ஞானம் by velukudi krishnam
ஞானத்தை இரண்டு வகையாக நம் வேதங்கள் பிரித்திருக்கின்றன.அவை
மெய்ஞானம்
விஞ்ஞானம்
மெய்ஞானம்
அழியாத,மாற்றடையாதது மெய்ஞானம். ஆத்மாவோ,ஆண்டவனோ,பஞ்ஜபூதங்களோ மாற்றமடையாதது,மட்டுல்ல,அது அழியாததும் ஆகும்.
விஞ்ஞானம்:- அழியக்கூடியது,மாறிக்கொண்டே இருக்கக்கூடியது.
மெய்ஞானம் இல்லாது விஞ்ஞானம் இல்லை.
இதை விளக்க ஒரு உதாரணத்தை காட்டுகிறார். அரிசியை வேக வைத்தால் சோறு கிடைக்கிறது.எப்படி?
இதற்கு விஞ்ஞானம் கண்டு பிடித்த அடுப்பு மட்டும் போதுமா? இல்லையே!அதற்கு ஒரு பாத்திரம் வேண்டும். அது மண் பாத்திரமோ அல்லது உலோகமோ,அது செய்வதற்குண்டான மூலப்பொருள் பூமியிலிருந்து தான் கிடைக்கிறது.(நிலம்).
அடுத்து அதை கழுவவேண்டுமே!அதற்கு தண்ணீர் தேவை.(நீர்)
வேக வேண்டும் என்றால் நெருப்பு தேவை.
நெருப்பு எரிய. காற்றின் துணை தேவை.
கால் பங்கு அரிசிக்கு மூன்று மடங்கு தண்ணீர் ஊற்றி வேக வைத்தால் முக்கால் சட்டி அல்லது முழு சட்டி சோறு கிடைக்கிறது.அரிசி சோறாக மாறும் போது சட்டியிலுள்ள வெற்றிடத்தை ஆக்ரமித்துக் கொள்கிறது. அந்த வெற்றிடம் தான் ஆகாயம்.
பஞ்ஜ பூதங்கனின் துணை எந்த ஒரு கண்டு பிடிப்பிற்கும் தேவை.
ஒரு பொருள் எப்படி உண்டானது என்பதை விnஞ்ஞானம் ஆராய்ச்சி செய்து கண்டு பிடிக்கலாம்,ஆனால் ஏன் உண்டானது என்பதை மெய்ஞானத்தால் தான் அறிய முடியும்.
ஆண்பெண் சேர்க்கையால் ஒரு குழந்தை உண்டாகிறது ,அது ஆணா,பெண்ணா என்பதனை விஞ்ஞானம் கண்டு பிடித்துவிடும்.ஆனால் விஞ்ஞானத்தால் அது எதற்காக உருவானது என்பதனை சொல்ல முடியாது. எப்படி என்பதனை சொல்லலாம் ஆனால் எதற்காக என்பதனை மெய்ஞானத்தால் மட்டுமே சொல்ல முடியும்.
ஒரு ஜீவன் ஏன் சுகமாய் வாழ்கிறது அல்லது கஷ்டப்படுகிறது என்பதனை மெய்ஞானம் சொல்லும் ஆனால் விஞ்ஞானத்தால் சொல்ல முடியாது.
சரீர சுகத்தை கொடுப்பது விஞ்ஞானம். ஆத்ம சுகத்தை கொடுப்பது மெய்ஞானம்.
உதாரணத்திற்கு ஏசி அறையில் படுத்தால் நன்றாகத்தான் உள்ளது. ஆனால் தொடர்ந்து உபயோகப்படுத்தும் போது உடம்பிற்கு ஒத்துக்கொள்வதில்லை. எதனால்? அது சுற்றிலும் உள்ள காற்றில் உள்ள கிருமிகளை பறக்க விடுகிறது. அதை நாம் சுவாசிக்கும் போது, உடம்பு கெடுகிறது.
மெய்ஞானம் வளர,வளர, நித்தியமாய் இருக்கும் அந்த ஆண்டனின் இருப்பை பற்றிய ஞானம் உண்டாகி மனம் ஆனந்தம் அடைகிறது.
இதற்காக விஞ்ஞானமே வேண்டாம் என்று சொல்ல வரவில்லை. சமுதாய வளர்சிக்கு விஞ்ஞானவளர்ச்சிஅவசியம்தேவை.மெய்ஞானத்திற்கு பிரமாணம் உண்டா?என்று கேட்பவர்க்கு தா ன் இந்த பதிவு என்கிறார் நம் வேளுக்குடியார்.
Comments
Post a Comment