நட்பு
நட்பு என்பதற்கான இலக்கணம்:- இது சாதி, மொழி, இனம், ஆண், பெண், போன்ற எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட புனிதமான உறவு. இந்த உறவில் எதிர்பார்ப்புகள் இல்லை. ஆனால் விட்டுக்குடுத்தலும், தியாகமும் உண்டு. வள்ளுவனார் இதற்குரிய இலக்கணத்தை மிக சுருக்கமாக ஒன்றே முக்கால் அடியிலே அழகாக கூறியிருக்கிறார். உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. இடுக்கண் வரும் காலத்தில் மட்டுமல்லாது , வழி தவறி பாதை மாறும் போதும், இடித்தரைத்து, நல்வழிக்கு அழைத்து செல்பவனும் நல்லநண்பனே! காதலும்,நட்பும் காதலுக்கும் , நட்பிற்கும் நூலிழை தான் வித்தியாசம். பொதுவாக எதிர்பாலினத்திற்கிடையே காதல் மலர்கிறது. ஆனால் நட்பு என்பதோ இனம், மொழி, நாடு,சமூக அந்தஸ்து போன்றவற்றை பார்த்து வருவதில்லை. ஔவையார் அதியமானுக்கிடையே இருந்த நட்பு. பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழனுக்கிடையே, இருந்த நட்பு, ஒருவரை நேருக்கு நேர் பார்க்காமலேயே நேசித்து,நண்பன் உயிரிழந்தான் என்பதை கேள்வியுற்று தானும் வடக்கிருந்து உயிர் விட்ட கதையை படிக்கும் போது நெஞ்செல்லாம் உருகுகின்றது. நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுகொடுக்கலாம்.ஆனால் எ...