எண்ணங்களின் வலிமை
நம் மனதில் எழும் எண்ணங்கள் ஆயிரம்,ஆயிரம்.இதில் எந்த எண்ணம் நம் தூக்கத்தை கெடுக்கிறதோ,எந்த எண்ணம் நம் மனதை முழுதும் ஆக்ரமித்துள்ளதோ அது நல்ல எண்ணமாக இருந்தாலும் சரி,இல்லை கெட்ட எண்ணமாக இருந்தாலும் சரி அதற்கே வலிமை அதிகம். ஒரு எண்ணம் செயல் வடிவம் எடுத்து அதன் பலனை கொடுப்பதற்கு இரண்டு விஷயங்கள் தேவை. 1) மனதில் தெளிவும் 2)விடா முயற்சியும்,மன உறுதியும். வினை திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற. எண்ணியஎண்ணியாங்குஎய்துபஎண்ணியார் திண்ணியராகப்பெறின். எண்ணங்களின் ஓட்டமே ஆசையாக வடிவெடுக்கிறது. ஆசை துன்பத்திற்கு மட்டும் காரணமாகாது,இன்பத்திற்கும் அதுவே காரணம் என்பதை அறிய வேண்டும். துன்பத்திற்கு காரணமான ஆசைகளை வளர்க்கும் எண்ணங்களை வளர விடாது முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். மாறாக இன்பம் தரக்கூடிய எண்ணங்களை வளர்க்க வேண்டும். அரசியலில் ஈடுபட்ட ஒருவனுக்கு குறுகிய காலத்திலேயே பணம்,பதவி,புகழ் வருகிறது என்று வைத்துக்கொள்வோம்.உடனே நானும் தான் மாறவேண்டும் என்ற தகாத எண்ணத்தை வளர விட்டால்,அது கிடைக்காத பட்சத்தில்எஞ்சுவதுஏமாற்றமும்,பணவிரயமும்தான். அதேசமயத்தில் ஒருவன் தன்னிலும்...