பிறவிகள் ஏன்?
பிறவி எடுப்பது என்பது நம் கையில் தான் உள்ளது. ஆனால் நம்மில் பலரும், கடவுள் கொடுப்பது தான் பிறவி என்று எண்ணிக்கொண்டுள்ளோம். நாம் என்னவாக,தாவரமாகவோ, விலங்காகவோ மனிதராகவோ, பிறப்பது என்பது தான் இறைவன் எடுக்கும் முடிவு. இதில் நம் விருப்பம் ஒன்றுமில்லை . நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்பத்தான் கடவுள் பிறப்பை முடிவு செய்கிறான். நாம் எத்தகைய பிறவி எடுக்க வேண்டும் என்பதை நம் முப்பிறவியில் நாம்செய்த செயல்களை வைத்துதான் இறைவன் முடிவெடுக்கிறார். இதை தான் கர்மவினை என்கிறார்கள் கர்ம வினையை பற்றி என் சிந்தனை:- படைக்கும் கடவுளுக்கு தானே, தான் படைத்தவற்றின் மேல் ஆளுமை இருக்கும்? அப்படியிருக்கும் போது மனிதனை நற்செயல்களை செய்ய வைத்து சந்தோஷத்தை மட்டும் கொடுக்கலாமே! பின் ஏன் நல்லதல்லா செயல்களையும் செய்ய வைத்து பிற பிறவிகளில் துன்பத்தை கொடுக்கிறான்?. இது நியாயமா?. சிந்தித்தேன். ஒரு தெளிவும் அவனருளால் கிடைத்தது. நவ நிதிகளை இறைவன் நாம் பிறக்கும் போதே நம்முடன் வைத்து அனுப்புகிறான்.அதில் ஒன்று தான் அறிவு. அதை (கஸ்யப நிதி)சரியான முறையில் பயன்படுத்துவது நம் கை...