உயிரே! உடம்பே!
ஒரு செயலை செய்ய வேண்டுமானால் அதற்கு கருவி ஒன்று வேண்டுமல்லவா!. உதாரணமாக சமைக்கவேண்டுமானால்நெருப்பு,பாத்திரம்,அடுப்பு, முதலியன வேண்டும். கூட்டத்தில் உரையாற்ற ஒலி பெருக்கி வேண்டும். கருவிகளை நன்கு பராமரித்தால் தான் காரியத்தை செவ்வனே முடிக்க முடியும். உடலைப் பாதுகாத்தலே உயிரைப் பாதுகாக்கும் வழி. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். உடம்பில் நோய் வந்தால், அது மனத்தையும் சேர்த்து பாதிக்கும். வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி அகவலில், "உயிருறும் உடலையும், உடலுறும் உயிரையும் அயர்வறக் காத்தருள் அருட்பெரும் ஜோதி...' என வேண்டுகிறார். மனிதனுக்கு வாழ வீடு வேண்டும். வீடு என்று ஒன்று இருந்தால் தான் வாழ்க்கையை செம்மையாக வாழ முடியும். சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும் என்பது பழமொழி. சித்திரம் எழுதக்கூடிய சுவர் எப்படி இருக்க வேண்டும்? மேடு பள்ளமற்று சுத்தமாக இருந்தால்தான் சித்திரம் காண்போர் கண்ணை கவரக்கூடியதாக அமையும். எல்லா உயிரினங்களுக்கும் உடல் என்ற ஒன்று உண்டு. அது நம் உயிர் பிரியும் வரை நம்முடனே இருந்து பல பணிகளை செய்கிறது. முக்கியமாக நம...