மாற்றங்கள்
மாற்றங்களே இல்லா உலகினை நாம் பார்க்க முடிகிறதா? இல்லையே! மாற்றங்கள் எல்லா உயிரினங்களிலும் இடைவிடாது நடந்துக்கொண்டே தானே இருக்கிறது.?
விதையில் ஏற்படும் மாற்றம் வேராக,பின்பு மரமாகி நிற்கவில்லையா?
குழந்தையின் மாற்றம் நாளை மனிதன்.
இன்றைய தோல்வி நாளைய வெற்றி
இன்றைய சேமிப்பு நாளைய முதலீடு
இன்றைய துன்பம் நாளைய இன்பம்.
இன்றைய வலிகள் நாளைய வளர்ச்சி.
அதனால் தான் என்னவோ பெரியோர்கள்,
ஆண்டவன் ஒரு கதவை மூடினால் இன்னொரு கதவை திறப்பான் என்றார்களோ!
1) மாற்றங்கள் வளர்ச்சியை கொண்டு வருகின்றது.
2)மாற்றங்கள் மனமகிழ்ச்சியை அதிகரிக்கிறது
3)மாற்றங்கள் நம்மின் உணர்ச்சிகளை மாற்றுகிறது.
4)மாற்றங்கள் நம்பிக்கையை கொடுக்கிறது.
5) மாற்றங்கள் புதிய உறவுகளை கொண்டு சேர்க்கிறது.
6) மாற்றங்கள் புதிய , புதிய அனுபவங்களை கொண்டு சேர்க்கின்றது.
மிதி வண்டியில் பயணித்த நாம் இன்றைய தலைமுறையினர் ஸ்கூட்டருக்கும் ஏன்
வானஊர்த்திக்கும் மாறி விட்டதை பார்க்கிறோம்.
மாற்றங்களுக்கு ஏற்ப நாமும் மாற கற்றுக்கொண்டால் தான் வளரமுடியும். அப்படி இல்லாது பழைய பஞ்சாங்கத்தையே பாடிக்கொண்டிருந்தால்,தேக்கநிலை தான் ஏற்படும். ஜப்பானைபார்,சைனாவைபார் என்று வேடிக்கை பார்த்துக்கொண்டிராமல், அர்களால் முடீயும் போது நம்மால் ஏன் முடியாது? முயன்றால் முடியாதது ஏதாவது உண்டா?
மாற்றங்களை கல்வியிலும்,தொழில் நுட்பத்திலும் கொண்டு வந்து புரட்சி செய்துக்கொண்டே இருந்தால் நாடு வல்லரசாக மாறுவதை போல நம் மனத்தையும் காலத்திற்கேற்ப மாற்றிக்கொண்டால் வாழ்வில் ஏமாற்றங்களோ,துன்பங்களோ இல்லை.
Comments
Post a Comment