இளைய சமுதாயமே! எங்கே செல்கிறாய்?


 ஒரு நாட்டின் வளர்ச்சி, தேர்ச்சி, அந்நாட்டின் இளைஞர்கள் கையில் தான் உள்ளது, என்பதனை யாராலும் மறுக்கமுடியாது. ஆனால் இளவயது ஆண்களோ, பெண்களோ, இன்றைய கால கட்டத்தில் எப்படி உள்ளார்கள்? மூத்தோர்  அவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும் படி நடந்துகொள்கிறார்களா? இல்லையே!

இன்றைய மூத்த சமூதாயத்தின் கவலையே இன்றைய இளைய சமுதாயத்தை பற்றியதே

ஏ!இளைய சமுதாயமே! நீ எதை நோக்கி பயணிக்கிறாய்?

எதை அடைய இந்த வேகம்? சொல்! 

பயணம்:- உலக இன்பங்கள்  எத்தனை உள்ளதோ அவை யாவையும் துய்த்து விட வேண்டும் என்ற தவிப்பு. ஆடம்பர வாழ்க்கை வாழ அடங்கா ஆவல். இதற்காக உற்ற உறவுகளை விட்டு விட்டு, பிறந்த நாட்டையும் துறந்து தொலை தூரம் செல்வதற்கும் தயாரே!  என்னப்பா இது கொடுமை! விளக்கு வெளிச்சம் விட்டில் பூச்சியை ஈர்ப்பது போன்றே , இன்றைய புது ,புது கண்டுபிடிப்புகள் இவர்களை ஈர்க்கிறது?

இது எப்படி காரணமாகும்? என்ற உங்கள் கேள்வி என் காதில் விழுகிறது. 

இன்று மிதி வண்டியை ஓட்டுபவர்கள், பைக்கின் வேகத்தை கண்டு, அதை வாங்க ஆசை கொள்கிறார்கள்.ஆமாம் , இதிலென்ன தப்பு? தப்புதான்.நேரத்தை மிச்சப்படுத்த நீண்ட தூரம் செல்வதற்கு மட்டும் பயன் படுத்தினால் ஒத்துக்கொள்ளலாம், ஆனால், இளைய வயதினர் அடுத்த தெருவிற்கு செல்ல வேண்டுமானாலும், கார், ஸ்கூட்டரை தான் எதிர் பார்க்கிறார்கள். நடப்பதும், சைக்கிள் ஓட்டுவதும் காலுக்கு சக்தியை கொடுக்கிறது என்பதை மறந்து விடுகிறார்கள். சோம்பேறித்தனம் ஆரோக்கிய சீரழிவிற்கு விலையாகும் என்பதனை மறந்து விட்டாயா மகனே. இம்மனோநிலையில் சேமிப்பு எப்படி வரும்? வாங்கும் கடனுக்கு EMI கட்டுவதற்கே   சம்பாதனையெல்லாம் கரைந்து விடுகிறதே!

தொழில் நுட்ப பயன்பாடும்,மின்னனுசாதனங்களும்:- 

இன்றைய உலகில் யாரும் இவற்றின் பயன்பாட்டிலிருந்து விலகிவிட முடியாது. இதை சுமையாக கருதாமல், அதை எவ்வாறு திறம்பட பயன்படுத்த  முடியும் என்பதனை கற்றுக்கொள்ள வேண்டும். உதாரணமாக கைப்பேசியில் எத்தனை , எத்தனை நன்மைகள்! செய்தி பரிமாற்றங்கள் நொடியில் நடக்க வில்லையா? கோடானகோடி தகவல்கள் கொட்டிக்கிடக்கவில்லையா? Transport ல் ஏற்பட்ட புரட்சி சொல்லில் அடங்காது.  இதை விடுத்து விளையாடுவதற்காக, அரட்டை அடிப்பதற்காக, பயன்படுத்தினால் எப்படி?  நேரக்கட்டுப்பாடோடு பயன்படுத்தினால், இவையெல்லாம் நமக்கு வரமே அல்லவா?

கல்வி:-  அறிவை பெருக்குவதற்கு கல்வி என்பது மாறி பணம் பெருக்குவதற்கு என்ற நிலை வந்து விட்டது.  

1)இந்த பணம் என்னும் ஆட்கொல்லி தான்  உன்னை பாதை மாறி படுகுழியில் தள்ளுகிறது என்பேன். 

2)பணம் சம்பாதனை குருட்டு தைரியத்தை அளிக்கிறது.

3) பணம் இருந்தால் நீ உன்னை சார்ந்து வாழ்பவர்களை மதிக்க தோன்றுவதில்லை.

4) பணத்தை விட அனுபவம் பெரிது  என்று நினைப்பதில்லை. அனுபவசாலிகளின் கருத்துக்கு மதிப்பும் கொடுப்பதில்லை.

திருமணம்:- "யாதும் ஊரே யாவரும் கேளிர்" இது உலக ஒற்றுமைக்காக சொல்லப்பட்டது. ஆனால் நீ வாதாடுவது , யாரை மணந்தால் என்ன? என்பது தான்.இது அப்படியல்ல! பெரியவர்களின் ஆசியும், சம்மதமும் இருந்தால் தான் ,எந்த சூழ்நிலையிலும் , உறவுகள் கூடி வந்து  தோள் கொடுத்து தூண் போல் தாங்கி நிற்பர் என்பதனை ஒத்துக்கொள்.

மனிதாமானம்:- தனக்கு பிறகுதான் எல்லாம் என்னும் மனப்பாங்கு வேகமாக வளர்ந்து வருகிறது.

Duty first , right next  என்பதனை எத்தனை பேர்கள் நினைக்கிறார்கள்? பெற்றோர்கள் சம்பாதித்த சொத்தில் தனக்கு உரிமையுண்டு என்று கேட்கும் இவர்களுக்கு, அவர்களை மனம் நோகாமல் காப்பாற்றுவது தங்கள் தலையாய கடமை என்பதை நீ உணர்கிறாயா? இல்லையே! உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் தன் உதிரத்து உதிரமாக நிற்பர்களை அலட்சிய படுத்துதல் தகுமோ? 

இளைய சமுதாயமே! உங்களை நம்பிதான் இந்த நாடு உள்ளது.

1) தாய்நாட்டின் மீது பற்று வையுங்கள். எல்லா உரிமையும், இங்குதான் கிடைக்கும். இந்த மண்ணின் எல்லையை தாண்டினால் நீங்கள் வேற்று மனிதன் தான். எந்த உரிமைக்கும் குரல் எழுப்ப முடியாது. உங்கள் ஒவ்வொருக்கும் அடிப்படையான அரசியலும், சட்டமும்  தெரிந்திருப்பது அவசியம்.

2)பணம் சம்பாதிப்பதற்காக உங்களை அந்த மண்ணில் விற்று விடாதீர்கள்.

3)அந்த நாட்டில் உள்ள நல்ல விஷயங்களை கற்றுக்கொள்வதில் தவறில்லை. ஆனால் நம் நாட்டிற்கு பொருந்தாத  கலாசாரத்தை  பின்பற்றாதீர். 

4) வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை நம் இந்திய கலாசாரத்தின் படி நடத்துங்கள். வேதத்தை மதியுங்கள்.

5)பகவத் கீதை சொல்லும் அறிவுரைகள் பொய்யல்ல. அவை ஒவ்வொன்றும் கோடி பெறும். வாழ்க்கையின் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வு நம் இதிகாசங்களில் உள்ளது என்பதை மறந்து விடாதே!

ஓ! இளைய சமுதாயமே! இந்தியாவின்  கௌரவம் உன் கையில் தான் உள்ளது. 



1





Comments

Popular posts from this blog

பீஷ்மம்

அலகிலா விளையாட்டுடையான்

தவம் என்பது யாதெனில்........