னை சாரதா தேவியார் பஞ்சாக்னி தவம் செய்தார். நான்கு புறமும் அக்னியை மூட்டி மேலே சூரியனுடைய வெப்பம் திகிக்க நடுவில் அமர்ந்து தவம் செய்தார். எத்தனையோ முனிவர்களும் , ரிஷிகளும் உண்ணாமலும்
உறங்காமலும், ஒற்றை காலில் நின்று, பாம்பு புற்று அவர்களின் மேல் கட்ட , தவம் செய்து வேண்டிய வரங்களையெல்லாம்பெற்றார்கள்
என்பதனை இதிகாசங்கள் வாயிலாக அறிகிறோம்.
மொழி:-
மொழி என்பது மனிதர்களின் முக்கியதகவல் தொடர்பு கருவி ஆகும்
நாம் பிறரிடம் பேசும் போது இனிமையாக பேச வேண்டும்.
இனிய வார்த்தைகள் எத்தனையோ இருக்க, பிறர் மனம் வருந்தும் படி பேசுதல், நல்லசுவையான பழங்கள் இருக்க, பழுக்காத காய்களை பறிப்பது போன்றது.
தவறு செய்தவர்களை தட்டிக்கேட்க கூடாதா?கேட்கலாம்! கண்டிக்கும் சொற்களையும், அவர்கள் தம் தவற்றினைஉணரும் வகையில்
பேச வேண்டும். மிரட்டும் தொனியில் பேசுவதால் மட்டும் பலன் கிடைக்குமா? நம் உள்ளத்து அமைதிதான் கெடும். திருந்துவதும் திருந்தாதும் அவர்களின் வினைப்பயன் என்று விட்டு விட வேண்டும்.
உங்களிடம் யாராவது எதைப்பற்றியாவது கருத்து கேட்கும் போது அது மனதிற்குப் விரும்பாத விஷயமாக இருந்தால் மௌனமாகிய இருப்பதும் ஒரு வகை தவமே! மேலும் நம் வயது ஏற, ஏற , நம் பேச்சினை சுருக்கிக் கொள்ளுதல் நலம். வாரத்தில் ஒரு நாளாவது மௌன விரதம் இருப்பது சால சிறந்தது
மொழியில் சிறந்த தவம் பொய் பேசாது இருத்தல்.
உள்ளம்:-
உள்ளம் என்னும் கோயிலில்,
பொய்மை புகுந்தால்,
உண்மை அழியும்,
உறவு அழியும்,
வாழ்வுஅழியும். ஆம் நீ உண்மை பேசாதிருந்தால் உன்
பொய்மை புகுந்தால்,
உண்மை அழியும்,
உறவு அழியும்,
வாழ்வுஅழியும். ஆம் நீ உண்மை பேசாதிருந்தால் உன்
.உடல் மொழியே காட்டி கொடுத்ததுவிடும்
பொய் பேசுவர்களிடம் உறவுகள் எட்டியே நிற்பார்கள். யாரும் உன் பேச்சை நம்பாதிருக்கும் போது உனக்கு பக்கபலமாக நிற்கவோ,தேவைபடும் போது உதவி செய்யவோ யார் வருவார்கள்?சொல்லுங்கள்.
வாக்கு சுத்தம் இல்லாவிட்டால் செய்யும் எந்த தொழிலும் செழிக்காது.அரசியலில் கூட கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த தேர்தலில் ஜெயிக்க முடியாது.
பொய் பேசுபவர்களால் எதிர் இருப்பவர் களின் கண்களை நேருக்குநேர் பார்த்து பேசவே முடியாது.
நமக்கு கஷ்டத்தை கொடுத்தவருக்கு துன்பம் வரும் போது அவர்களுக்குகிடைத்த தண்டனை என்று மனம் திருப்தி கொள்ளாதிருப்பதும்,
மற்றவர்கள் புகழ்ந்து ,அல்லது இகழ்ந்து பேசும் போது அதை மனதில் ஏற்றிக்கொள்ளாது நடுநிலையில் நிற்பதும் ஒரு வகை தவமே!!!
சுருக்கமாக சொல்லப்போனால் தவம் என்பது ஒருவரின் ஆன்மீக முன்னேற்திற்காக, மனம்,மொழி,மெய் இவற்றின் வழி செய்யப்படும் செயல்களாகும். அந்த செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்றால்,
1)ஒருவரின்துன்பத்தைபொறுத்துக்கொள்ளுதல்
2)பிறர்க்கு தீங்கு செய்யாதிருத்தல்.
தவத்தின் மூலம் ஒருவரின் ஆன்மீகம் வளர்ச்சியடையும்.
மனம் அமைதியடையும்.
கடமை செய்தலால், எதிர்பார்ப்புகள் குறையும்.
நிறைவான வாழ்க்கை கிடைக்கும்.
ஆகவே,நம்மால் உள்ளத்தாலோ,உடலாலோ,மொழியாலோ, எது நம்மால் முடியுமோ,அவற்றின் வழி தவத்தை மேற்கொள்வோமா!!
Comments
Post a Comment