Posts

நம்மில் ராமாயணம்

Image
  ராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் 1)ராமர்--பரமாத்மா,இவ்வுலகில் ஒருவன் எப்படி வாழ வேண்டும் என்பதனை வாழ்ந்துகாட்டிய மகான்.  2)சீதை--ஜீவாத்மா 3)ராவணனன்---மனம் 4)அனுமன்--------குரு. சரி, இக்கதாபாத்திரங்கள் எவ்வாறு நம்மோடு பொருந்தும்? ராவணனின் மனம் ஆசையால் அலைகழிக்கப்படுகிறது.ராவணனுக்கு, பலர் பிறன் மனையை விழைவது தவறு,சிறை பிடித்தது தவறு என்று எடுத்யுரைகின்றனர். கேட்டானா? இல்லையே! மனதுள்ளே இருந்த  ஆசை, ஆங்காரமாய் எழுந்து நின்று , உற்றார் ஒவ்வொருவரையும் இழக்க வைக்கிறது.  ஜீவாத்மாகிய நம் மனமும்,கட்டுப்பாட்டை இழந்து ஆசை வலையில் அகப்பட்டு இங்கும் அங்கும் அலைகழிக்கப்பட்டு துன்புறுகிறது. ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் தகுதியுள்ள ஒருவன் இலட்ச ரூபாய்க்கு ஆசைபடுகிறான்.அதற்காக போகாத வழிக்கெல்லாம் போய் அல்லலுற்று இருப்பதையும் இழந்து தவிக்கிறான்." நான் அதிர்ஷ்டமில்லா பாபி,எனக்கு மட்டும் ஏன் இந்த கஷ்டம்" என்று அரற்றுகிறான். நாம் எல்லோரும் இறைவனின் வீட்டில் வாடகைக்குஇருப்பவர்கள் தான்.வந்தவேலை முடிந்தவுடன்,புறப்படும்போது,காதருந்த ஊசியைக்கூடநம்முடன் கொண்டு செல்ல முடியாது,என்பதை எல்லோரும...

பெண்

Image
பெண்ணின் நிலை:- பெண்ணின்நிலை சமூகத்தில் நான்காக பிரிக்கப்படலாம் . 1)வேத காலத்தில் 2) இடைபட்ட காலத்தில் 3) 19-ம்நூற்றாண்டில் 3) இன்றைய காலத்தில் வேத காலம்:- பெண்கள் அறிவிற்சிறந்தவர்களாக , ஆண்களுக்கு நிகராக,அவர்களுடன் சரிசமமாக வாதம் செய்யும் உரிமையையும் , தகுதியையும் பெற்றிருந்தனர். கணவனிடம் இம்மைக்குஉதவும் செல்வத்தை விட மறுமையில் உதவும் ஞான செல்வமே பெரிது என வேண்டி பெற்றவள் மைத்ரேயி என்ற மங்கை.ஆண்களும் தயங்கிய கூட்டத்தில் தைரியமாக எதிர்த்து வாதாடியவர் கார்கி என்ற காரிகை.பெண்கள் வேத காலத்தில் இரு பிரிவுகளாக இருந்தனர். 1)திருமணத்திற்கு முன்பாக வேதத்தை கற்றவர். 2)வேதம் கற்றுக்கொள்வதற்காகவே திருமணம்செய்துக்கொள்ளாதவர்கள். வேதத்தை கற்றதனால் அந்த காலத்தில் , நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும்.... உடையவர்களாக பாரதியின் புதுமை பெண்ணாக திகழ்ந்தனர்.அவர்கள் தேவியின்அம்ஸமாகவேகருதப்பட்டனர். இடைபட்ட காலம்:- அந்நியர்படையெடுப்பு கலாசாரமாற்றம்தலைதூக்கியகாலம்.இக்காலகட்டத்தில் கூட வேதம் கற்பதற்கு உரிமை மறுக்கப்பட்டதே ஒழிய மற்ற எந்த உர...

நமசிவாய

Image
மனிதனுக்குஇருதயம்எவ்வளவுமுக்கியமோஅவ்வளவு முக்கியம் இந்த நமசிவாய மந்திரம். மந்திரங்களிலேயே தலையாயது. அதனால் தான் மணிவாசகரரும் சிவபுராணத்தை நமசிவாய வாழ்க என்று தொடங்குகிறார். நமசிவாய வேறு சிவன் வேறு அல்ல. இறைவனை விட இறை நாமத்திற்கு மகிமை அதிகம். இந்த பிரபஞ்சத்தில் உள்ள  அதிர்வலைகள் இம்மாதிரியான மந்திர ஓசையை கிரஹித்து நல்ல நேர்மறை எண்ணங்களை நம் சிந்தையில் சேர்க்கின்றன. நேர்மறை எண்ணங்கள் வளர,வளர ஆன்மா சுத்தி யடைந்து யாருக்கும் தீங்கு செய்யா மனநிலை வளர்கிறது.நன்மையே செய்யும் மனநிலைவளர்ந்தால்,நம்மனமஅமைதியடைகிறது. அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை விட பெரிய சொத்து ஒன்றும் இவ்வுலகில் கிடையாது.ஆகவே கிடைத்தற்கரிய பெரிய சொத்துஇம்மகாமந்திரத்தில்தான்அடங்கியுள்ளது. நமசிவாயத்தைஉருவேற்றுவதுஎங்ஙனம்? நமசிவாயத்தை உண்ணும் போதும், உறங்கும்போதும்,நின்றாலும்,நடந்தாலும்,மென்றாலும்துயின்றாலும்,இடைவிடாது ஜெபிக்க,ஜெபிக்க அது நம் உணர்வில் ஊறி,ஊறி எந்த வேலை செய்துக்கொண்டிருந்தாலும் அந்நாமம் நம் நாவில் ஒட்டிக்கொண்டுவிடும்.  அவன் மலர் பாதம் ஒன்றே நம் நெஞ்சில் நிலைத்து நின்றுவிடும். பலன்கள்:- 1)யார் நம்மை அலட...

ஓம்

Image
  மனிதன் வளர,வளர எண்ணங்களும் வளர்கின்றன. தன் எண்ணங்களை பிறர்க்கு தெரிவிக்க சப்தங்கள் உதவுகின்றது. சில சத்தங்கள் சொற்களாக உருமாறி மொழியாக வடிவெடுக்கிறது.சப்தங்கள்வேறுபட,வேறுபடமொழியும்வேறுபடுகின்றதுகுறிப்பிட்டமொழியைஉபயோகப்படுத்தாது,வெறும்சப்தத்தாலேயே பிராணிகளிடமும் ,பறவைகளிடமும் உரையாடலாம். அந்த சப்தத்தை அவைகளும் புரிந்துகொண்டுஎதிர்வினையாற்றுகின்றன.அதனால்தான் நம் முன்னோர்கள் மந்திர ஓசைக்கு நல்லவிளைவுகள் உண்டு என்று சொல்லி வைத்தார்கள். மந்திர ஓசை உள்ள இடத்தில் எந்த எதிர்மறை எண்ணங்களும் செயல்படாது,மாறாகநேர்மறைஎண்ணங்களே வளரும். ஓம் என்ற பிராணமந்திரம்  மந்திரங்களிலேயே தலையாயது.மகன் தந்தைக்கு உபதேசம் செய்த மகா மந்திரம். அ+உ+ம்=ஓம் அ-உயிர் உ-முயர்ச்சி ம்-ஒடுக்கம் அ-உயிர் - அன்னையின் கருவறையில் உருவாகும் கருவிற்கு உயிர்கொடுப்பது இறைவன்.இவனுக்கு தோற்றமும் இல்லை , மறைவும் இல்லை.பந்தமும் இல்லை பாசமும் இல்லை.அதனால் தான் நாபியிலிருந்துவாய் வழியாக "அ" என்னும் ஓசை வெளி வரும் போது எதனுடனும் ஒட்டுவதில்லை. உ-முயர்ச்சி :-முயற்சி இருந்தால்தான் வளர்ச்சி இருக்கும்.உதடுகளை குவித்தால்தான் உ  என்...

உன் வாழ்க்கை உன் கையில்

Image
         ஆம்! இன்றைய பொழுது போனது, போனதே!  எவ்வளவு அழுது புரண்டாலும் இன்று பேசின பேச்சை நாளை திரும்ப வாங்க முடியாது. நாளை என்ன நடக்கும் என்பதும் தெரியாது. அதனால் தான் நாம் பேசுமுன் பல முறை யோசித்து வார்த்தைகளை  வெளியில் விட வேண்டும். வாழ்க்கை என்பது என்ன? யாரால் அது தீர்மானிக்கப்படுகிறது? பிறப்பு தான் நம் கையில் இல்லை,ஆனால் வாழ்க்கையோ நம் கையில் தான் உள்ளது! அது எப்படி? இந்த உலகம் இயங்க வேண்டுமெனில் செயல்கள்இருக்கவேண்டும்.நம்மூலமாகத்தான் ஆண்டவன் செயல்களை செய்விக்கிறான். நாம் எல்லோரும் கடவுளின் செயல்களை செய்யும் கருவிகளே!எவன்இதைஉணர்ந்துசெயல்களைசெய்கிறானோ, அவனுக்கு இனிமையான வாழ்க்கையை இறைவன் பரிசளிக்கிறான். வாழ்க்கை இனிமையாக அமைய மிக முக்கியமான விஷயங்கள் மூன்று:- 1)செய்யும் செயல்களில் ஊக்கமும் , ஈடுபாடும். 2)நம்மை சுற்றியுள்ளவர்களிடத்து அன்பும் , ஆதரவும் 3)     ஈசன் திருவடிகளில் சரணம். நாம் செய்யும் செயல்கள் எப்படி இருக்க வேண்டும்? படிக்கும் படிப்பாகட்டும்,செய்யும் தொழிலாகட்டும், நம்மனம் எந்த துறையில்  ஈடுபாடு கொண்டுள்ளதோ அந்த துறையை ...

எண்ணங்களின் வலிமை

Image
  நம் மனதில் எழும் எண்ணங்கள் ஆயிரம்,ஆயிரம்.இதில் எந்த எண்ணம் நம் தூக்கத்தை கெடுக்கிறதோ,எந்த எண்ணம் நம் மனதை முழுதும் ஆக்ரமித்துள்ளதோ அது நல்ல எண்ணமாக இருந்தாலும் சரி,இல்லை கெட்ட எண்ணமாக இருந்தாலும் சரி அதற்கே வலிமை அதிகம். ஒரு எண்ணம் செயல் வடிவம் எடுத்து அதன் பலனை கொடுப்பதற்கு இரண்டு விஷயங்கள்  தேவை. 1) மனதில் தெளிவும் 2)விடா முயற்சியும்,மன உறுதியும். வினை திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற. எண்ணியஎண்ணியாங்குஎய்துபஎண்ணியார் திண்ணியராகப்பெறின். எண்ணங்களின் ஓட்டமே ஆசையாக வடிவெடுக்கிறது. ஆசை துன்பத்திற்கு மட்டும் காரணமாகாது,இன்பத்திற்கும் அதுவே காரணம் என்பதை அறிய வேண்டும். துன்பத்திற்கு காரணமான ஆசைகளை வளர்க்கும் எண்ணங்களை வளர விடாது முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். மாறாக இன்பம் தரக்கூடிய எண்ணங்களை வளர்க்க வேண்டும். அரசியலில் ஈடுபட்ட ஒருவனுக்கு குறுகிய காலத்திலேயே பணம்,பதவி,புகழ் வருகிறது என்று வைத்துக்கொள்வோம்.உடனே நானும் தான் மாறவேண்டும் என்ற தகாத எண்ணத்தை வளர விட்டால்,அது கிடைக்காத பட்சத்தில்எஞ்சுவதுஏமாற்றமும்,பணவிரயமும்தான். அதேசமயத்தில் ஒருவன் தன்னிலும்...

குணம்

Image
ஒருவருடைய குணங்கள் தான் அவருடைய இயல்பு என்ன என்பதை காட்டுகிறது.குணங்கள் எண்ணிலடங்காதிருப்பினும் அவைகளை மூன்றாக பிரித்தனர் நம் முன்னோர்கள்.அவை, 1) ரஜோ குணம் 2)தமோ குணம் 3)சத்வ குணம் இந்த மூன்றில் ஒரு குணத்துடன்தான் நாமெல்லாம் பிறக்கிறோம். இதைத்தான் பிறவிகுணம் என்கிறோம். இதை சிறிய உதாரணத்துடன் விளக்கலாமா! ஏழை ஒருவன் பசியால் வாடி வேலை ஒன்றும் கிடைக்காமல் திண்டாடிக்கொண்டிருக்கும் போது அவனைப்பார்த்து இரக்கமில்லாது , "நீ வாங்கி வந்த வரம் அப்படி! பேசாமல் எங்கேயவது மடத்தில் சேர்ந்து விடு,சோறாவது கிடைக்கும்".இது இரக்கமில்லாது பேசுபவர்கள் ரஜோ   குணத்தவர்.ஏன் இப்படி இரக்கமே இல்லாது பேசுகிறாய் என்று கேட்டால்,அவர்களிடம் சண்டை போடுவர்.இவர்கள் எப்போதும் சுறுசுறுப்பாகவேஇருப்பார்கள்.பேச்சிலும்,செயல்களிலும் வீச்சும்,வேகமும் இருக்கும். இரண்டாவது வகையினர் ,யார் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் கண்டுக்கவே மாட்டார்கள்.எந்த இழப்பு யாருக்கு ஏற்பட்டாலும் இவர்கள் கண்டுக்கவே மாட்டார்கள் . கும்பகர்ணன் போல சாப்பிடுவதில்,தயங்குவதில்லை மிகுதியான சோம்பலிலேயே வாழ்நாளை கழிப்பர்.இவர்கள் தமோ குணத்தவர். மூன்றாம் வகையின...