ஞானம் by velukudi krishnam
ஞானத்தை இரண்டு வகையாக நம் வேதங்கள் பிரித்திருக்கின்றன.அவை மெய்ஞானம் விஞ்ஞானம் மெய்ஞானம் அழியாத,மாற்றடையாதது மெய்ஞானம். ஆத்மாவோ,ஆண்டவனோ,பஞ்ஜபூதங்களோ மாற்றமடையாதது,மட்டுல்ல,அது அழியாததும் ஆகும். விஞ்ஞானம்:- அழியக்கூடியது,மாறிக்கொண்டே இருக்கக்கூடியது. மெய்ஞானம் இல்லாது விஞ்ஞானம் இல்லை. இதை விளக்க ஒரு உதாரணத்தை காட்டுகிறார். அரிசியை வேக வைத்தால் சோறு கிடைக்கிறது.எப்படி? இதற்கு விஞ்ஞானம் கண்டு பிடித்த அடுப்பு மட்டும் போதுமா? இல்லையே!அதற்கு ஒரு பாத்திரம் வேண்டும். அது மண் பாத்திரமோ அல்லது உலோகமோ,அது செய்வதற்குண்டான மூலப்பொருள் பூமியிலிருந்து தான் கிடைக்கிறது.( நிலம் ). அடுத்து அதை கழுவவேண்டுமே!அதற்கு தண்ணீர் தேவை.( நீர்) வேக வேண்டும் என்றால் நெருப்பு தேவை. நெருப்பு எரிய. காற்றின் துணை தேவை. கால் பங்கு அரிசிக்கு மூன்று மடங்கு தண்ணீர் ஊற்றி வேக வைத்தால் முக்கால் சட்டி அல்லது முழு சட்டி சோறு கிடைக்கிறது.அரிசி சோறாக மாறும் போது சட்டியிலுள்ள வெற்றிடத்தை ஆக்ரமித்துக் கொள்கிறது. அந்த வெற்றிடம் தான் ஆகாயம் . பஞ்ஜ பூதங்கனின் துணை எந்த ஒரு கண்டு பிடிப்பிற்கும் தே...