ராமாயணமும் நாமும்
ராமாயணம் என்னும் ஆதிகாவியத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ஒவ்வொரு பாடத்தை நமக்கு கற்றுக்கொடுக்கிறது. நீ செய்யும் கர்மாவின் வினைப்பயனுக்கு நீயே தான் பொறுப்பு வால்மீகி :- ரத்னாகர் வேடனாக பல குற்றங்களை செய்து பணம் சம்பாதித்து தன் குடும்பத்தைகாப்பாற்றிக்கொண்டிருக்கிறான். தன் குடும்ப உறுப்பினர்கள் மீது அளவற்ற நம்பிக்கை. தனக்கு ஏதாவது தீங்கு நேர்ந்தால் தன் செல்வத்தை பகிர்ந்து கொள்வதை போல இதையும் பகிர்ந்து கொள்வார்கள் என்று உறுதியாக நம்புகிறான். அப்போது வந்த நாரதரை கொள்ளை அடிக்க நெருங்குகிறான். அப்போது நாரதர் கேட்கிறார்,"நீ யார் பொருட்டு இந்த கொள்ளை தொழிலை கைக்கொண்டுள்ளாய்?" "ஏன் என் குடும்பத்திற்காகத்தான்"என்று பதிலளிக்கிறான் அப்படியானால் நீ ஒன்று செய், என்னை இங்கேயே கட்டி போட்டுவிட்டு,உன் குடும்பத்தாரிடம் சென்று, கொள்ளையடிப்பதால் வரும் பாபத்தை பகிர்ந்து கொள்வார்களா என்று கேள்.அவர்கள் சொல்லும் பதிலை என்னிடம் வந்து சொல் என்கிறார். வேடனும் சென்று நாரதர் கேட்கக் சொன்ன மாதிரியே போய் கேட்க,அவர்கள் நீ எந்த வழியில் சம்பாதிக்கிறாய் என்பது பற்றி எங்களுக்கு கவலையில்லை, அ...