மாற்றங்கள்
மாற்றங்களே இல்லா உலகினை நாம் பார்க்க முடிகிறதா? இல்லையே! மாற்றங்கள் எல்லா உயிரினங்களிலும் இடைவிடாது நடந்துக்கொண்டே தானே இருக்கிறது.? விதையில் ஏற்படும் மாற்றம் வேராக,பின்பு மரமாகி நிற்கவில்லையா? குழந்தையின் மாற்றம் நாளை மனிதன். இன்றைய தோல்வி நாளைய வெற்றி இன்றைய சேமிப்பு நாளைய முதலீடு இன்றைய துன்பம் நாளைய இன்பம். இன்றைய வலிகள் நாளைய வளர்ச்சி. அதனால் தான் என்னவோ பெரியோர்கள், ஆண்டவன் ஒரு கதவை மூடினால் இன்னொரு கதவை திறப்பான் என்றார்களோ! மாற்றங்களே மாற்றம் இல்லாதது. இவ்வுலகில் எல்லாவற்றிலும் இடைவிடாது மாற்றங்கள்நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றது. 1) மாற்றங்கள் வளர்ச்சியை கொண்டு வருகின்றது. 2)மாற்றங்கள் மனமகிழ்ச்சியை அதிகரிக்கிறது 3)மாற்றங்கள் நம்மின் உணர்ச்சிகளை மாற்றுகிறது. 4)மாற்றங்கள் நம்பிக்கையை கொடுக்கிறது. 5) மாற்றங்கள் புதிய உறவுகளை கொண்டு சேர்க்கிறது. 6) மாற்றங்கள் புதிய , புதிய அனுபவங்களை கொண்டு சேர்க்கின்றது. மிதி வண்டியில் பயணித்த நாம் இன்றைய தலைமுறையினர் ஸ்கூட்டருக்கும் ஏன் வானஊர்த்திக்கும் மாறி விட்டதை பார்க்கிறோம்...