நான் பார்க்கும் யோகி.
யோகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது யோகாசனங்கள் தான். இது உடலுக்கு வலுவேற்றக்கூடியது. நான் பார்க்கும் யோகியோ மனதுக்கு வலுவேற்றி,பிறவிகளை சுருக்கி,இறைவனை அடையும் யோக த்தை பற்றி தான்.
Doctor இடம் வைத்தியத்திற்கு போனால், உங்கள் life style ஐ மாற்றுங்கள் என்று கூறுகிறார்கள்.மன நல வைத்தியரிடம் போனால் negative thinking ஐ விட்டு positive thinking - -க்கு மாறுங்கள் என்கிறார்கள். Motivational speakers ம் அதையேதான் insist செய்கிறார்கள். உங்கள் வாழ்க்கையில் magic நடக்க வேண்டுமா, அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருங்கள்
என்று ஊடகங்களில் பல அமைப்புகளும் சொல்கின்றன. நம் யோகிகளும், ஞானிகளும் சொன்ன மருந்தை புது பாட்டிலில் ஊற்றி கவர்ச்சிகரமான குரலில், அழுத்தமாக,லேபில் ஒட்டி மறைமுக வியாபாரத்தில் காசு பார்க்கிறார்கள். எப்படியோ மக்களுக்கு நல்லது தான் செய்கிறார்கள். அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சியே!.
யோகியோ ,போகியோ இறுதியில் இணையும் இடம் அந்த பரம் பொருளிடம் தான்.
புனைரபிஜனனம்,புனைரபிமரணம்.இதுவே சாதாரண மனிதனின் வாழ்க்கை.ஆனால் யோகியின் வாழ்க்கையோ இதிலிருந்து வேறுபட்டது. அவன் பிறப்பில்லா வாழ்க்கையை நோக்கி பயணிக்கின்றான்
கங்கையோ,காவிரியோ இறுதியில் சங்கமிப்பது கடலோடு தான். கடலோடு கலந்துவிட்டால், நதி தன் தனித்தன்மையை இழந்து விடுகிறது. எல்லாமே கடல்தண்ணி தான். இதைபோலத்தான் ஒவ்வொரு ஜீவாத்மாவும்,இறுதியில் சேரும் இடம் கடல் போன்ற கருணை கொண்ட கடவுளிடம் தான். கடலோடு சேர்வதற்கு முன் நதி எத்தனை,எத்தனை ஊர்களையெல்லாம்
தாண்டி வருகிறது.அதைப்போலத்தான், ஜீவாத்மாவும் பல, பல, பிறவிகளை எடுக்க வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட பிறவிகளை சுருக்கும் வழியை அறிந்தவன் யோகி. அவனுக்கு தெரியும்,எப்படி கடல் நீர் ஆவியாகி, மழையாய் பொழிந்து, ஊற்றாய் கிளம்பி,அருவியாய்
கொட்டி,நதியாய் ஓடி கடலில் கலக்கின்றதோ அது போலத்தான், நம் ஜீவாத்மாவும்,புல்லாகிப்பூடாய்ப் புழுவாய் மரமாகி பல்விகருகமாகிப்
பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்............. பல பிறப்புகளை கடந்து இறைவனை அடைகிறது. இதை நன்கறிந்த யோகி பழி பாவங்களுக்கு நாணி, தன்னிடமிருந்ததை பிறருக்கு கொடுத்து உதவி செய்து, பிற உயிர்களிடத்து அன்பு பூண்டு, கொல்லாமையை கடைபிடித்து,உண்டி சுருக்கி, நிலையில்லாத இவ்வுலக இன்பங்களில் நாட்டம் கொள்ளாது, உடலை காக்க யோக பயிற்சிகளை செய்து, பயன் கருதாது கர்மாக்களை செய்து,இறைவனின் அன்பிற்கு பாத்திரமாகிறான்.பிறவிப்பயனை அடைகிறான்.
ஆனால் போகியோ , நிலையில்லாத இவ்வுலக இன்பங்களில் நாட்டம் கொண்டு,அதிலேயே மூழ்கி, தன் மனதையும், உடம்பையும் கெடுத்துக்கொண்டு பல பிறவிகளை எடுத்து அல்லலுறுகிறான்.
புலனடக்கம்அவனிடத்தில்இருப்பதில்லை
.
ஆனால் யோகியோ தன் ஐம்புலன்களையும் அடக்கி வாழ்கிறான்.
உணவு:-யோகி நாவிற்கு ருசி தரும் உணவை வேண்டுவதில்லை. உயிருக்கு எது தேவையா அதை ஏற்றுக்கொள்கிறான்.இந்த நூற்றாண்டில் வாழ்ந்த காந்திஜி ஒரு கைப்பிடி வேர்க்கடலையும், ஆட்டுப்பால் மட்டுமே உட்கொள்ளவில்லையா? காஞ்சி மகானோஒரு கைப்பிடி அவலைத்தானே சாப்பிட்டார்? ஏன், சீரடி சாய்பாபாவோ
யாசகத்தில் கிடைத்த எல்லாவகை உணவுகளையும் ஒன்றாகவே போட்டுதானே , சாப்பிட்டார்? காரணம் மனக்கட்டுப்பாடு!!!.இது எப்படி சாத்தியமாகிறது? யோகபயிர்சியாலும், தியானத்தினாலும்.
. போகிக்கு வேளாவேளைக்கு நாவிற்கு ருசியான,ரஜோ குணத்தை வளர்க்கக்கூடிய உணவுதான் தேவை.
நாம் முயர்ச்சிக்க வேண்டியது
பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே தபஸ்,யஞ்யம்,கட்டுபாடு,ஒழுக்கம் பூஜை, தானம்,மரியாதை இவற்றில் நாட்டம் கொள்ள செய்ய வேண்டும். எப்படி?தினசரி வேலைகளில்,நேரம் தவறாமை, ஒழுங்கு கட்டுபாடு கடைபிடித்தல். அருகில் உள்ள ஆலயத்திற்கு அழைத்து சென்று அங்கு நடைபெறும் விழாக்களிலும்,பூஜைகளிலும் பங்கு பெற செய்ய வேண்டும் . ஒரு ஆயிரம் பேர் இதைகடைபிடித்தால் ஒரு யோகியாவது இவ்வுலகிற்க்குகிடைப்பார்.
யோகிக்கு ஆசை என்பது கிடையாது.பிறக்கும் போது என்ன கொண்டு வந்தோம், அதை இறக்கும் போது கொண்டு செல்வதற்கு? இந்த மனநிலைதான் அவனுக்கு. இப்பிரபஞ்சமே இறைவனுடையது என்றிருக்கும் போது என்னுடையது என்பது இங்கு எதுவுமே இல்லை. இறைவன் இட்ட அவன் பணியை செய்யத்தான் இங்கு பிறந்துள்ளோம்,அதனுடைய பலனை அனுபவிக்க இல்லை.
யோகி தான் அநுபவித்துக்கொண்டிருந்த பொருள் தன்னை விட்டு போய் விட்டால் வருத்த படமாட்டான். இவ்வளவையும் தான் அனுபவிக்க அனுமதி கொடுத்ததற்கு நன்றி தான் கூறுவான்.ஆனால் போகியோ தான் சம்பாதித்தை மட்டுமல்லாது, பிறர் சம்பாதித்ததும் தனக்கே கிடைத்தால் நல்லது என்று மகிழ்வான். நினைத்தது கிடைத்துவிட்டால் தன் முயற்சியும்,புத்திசாலிதனமே இந்த வெற்றியை கொடுத்தது என கொக்கரிப்பான். கடவுளின் அருளைப் பற்றி சிறிதும் சிந்திக்கமாட்டான்
உடலைக் கொண்டு உலகில் ஒருவன் உழைத்து, மனதைக் கடவுளிடம் இணைத்துக்கொண்டால், அது கர்ம யோகம் . ஒருவர் உடலுடன் ஆன்மீகத்தில் ஈடுபட்டாலும், மனதை உலகத்துடன் இணைக்கும்போது, அது பாசாங்குத்தனம் .
இறுதியாக சொல்ல வேண்டுமானால்,
உண்மையான யோகி சோம்பி இருக்க மாட்டான். விதிக்கப்பட்ட செயல்களை செய்துக்கொண்டு பலனை எதிர் பார்க்காது,இறைசிந்தனையை மட்டும் தன் சிந்தையில் நிறுத்திக் கொண்டு,இந்த உலகில் மற்றவர்களுடன் கலந்து வாழ்ந்துக்கொணடிருப்பவனே யோகி.
போகியாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாமும் யோகியாவதற்க்கு முயர்சிகள் செய்து, சிறு வயது முதற்கொண்டே நம் பிள்ளைகளை வளர்த்தால் , ஆயிரத்தில் ஒரு யோகியாவது இச்சமுதாயம்உயர கிடைக்கமாட்டானா?

Comments
Post a Comment