அண்டமும்,பிண்டமும்





அண்டத்திலும் பிண்டத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் அந்த இறை சக்தியை,நீரின் இன்சுவையையும், மண்ணின் திண்மையையும்எப்படி பார்க்க முடியாதோ, அது மாதிரி  பார்க்க முடியாது,ஆனால் உணர முடியும்.ஒரு சிறிய உதாரணத்தின் வாயிலாக அண்டத்தில் ஆட்டுவிக்கும் சக்தி இருப்பது உண்மை  என்பதனை பார்ப்போமா? 

ஒரு வீட்டின் சன்னல் வழியாக சூரிய கதிர்கள் வருகின்றதுஎன்றுவைத்துக்கொள்வோம்.அப்போது தூசிகள் சிறிய அணுக்களாய் மிதப்பதை காண்கிறோம். அவ்வாறே ஆகாயத்தில் சூரியனை சுற்றி பல கோள்கள், மிதந்தவாறு அதுஅதன் பாதையில், ஒரு rhythamudan அதற்கு உள்ள வேகத்தில் சுற்றுகின்றது. இந்த கோள்களை தாங்கி     ஏதாவது உள்ளதா? இல்லை என்பதே பதில். பூமியின் ஈர்ப்பு சக்தி இல்லையேல்,நாமும் கோள்கள் மிதப்பது போல மிதந்துக்கொண்டு தான் இருப்போம் அல்லவா? ஆதலால் அண்டத்தில் எல்லாவற்றையும் இயக்குவது நம் கண்ணுக்கு தெரியாத ஓர் சக்தி என்பது ஐயமே  இல்லாமல் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.

ஒன்பது கோள்களை கண்டு பிடித்த மனிதனால் அதன் பிறப்பையோ, இயக்குசக்தியையோகண்டுபிடிக்கமுடிந்ததா? ஆராய்ச்சி செய்தால் முடியாது,ஆனால் நானே உனக்கு அடிமை என்று சரணடைந்தால் முடியும்.

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் 

உற்றோமேயாவோம் உமக்கே யாம் 

 ஆட்செய்வோம்.......

இதையே பாரதியும்,

யாதுமாகி நின்றாய்-காளி!-எங்கும் நீ நிறைந்தாய்;

தீது நன்மை யெல்லாம்-காளி!-தெய்வ லீலை யன்றோ;
பூத மைந்தும் ஆனாய்-காளி!-பொறிக ளைந்தும் ஆனாய்;........

பிறவிலேயே உயர்ந்த பிறவி மானுட பிறவி.இது எளிதில் கிடைக்காது.

புல்லாகி,பூடாய்ப்புழுவய்,மரமாகிப்

பல்வகருகமாகி ,பறவையாய்,பாம்பாகி

கல்லாய்,மனிதராய்....என்று எத்தனையோ பிறவிகளுக்கு பின்னர் தான் இம்மானுடப்பிறவி கிடைக்கின்றது.மானுட பிறவியில்தான்சிந்திக்கும்சக்திகிடைக்கிறது. இந்த சிந்தனா சக்தியால் தான் இறைவனை பற்றிய தெளிவு பெற முடியும்.

அண்டத்திலும் அவனே, பிண்டத்திலும்அவனே.

மேலே கூறியபடி அண்டத்தை ஆக்குபவனும் அவனே,அதை ஆட்டுவிப்பவனும் அவனே. அவன் பிண்டமான மனித உடலிலும் மறைந்துள்ளான் என்பதனை மனிதன் எப்படிபிறப்பெடுக்கிறான் என்பதனை முதலில் ஆராய்வோம்.

வான்ஆகிமண்ஆகி

வளிஆகிஒளிஆகி

ஊண்ஆகிஉயர்ஆகி

உண்மையாய்இன்மையைம்ஆய்க்

கோளாகி.....

மனிதன் எப்படி பிறக்கிறான்? 

சுத்த சைதன்யத்தின் கருணையால், தீ பிழம்பாக சூரியனிடமிருந்து ஒரு பகுதி வெடித்து சிதறி,குளிர்ந்து பூமியாக உருவெடுக்கிறது. இவையாவும் பஞ்ச பூதங்களின் சேர்க்கையே.பூமியில் இருக்கும் கடல்நீர் ஆவியாகி ,மழையாய் மண்ணில் பொழிந்து,தானியமாய் விளைந்து அதை உண்ணும்படிக்கு மனிதன் உண்டாகிறான் . மனிதனின் உடலும் பஞ்ச பூதங்களின் சேர்க்கையே! எப்படி?  

உடம்பை மூடியுள்ள தோல்--- மண்ணாகிறது.

இரத்தம் --நீர்

மூச்சு--------வாயு

உடம்பில் உள்ள உஷ்ணம்----தீ

இருதயக்கமலம்------ஆகாசம்.

இவை ஐந்தும் ஒழுங்காக இருந்தால் தான் மனிதன் இயங்க முடியும்.

உண்ணும் உணவினாலும், புகைபிடிக்கும் பழக்கத்தினாலும், மதுவினாலும், தகாத வாழ்க்கை முறையானாலும், எண்பதுகளில் வரும்மரணத்தை, நாற்பதிலேயே எதிர்கொள்கிறோம். இவற்றிலெல்லாம் கடவுள்  உள்ளார் என்பதனை அறிந்து நடந்து கொள்ளாவிட்டால்,இந்த ஊண் உடம்பு ஆலயமாக இல்லாது அழிந்து பட்டு போகும்.

இவ்வாறே, அண்டத்திலும் நடக்கின்றது.

இயற்கை சீற்றம் எப்போது நிகழ்கிறது? நாம் எப்போதெல்லாம் பஞ்ச பூதங்களை அலட்சியபடுத்திகேடுவிளைவிக்கின்றோமோ, அப்போதெல்லாம் இயற்கை என்னும் கடவுள் சீற்றம் கொண்டு, பூகம்பமாக, புயலாக, வெள்ளமாக,வடிவெடுத்து அழிவை கொடுக்கிறாள்.எனவே நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும்சக்திபார்த்துக்கொண்டுதான் உள்ளது.அது நம்முள்ளே ஆகாசமாய் அறிவாய் நிறைந்ததுதான் உள்ளது என்பதனை அறிக.

நம் எண்ணத்தை  focus செய்யத்தான் கடவுளின் உருவங்கள்.  தவறுகளை தண்டிக்க, கடவுள் ஏதாவது  உருவெடுத்து வர வேண்டும்என்பதுஅவசியமில்லை.ஐம்பூதங்களின் வாயிலாகவே தண்டித்துவிடும்.

இதை பயமுறுத்துவதற்காக சொல்லவில்லை. இப்போது உலகத்தில் நடக்கும் நிகழ்வுகளே இதற்கு சாட்சி. 

சுனாமி என்ற ஆழி பேரலை வந்து எவ்வளவு பேரழிவை ஏற்படுத்தியது. மலைகளில் மண்சரிவு, பருவம் தவறி பெய்யும் மழை,போன்ற யாவும் நமக்கு இயற்கை கொடுக்கும் எச்சரிக்கையல்லவா!

மனிதனுக்கும் அவ்வாறே மரணம் வருவதற்கு முன் தலைவலி , காய்ச்சல்,இன்ன பிற நோய்களை கொடுத்து வாழ்க்கை முறையை திருத்திக்கொள்வதற்கு ஒரு வாய்ப்பளிக்கிறது. 

இறைவனிடம் கையேந்தினால் அவன் எப்போதும் இல்லை என்று சொல்வதேயில்லை















Comments

Popular posts from this blog

பீஷ்மம்

அலகிலா விளையாட்டுடையான்

தவம் என்பது யாதெனில்........