Posts

Showing posts from December, 2021

தேடலில் தெளிவு

Image
தேடல் தொடங்கு முன்னரே நாம் எதை தேடப்போகிறோம்,எதற்காக தேடவேண்டும் என்பதில் தெளிவு பிறக்க வேண்டும்.தெளிவற்ற தேடல், பொன்னான நம் நேரத்தை வீணாக்குவதில் தான் முடியும். இதில் எஞ்சுவது ஏமாற்றமே! இவ்வுலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் தேடல் உள்ளது.தேடல் இல்லாது  தெளிவுயில்லை.தேடல் பல விஷயங்களை நோக்கி நடக்கிறது.  சிலர் பொருளை தேடி அலைகின்றனர்.மற்றும் சிலர் பதவியையும்,புகழையும் தேடி ஓடுகின்றனர்.இவை கிடைத்தால் மகிழ்கின்றனர்.இல்லையெனில் சோர்வடைகின்றனர்.கிடைக்கப்பெற்றவர்கள்அதை தக்க வைத்துக்கொள்ள போராடுகின்றனர்,கிடைக்காதவர்கள் அதை பெறுவதற்கு போராடுகின்றனர். இப்படி தம் வாழ்க்கையைப் பேராட்டத்தில் கழித்து நிம்மதியில்லாமலேயே வாழ்ந்துவிடுகின்றனர். நிலையான நிம்மதியை பெற அறிவு இருந்தும் அதை பெற முயற்சிப்பதில்லை இதில் எதை தேடினாலும் அத்தேடலுக்கான அறிவை கொடுப்பது இறைவன். இந்த அறிவானது நம் எல்லோருக்கும்  பிறக்கும்போதே ஆண்டவனது கொடையாக கொடுக்கப்பட்டுள்ளது. அதை நல்லமுறையில்பயன் படுத்துவதும்,பயன்படுத்தாதும் நம் கையில் தான் உள்ளது. நாம் கற்றவற்றை இறைவனின் வரமாக நினைத்து நாலு பேர்களிடம் பகிர்ந்தால் த...

ஆனந்தம்

Image
   மனம்  என்பது எண்ணற்ற எண்ணங்களின் வடிவமே.இதை நாம் , ஊனக்கண்களால் பார்க்க இயலாது.நம்முள் எழும் எண்ணங்களால் உணரலாம்.எண்ணங்கள் செயல்படும்போது சற்றே விலகி நிற்கிறது.செயலின் பயன் கிடைக்கும் போது ,மறுபடியும் அது உள்ளே நுழைந்து விடுகிறது.இதை இறைவன் கொடுத்த அறிவினால் அடக்கிவிடலாம்.மனம் இருக்கும்போது இந்த நிலையில்லாத உலகின் மீது பற்று வருகிறது.அதுவே அழிந்து விட்டால் நமக்குள் இருக்கும் ஆன்மாவை அறியலாம்.     ஆத்மா ஆனந்த மயமானது .இதை எப்படி புரிந்து கொள்வது? அதற்கு முதலில் "சச்சிதானந்தம்" என்பதின் பொருளை அறிய முயற்சி எடுக்க வேண்டும். சத் + சித்+ஆனந்தம்: சச்சிதானந்தம். "சத்" என்பது  பிறப்பில்லாதது , என்றும் இருப்பது .மனம் அழியும் போது "சத்" ஐ உணரலாம். மூளையை இயக்குவிப்பது எது? மனம்.மனம் தான் எண்ணங்ளை உருவாக்குகின்றது.அந்த எண்ணங்கள் நிறைவேற செயல்கள்தேவைப்பபடுகிறது. .செயல்கள் செய்வதற்கு, உறுப்புகள் இயங்குவதற்கு மூளையின் ஆணை  தேவை.இப்படி மனதை நாம் பார்க்காவிடினும்,அதன் செயல்களை விழித்திருக்கும் போது நம் புறக்கண்ணால் பார்க்கிறோம்.அதுவே நாம் உறங்கும் போது கனவில் பல ...

Tricks for a happy life

Image
  A man old or young can be happy or sad or satisfied  --is all depends on his mind set. Mind is generating our thoughts.Careful study of our mind's traveling path will land you in proper place.The inner voice is different from your mind.What our inner voice says is the God's voice.Every human is endowed with this power.Ignoring this voice we will lose control over the mind.uncontroled mind is the unbridled horse.Here if one does any unrelished act,his mind will search for some excuses and tries to escape from the blame. Mind is subtle ,but it's role is  important in shaping one's life.Keeping the mind under our control is not very easy,it needs a lot of practice & traning.A lot of undivided attention &observation is needed.A person becomes noble or a ignoble depends on the thoughts which emanates from our mind.If a person nurtures good and positive thoughts his actions will be good for the family and society. In due course these actions become habits.Habits onl...