ஊழ்
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.
ஊழ் என்பது நாம் முற்பிறவிலோ அல்லது இப்பிறவியிலோ செய்த பாவங்களின் பயன். இது முன்னோர்கள் செய்ததாக கூட இருக்கலாம். அதனால் தான் பெரியவர்கள் செய்யும் பாவம் பிள்ளைகளை சேரும் என்கிறார்கள். இதை அனுபவித்தே ஆக வேண்டும். இது தெய்வத்தின் கருணையால் குறையவோ, அல்லது எதிர் கொள்ளும் சக்தியோ கிடைக்குமே தவிர முற்றிலும் ஒழிந்து போகவே போகாது. போன பிறவியில் சேர்த்த பாவங்களும் இப்பிறவியில் செய்யும் பாவங்களும் , இல்லை இனி செய்யப்போகும் பாவங்களால் தான் நாம் பல பிறவிகளை எடுத்து மேன்மேலும் துன்பப்படுகிறோம்.
நம் பாவ வினைகள் தான் மிகவும் சக்தி வாய்ந்தது. அதுவே எல்லாவற்றுககும்
முன்னதாக நின்று துன்பத்தை தர வல்லது.
யாரால் ஊழை வெற்றி பெற முடியும்:-
யார் ஒருவர் நல்ல செயல்களை செய்து, ஓயாது உழைக்கிறாரோ அவருக்கு முன் வி னை நல்லதே செய்யும். தீ வினை செய்வோருக்கு தீமையே விளையும்.
நல்வினை, தீவினை என்றால் என்ன?
நல்வினை செய்வோர் உடலால் மட்டும் நன்மை செய்வதில்லை,அவர்கள் உள்ளத்தாலும் மற்றவர்களுக்கு தீமை நினைக்காததோடு , மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று உள்ளம் உருகி வேண்டுவர்.
அடுத்தவன் துன்பத்தை கண்டு யார் ஒருவன் கண்ணீர் விடுகிறானோ அவனை நல்வினையாளன் என்று சொல்லலாம்.
தீவினையாளன் தேனினும் இனிய சொற்களை கூறிக்கொண்டு சந்தர்ப்பம் கிடைக்கும் போது முதுகில் குத்துவான். இவர்கள்உழைத்து சாப்பிட மாட்டார்கள். பிறரை ஏமாற்றியே பிழைப்பர்.
ஏமாற்றுவது மட்டுமல்ல, தன்னுடைய முயற்சியினால் தான் எல்லாம் நடந்தது என்று கூறித்திரிவர்.
இந்த பொய்யர்கள் சோம்பேறிகளோ
, வாழ்க்கையில் லட்சியம் என்று ஒன்றும் இல்லாதவர்கள். மற்றவர்களின் வளர்ச்சியை ஒத்துக்கொள்ளாது, அவர்களின் வளர்ச்சியை கண்டு பொறாமை கொண்டு ஏளனம் செய்வர். இப்படியாக பாவ மூட்டையை சேர்த்துக்கொண்டு துன்பம் வரும் போது கடவுளையும் இரக்கம் இல்லாதவன் என்று தூற்றுவர்.
ஆகவே ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.
திணை விதைத்தவன் திணை அறுப்பான்
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
என்பது முற்றிலும் உண்மை.
நல்வினையின் பயன்:-
1நல்ல எண்ணங்களோடு பிறருக்கு மனம், மொழி, மெய்யால் எந்த தீங்கும் நினைக்காது, வாழ்ந்தால், யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை.
2) மனம் அமைதியாக இருக்கும்.
3)எதிர் காலத்தை பற்றிய பயம் ஒன்றும் இருக்காது.
4) தெய்வபலம் இருக்கும்.
5) துன்பங்கள் வந்தாலும் அது தூசு போல் மறையும்.
ஆகவே குலம் தழைத்து வளர வேண்டுமெனில் எந்த கோயிலுக்கும் செல்ல வேண்டாம். நல்லதே நினைத்து நல்லதே செய்தால் போதும்,அவனை தேடி இறைவனே ஓடி வருவான்.
சரி, சில சமயம் நல்வினை செய்தோருக்கும், பிறரால் பாதகம் ஏற்படுவது எதனால்?
அது அன்னாரின்கர்மா மூட்டையை அதிக படுத்துவதற்காக அல்லது பாதிக்கப்பட்டவரின் கர்மா கழிவதற்காகவோ கூட இருக்கலாம். துன்பம் வருவது ஏதாவது காரணத்தால் தான் இருக்கும். ஆண்டவன் கணக்கு எப்போதும் தப்பவே தப்பாது. காரணம் இல்லாது காரியம் நடக்காது.
தவறு மேல் தவறு செய்யும் சிலர் நன்றாக வாழ்கிறார்களே, ஆனால் நல்லவர்கள் வாழ்நாள் முழுவதும் கஷ்டத்தின்மேல் கஷ்டம் அனுபவிக்கிறார்களே இது எதனால்?
இதைத்தான் வினைப்பயன் என்கிறோம்.முற்பிறவியில் செய்த நல்வினைப்பயனை இப்பிறவியில் அனுபவிக்கிறான். இப்பிறவியில் செய்யும் தீவினைப்பயன் அடுத்த பிறவியில் அதன் விளைவைக்காட்டும். இது நிச்சயம். அவ்வாறே இப்பிறவில் செய்யும் நல்வினை வருகின்ற பிறவியில் நற்பெயனை
கொடுக்கும்.
மற்றவர்கள் செய்யும் கர்மாக்கள் நம்மை பாதிக்குமா?
அவரவர்கள் செய்யும் வினைதான் அவரவர்க்கு. முன்னோர்களின் பாவங்கள் , வாரிசுகளுக்கு கெடுமதியைக் கொடுத்து பாவ காரியங்களை செய்வித்து முன்னோர்களின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும்
நல்வினை செய்தால் தான் ஆண்டவனை அடைய முடியுமா?
ஆண்டவனுக்கு நல்வினையோன், தீவினையோன் என்ற பாடுபாடு கிடையாது
எல்லோரும் அவன் குழந்தைகளே!பெற்றோர்கள் எப்படி தவறு செய்யும் குழந்தைகளை தண்டித்து திருத்துகிறார்களோ, அவ்வாறே எல்லோருக்கும் அப்பனான அந்த ஈசனும் செய்கிறான். நாம் திருந்தும் வரை ஓய்வதில்லை . பிறவிகளை கொடுத்துக்கொண்டே தான் இருப்பான். முழுமையாக திருந்தியவுடன் தான் தன்னுடன் சேர்த்துக்கொள்வான்.
பிறவி எடுத்ததின் பயன் இறைவனை அடைவதே என்கிறார்களே, அதை எப்படி அடைவது?
நல்லகர்மாக்களை பெற்றவன் உழைப்பதற்கு அஞ்சமாட்டான், அவனிடம் முயற்சி இருக்கும்.எப்பொழுதும்,உடலாலும், மனதாலும் சுறுசுறுப்பாகவே இருப்பான். ஆனால் கெட்ட கர்மாக்களை உடையவன், சோம்பேறியாக, உழைக்காமல் ஏழ்மையின் பிடியில்சிக்குண்டு,சிறிதும்சந்தோஷமில்லாமல் தான்இருப்பான்.
தீய வினைப்பயனை குறைக்க நாம் இப்பிறவியிலாவது, தீங்கேதும் செய்யாது, சேர்ந்த பாவத்தை கரைக்க நற்செயல்களை, நற்சிந்தனையோடு செய்து வந்தால், பாவமும், புண்யமும் சமமாகி, ஆண்டவனை அடையலாம்.
.
Comments
Post a Comment