கர்மா
திணை விதைத்தவன் திணை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்--என்பது எல்லோருக்கும் தெரிந்த பழமொழி. ஆம்! நாம் என்ன விதைக்கிறோமோ அது தானே விளையும். சோளத்தை விதைத்து விட்டு நெல்லை அறுவடை செய்ய நினைத்தால் நடக்குமா? அது போலத்தான் நாம் செய்யும் வினைப்பயன்களும். மறுபிறவியில் நம்பிக்கை உள்ளதோ, இல்லையோ, இந்த பிறவியிலேயே பல நிகழ்வுகளை நாம் கண்கூடாக பார்க்கிறோம். அரசன் அன்றே கொல்வான் .தெய்வம் நின்று கொல்லும் . ஆம்!நாம் செய்யும் தவறுகள்தெரியவந்தால் அரசிடமிருந்து தண்டனை உடனே கிடைத்து விடும். ஆனால் தெய்வத்திடம் எந்த தவறையும் மறைக்க முடியாது. செய்த தவறுக்கானகூலியை பெற்றே ஆக வேண்டும். கர்மாவும் மனமும்:- கர்மாவிற்கும் மனதிற்கும் நெருங்கிய தொடர்புண்டு. அது எப்படி? மனம் ஆசையின்படி நடக்கிறது. இன்று நான் பலருக்கும் பயன்படும் படியாக, ஒரு கல்விக்கூடத்தையோ, அல்லது சமுதாய கூடத்தை கட்ட வேண்டும் என்று நினைத்தால், அது நல்ல கர்மா. பக்கத்து வீட்டுக்காரன் சொத்தையும் அபகரிக்க வேண்டும் என்று நினைத்தால் அது கெட்ட கர்மா. இரண்டு செயல்களும் மனதில் ஏற்படும் ஆசையே. அந்த ஆசையின் படி மனம் செயல்படுகிறது...