வாழ்க்கை
நல்ல வாழ்க்கை எது தெரியுமா.. நன்றாக வாழ்வது அல்ல.. கிடைத்த வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் வீணடிக்காமல் வாழ்ந்தோம்.. நாலு பேருக்கு நலம் பயக்காவிட்டாலும் கூட.. அவர்களைப் பாதிக்காத வாழ்க்கை வாழ்ந்தோம் என்பதுதான்.
வாழும் வாழ்க்கையை அழகாக்குவது பணமோ,புகழோ மட்டுமல்ல,நாம் பெரும் மனநிம்மதியும் ஆரோக்கியமான உடலும்,மனமும் கூடத்தான்.
ஆரோக்கியமான உடல்:-
இதற்கு உணவில் மனக்கட்டுபாடு மிகவும் அவசியம். நம் மனம் விரும்பும் உணவை சாப்பிடாது,உடல் கேட்கும் உணவை சாப்பிட கற்றுக்கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி மிகவும் அவசியம்.எந்த வயதினர்களாக இருந்தாலும் அவரவர் வயதிற்கேற்ப பரிந்துரைக்கும் உடற்பயிற்சியினை, பரிந்துரைக்கும் நேரங்களில் செய்வது அவசியம்.
இக்காலங்களில் பணம் சம்பாதித்து கஷ்டமில்லாத வாழ்க்கையை தான் மட்டுமில்லாது தன்னை சார்ந்தவர்களும் வாழ பசியை பார்க்காது கண் துன்ஜாது ஓடி,ஓடி உழைக்கிறார்கள். அதனால் என்ன பயன்? ஆரோக்கியம் கெட்டு, சம்பாதித்த பணத்தை மருத்துவத்திற்காக செலவழிக்க வேண்டி வருகிறது.
உடல் கெட்டவுடன் மனமும் சோர்வடைந்து விடுகிறதல்லவா!ஆதலால் மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது சீரான வாழ்க்கைக்கு அவசியம்.
இதைத்தவிர பொருளாதாரம், உறவுகள், உழைப்பு இன்ன பிறவும் நம் வாழ்க்கையை வழி நடத்துகிறது
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை. நிதர்சனமான உண்மை. பணம் பிரதானமில்லை என்கிறார்கள்.ஆனால் பணமும் முக்கியம் தான். உன்னிடம் பணம் இல்லாவிட்டால் மரியாதை இருக்குமா?
ஏற்பது இகழ்ச்சி. நீ எவ்வளவு தான் நன்றாக படித்தாலும் பணமில்லையெனில் விரும்பிய படிப்பை படிக்க முடியுமா? படிப்பை தொடரவோ, குடும்பத்தை நடத்தவோ பிறன் மனை வாசலில் கையேந்தி நிற்கும் போது எண்சாண் உடம்பும் ஒரு சாணாக குறுகி மனம் புண்படும் பாட்டை சொல்லில் வடிக்கமுடியுமா?
நிதி மேலாண்மை:- நீ எவ்வளவு சம்பாதிக்கிறாய் என்பதல்ல கேள்வி. சம்பாதிக்கும் பணத்தை எப்படியெல்லாம் கையாளுகின்றாய் என்பதே கேள்வி. குறைவாக சம்பாதிப்பவன் கூட குறையில்லாமல் சந்தோஷமாக வாழ்கிறானே! உன்னிடம் இருக்கும் பணத்தையோ சொத்தையோ பிறரிடம் ரத்த பந்தமாகவே இருந்தாலுமே வெளிப்படுத்தாது இருப்பது அவசியம்.
திட்டமிடுதல்:-அவசியமான,உடனடிதேவைக்காக செய்யும் செலவிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
கடன்:- கடன் வாங்குவது வளர்ச்சிக்காக என்று இருக்க வேண்டும்.அது வியாபார விருத்திக்காகவோ,மேல் படிப்பு படிக்கவோ என்றால் பரவாயில்லை.ஆனால் சமூக அந்தஸ்தாவிற்காக கடன் வாங்கி செலவழிப்பது முட்டாள்தனம். சொந்த வீடு அவசியம் தான், அதற்காக தன் சக்திக்கு மீறி தவணை தொகை கட்டுமாறு வாங்கும் கடனும் நல்லதல்லவே! வாடகை பணம் கட்டுவதற்கு பதிலாக தவணை தொகை கட்டுமாறுஇருந்தால் நல்லதே.
கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கியது நெஞ்சம் என்று அன்றே கூறிவைத்தனர் நம் முன்னோர்.கடன் இருந்தால் வாழ்க்கையில் நிம்மதியே இருக்காது.
நேர மேலாண்மை:-
நேரத்தைநாம்அடிமையாகவைத்துக்கொண்டா
ல் எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றிதான்.கடந்து போன காலம் திரும்பி வராதுஎன்பதைஉணர்ந்துநடந்துகொள்ளவேண்டும். வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் பொன் போன்றதே.
நேரத்தை எப்படியெல்லாம் திட்டமிடலாம்என்பதற்கு Switzerland தேசம் ஒரு முன்னுதாரணம். அங்கே தன் ஓய்வு நேரத்தை வயதானர்களுக்கு சேவை செய்ய பயன்படுத்துகிறார்கள் ,அப்படி சேவை செய்யும் நேரத்தையெல்லாம் நேரசேமிப்பு வங்கியில் வரவு வைக்கப்படுகிறது. தனக்கு உதவி தேவைப்படும் நேரத்தில் அதை உபயோகப்படுத்திக்கொள்கிறார்கள். குறித்த நேரத்தில் குறித்த வேலையை செய்தால் வெற்றி நிச்சயம். எடுத்த பொருளை எடுத்த இடத்திலேயே வைப்பதும் நேரத்தை வீணாக்குவதிலிருந்து தப்பிக்கும் ஒரு உபாயமே!
சுயஒழுக்கமும்,சுய கட்டுபாடும் தான் இறைவன் கொடுத்தஇவ்வழகானவாழ்க்கையை அலங்கோலமாக்காது அழகாக்கிறது
வாழ்க்கை என்பது ஒரு முடிவை நோக்கிய ஓட்டம் அல்ல, அது அந்தப் பயணத்தில் நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆகும். கடந்த காலத்தைப் பற்றிய கவலையோ, எதிர்காலத்தைப் பற்றிய பயமோ இன்றி, நிகழ்காலத்தில் மகிழ்ச்சியுடனும் நன்றியுணர்வுடனும் வாழ்வதே ஒரு சிறந்த வாழ்க்கையாகும்.
எவ்வளவோ மேடு பள்ளங்களை தாண்டிதான் ஆறு கடலில் கலக்கிறது.அது போலத்தான் நம் வாழ்க்கையும்.
Comments
Post a Comment