Posts

Showing posts from July, 2022

அன்பின் பரிமாணம்

Image
  அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று. அன்பில்லாது வாழும் இல்வாழ்க்கை பாலை வனத்தில் காய்ந்து போன மரத்தின் துளிர் போன்றது. அன்பு என்பது உள்ளத்தில் ஊற்றெடுக்கும் ஒரு அற்புதமான உணர்வு.உண்மையான அன்புகாலத்தையும்கடந்துநிற்கும்.இதற்கு சரித்திர சான்றுகள் பல உள்ளன. தன் நண்பனான புலவன் உயிர்விட்டதையறிந்து தானும் வடக்கிருந்து உயிர் துறந்த மன்னனின் கதையை நாம் அறிவோம். செஞ்சசோற்று கடனை கழிப்பதற்காக மட்டும் கர்ணன் , துரியோதனன் பக்கம் நிற்க வில்லை,இருவரிடையே இருந்த நட்பு என்னும் அன்பே இருவரையும் இணைக்கும் பாலமாக இருந்தது. அதனால் தான் துரியன் மனைவி பானுமதி ஆட்டத்தில் தோற்று எழும் போது கர்ணன் முத்துமாலையை இழுத்து அவளை போகாமல் தடுக்கும் போது மாலை அறுபட்டு முத்துக்கள் சிதற , உள்ளே நுழைந்த துரியன் இந்நிலை பார்த்து சிரித்துக்கொண்டே "எடுக்கவோ கோர்க்கவோ"என்கிறான். இதைவிட சிறந்த நட்பிற்கு வேறு என்ன உதாரணம் வேண்டும்?.  அன்பு என்பது சூழ்நிலையை பொறுத்து வெவ்வேறு பெயர்களில் அறியப்படுகிறது. 1)உற்றார் ,உறவினர்களிடம் காட்டும் அன்பு பாசம் . 2)கணவன் மனைவிடையே இருப்பது--- காதல் 3...