ஊழ்
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும். ஊழ் என்பது நாம் முற்பிறவிலோ அல்லது இப்பிறவியிலோ செய்த பாவங்களின் பயன். இது முன்னோர்கள் செய்ததாக கூட இருக்கலாம். அதனால் தான் பெரியவர்கள் செய்யும் பாவம் பிள்ளைகளை சேரும் என்கிறார்கள். இதை அனுபவித்தே ஆக வேண்டும். இது தெய்வத்தின் கருணையால் குறையவோ, அல்லது எதிர் கொள்ளும் சக்தியோ கிடைக்குமே தவிர முற்றிலும் ஒழிந்து போகவே போகாது. போன பிறவியில் சேர்த்த பாவங்களும் இப்பிறவியில் செய்யும் பாவங்களும் , இல்லை இனி செய்யப்போகும் பாவங்களால் தான் நாம் பல பிறவிகளை எடுத்து மேன்மேலும் துன்பப்படுகிறோம். நம் பாவ வினைகள் தான் மிகவும் சக்தி வாய்ந்தது. அதுவே எல்லாவற்றுககும் முன்னதாக நின்று துன்பத்தை தர வல்லது. யாரால் ஊழை வெற்றி பெற முடியும்:- யார் ஒருவர் நல்ல செயல்களை செய்து, ஓயாது உழைக்கிறாரோ அவருக்கு முன் வி னை நல்லதே செய்யும். தீ வினை செய்வோருக்கு தீமையே விளையும். நல்வினை, தீவினை என்றால் என்ன? நல்வினை செய்வோர் உடலால் மட்டும் நன்மை செய்வதில்லை,அவர்கள் உள்ளத்தாலும் மற்றவர்களுக்கு தீமை நினைக்காததோடு , மற்றவர்கள் நன...