பிள்ளை வளர்ப்பு

 






இந்த மண்ணில் பிறக்கும் எல்லோரும் நல்லவரே! சரியில்லாத வளர்ப்பினாலும்,  தகுதியில்லாத நட்பினாலும், சூழ்நிலையாலுமே, ஒருவன் கெட்டவனாகிறான். 

வளர்ப்பு:- நாடு நலமாக இருக்க வேண்டுமானால், சமுதாயம் சிறந்ததாக இருக்க வேண்டும். சமுதாயம் சிறக்க, அதன் அங்கமான குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டும். இதற்கு குடும்ப உறுப்பினர்கள் நற்சிந்தனையோடு இருக்கவேண்டும். ஆகவே ஒரு நாட்டின் பெருமை குடிமகனின் கையில் தான் உள்ளது.

நன்மக்கள் பெற்று வளர்ப்பதில் தான் பெற்றோர்கள் பெருமை அடங்கியுள்ளது. மக்களை பெற்றவர்கள் பெருமை படுவதில் மட்டும் நின்று விடுவதில்லை,  பெற்றோர்களை பார்த்து மற்றவர்கள் இவன் தந்தை எந்நோற்றான் கொல் எனும் சொல் என்பதற்கேற்ப பெற்றோர்களும்  நடந்துகொள்ள வேண்டும். 

பிள்ளை வளர்ப்பு:- 

1)பிள்ளை கர்பத்தில் வளரும் போதே எப்படி ஊட்டமான உணவினை உண்கிறாறோ, அப்படியே நல்ல விஷயங்களை மட்டும் கர்பத்தை சுமக்கும் தாய் கேட்டு உள் வாங்க வேண்டும். உ.ம்:- பிரகலாதன் கதை.

2) குழந்தை பருவத்திலிருந்தே நல்ல ஆன்மீககதைகளையும்,நீதிக்கதைகளையும்  அறிமுகப்படுத்த வேண்டும்.

3) நேர்மறை சுற்றுசூழல், நேர்மறை எண்ணங்கள் வளருவது அவசியம். பிள்ளைகள் முன் பெரியவர்கள் சண்டையோ,சச்சரவோ செய்யக்கூடாது.

4) தவறு செய்வது சகஜமான ஒன்று. அதை திருத்துவது பெற்றோர்களின் கடமை. செய்யும் தவறினால் ஏற்படும் விளைவுகளை அவர்கள் உணரும் படி சமாதானமாக எடுத்துரைக்க வேண்டும். அவர்களின் மனம் நோகும்படியோ அல்லது அடித்தோ,திருத்தாமல் , அவர்களின் மனதில் பதியும் வகையில், சொல்லுவதே நலம். சொல் பேச்சை கேட்காத பிள்ளைகளை கண்டிப்புடன் அறிவுரையுடன் பின்விளைவுகளும் விளைவுகளை,மனதில் பயம் வருமாறு கூற வேண்டும்.

5) அவர்களை சந்தேகிக்கின்றனர் என்ற சந்தேகம் அவர்களுக்கு வராமல், அவர்களின் நட்பு வட்டாரத்தை கவனிக்கவேண்டும். நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வர ஊக்குவித்தால் தான் அவர்களின் குணங்கள் நமக்கு தெரிய வரும். அழைத்து வரும் நண்பர்களை பாசத்தோடு உபசரிக்க  வேண்டும்.

6)  வெளியில் செல்லும் போது இன்ன இடத்திற்கு இன்ன காரியத்திற்காக செல்கிறேன், இன்ன நேரத்திற்கு திரும்ப வருவேன், தாமதமானால் தகவல் கொடுக்கிறேன், என்னும் பழக்கத்தை பெற்றோர்கள் தாங்கள்  கடைபிடித்தால்,       

 பிள்ளைகளும் அதே நடை முறையினை பின்பற்றுவார்கள்.எந்த ஒரு பழக்கமும் பெற்றோர்களிடமிருந்தே குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள் என்பதனை நாம் மறக்கலாகாது.

முதியர்களின் பராமரிப்பு:- 

1)இதுவும் பெற்றோர்களிடமிருந்தே குழந்தைகள் கற்றுகொள்கிறார்கள். 2)எவ்வளவு வயதானவர்களாக இருந்தாலும் சரி,அவர்கள்எதிர்பார்ப்பதுஅன்பையும்,ஆதரவையும்,மரியாதையையும் தான் என்பதை உணர்த்தவேண்டும். அவர்களுக்கு வேண்டிய உதவிகளை அவர்கள் கேட்கும் முன்பே செய்ய வேண்டும். 

3) இப்பொழுதெல்லாம் முதியவர்கள் பார்த்துக்கொள்ள ஆட்களை போட்டுவிடுகிறார்கள். இதை தவறு என்று சொல்ல முடியாது, ஆனால் அவர்கள் நாம் சொல்லும் வேலைகளை சரியாக செய்கிறார்களா , என்பதை பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் கவனித்து,பெற்றோருக்கு ஒத்தாசையாக இருக்க பழக்க வேண்டும்.

ஒழுக்கம்:-

1) எந்த பொருளையும் எடுத்தால் எடுத்த இடத்தில் வைக்க பழக்க வேண்டும்.இதனால்நேரம் வீணாவதை தவிர்க்கலாம். 

2) பத்து வயதிற்கு மேல் அவர்களின் உடமைகளை அவர்களே ஒழுங்காக வைத்துக்கொள்ள பழக்க வேண்டும்.

3) ஆசிரியர்களிடம் மரியாதையாக பழக பழக்க வேண்டும்.

4) பொய் சொல்லுதல், பிறர் பொருளுக்கு ஆசைபடுதல் தவறு என்பதை உணர்த்த வேண்டும். 

5) காலையில் எழுந்தவுடன் படிப்பு.

பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு பாரதியின் அறிவுரை.

மாலை முழுதும் விளையாடாவிட்டாலும், சிறிது நேரமாவது, உடற்பயிற்சியோ விளையாட்டோ விளையாடி, உடம்பிற்கு புத்துணர்ச்சி கொடுத்துவிட்டு, பள்ளி வேலைகளை கவனிக்க வேண்டும். 

தெய்வ பக்தி:-

விடுமுறை நாட்களில் அருகில் இருக்கும் கோவிலுக்கு அழைத்து செல்ல வேண்டும்.

அங்கு  அழியக்கூடிய  பணம், பதவி போன்றவற்றை கேட்காது, 

நல்லபுத்தி, அறிவு, எடுத்த காரியத்தை முடிக்கும் மன உறுதியை கொடுக்கும் படி தான் இறைவனிடம் இறைஞ்ச வேண்டும். தேவை உள்ளவருககு உதவும் உள்ளத்தையும் சக்தியையும் இறைவனை கொடுக்க வேண்டுமாறு சொல்லிக்கொடுக்க வேண்டும்.

சிறு வயதிலிருந்தே நம் இதிகாசங்கள் சொல்லிக் கொடுக்க, கொடுக்க , நற்பண்புகள் தானே வளருவது உறுதி, உறுதி.







..





 



Comments

Popular posts from this blog

பீஷ்மம்

அலகிலா விளையாட்டுடையான்

தவம் என்பது யாதெனில்........