மனம் ஒரு குரங்கு
ஆம்!இது முற்றிலும் உண்மை தானே! குரங்கின் இயல்பு பற்றி எல்லோருக்கும் தெரியும். மனமும் அவ்வாறே ஒரு நினைப்பில் நிலைத்து நிற்பதில்லை. இது நம்மை போன்ற சாதரண மக்களுக்கானது. இதே, சாதனையாளர்களுக்கு பொருந்தாது. அவர்களின் சாதனைக்குவேர் , நிலைத்த புத்தியே. அதனால் தான் சுவாமி விவேகானந்தர் போன்ற அருளாளர்கள் இறைவனிடம், பொன், பொருளை கேட்பதில்லை. மாறாக,வைராக்கியமான நிலைத்த புத்தியினை தான் வேண்டுகின்றனர். மனம் என்றால் என்ன? மனம் என்பது நம் எண்ணங்களே ! இதை மற்ற உறுப்புகளை ,புறக்கண்ணால் பார்க்கும்படி இல்லை, உணரத்தான் முடியும் மற்றவர்கள் அடுத்தவர்களின் மனதை படிக்க முடியுமா என்றால் , முடியும். யாருக்கெல்லாம் முடியும? யார் ஒருவரின் மனம் கள்ளம்,கபடு இல்லாது செம்மையாக உள்ளதோ, அவர்களுக்கு மற்றவர்களின் மனபோக்கை அறிய முடியும். அதனால் தான் அகத்தியர்கூறுகிறார். மனமது செம்மையானல் மந்திரங்கள் ஜெபிக்க வேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாம் மனமது செம்மையானால்வாசியை நிறுத்த வேண்டாம் மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே. என்று கூறுகிறார். மனம் குற்றமற்...