மரணத்தை மறந்த மனிதன், மனிதனை மறக்காத மரணம்
மரணம் என்பது என்ன? இவ்வுலகில் கொடுக்கும் எதையும் இங்கேயே இருக்க விடுவதில்லை இறைவன். கொடுக்கும் இறைவன், தான் கொடுத்தவற்றை தானே திரும்ப எடுத்துக்கொள்கிறான். இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. இருந்தும் ஏன் இந்த ஓட்டமப்பா! தன் தேவைக்குமட்டுமல்ல த ன் தலைமுறைக்கும் சேர்த்து வைக்கத்தான் இந்த ஓட்டம். மனிதன் மரணம் நிச்சயம் என்று தெரிந்தே அதை மறக்கிறான். அதை தள்ளி போட முயற்சித்து கடவுளிடம் தோற்கத்தான் செய்கிறான். காதருந்த ஊசியும் கடைவழி வாராது காண். நீ இறந்த பின் உன் உடலை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இடுகாட்டிற்கு அனுப்பத்தான் விரும்புவர். சேர்த்து வைத்த அல்லது சம்பாதித்த எதுவுமே உன்னுடன் வரப்போவதில்லை. மரணபயம் மரணம் என்பது தவிர்க்கவோ, தள்ளிப்போடவோ முடியாது என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்தாலும்,நம்மில் எத்தனை பேர் பயமில்லாத மரணத்தை எதிர்கொள்கிறோம்? மரண பயம் என்பது மரணத்தை விட கொடியது.. இந்த பயத்தை போக்க என்ன செய்யலாம் என்பது தான் விவாதத்திற்குரியது. மரணம் என்பது எப்படி இருக்கும் என்பதற்கு விடை திருக்குறள் கூறுகிறது. உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போல...