ஓம்
மனிதன் வளர,வளர எண்ணங்களும் வளர்கின்றன. தன் எண்ணங்களை பிறர்க்கு தெரிவிக்க சப்தங்கள் உதவுகின்றது. சில சத்தங்கள் சொற்களாக உருமாறி மொழியாக வடிவெடுக்கிறது.சப்தங்கள்வேறுபட,வேறுபடமொழியும்வேறுபடுகின்றதுகுறிப்பிட்டமொழியைஉபயோகப்படுத்தாது,வெறும்சப்தத்தாலேயே பிராணிகளிடமும் ,பறவைகளிடமும் உரையாடலாம். அந்த சப்தத்தை அவைகளும் புரிந்துகொண்டுஎதிர்வினையாற்றுகின்றன.அதனால்தான் நம் முன்னோர்கள் மந்திர ஓசைக்கு நல்லவிளைவுகள் உண்டு என்று சொல்லி வைத்தார்கள். மந்திர ஓசை உள்ள இடத்தில் எந்த எதிர்மறை எண்ணங்களும் செயல்படாது,மாறாகநேர்மறைஎண்ணங்களே வளரும்.
ஓம் என்ற பிராணமந்திரம் மந்திரங்களிலேயே தலையாயது.மகன் தந்தைக்கு உபதேசம் செய்த மகா மந்திரம்.
அ+உ+ம்=ஓம்
அ-உயிர்
உ-முயர்ச்சி
ம்-ஒடுக்கம்
அ-உயிர்- அன்னையின் கருவறையில் உருவாகும் கருவிற்கு உயிர்கொடுப்பது இறைவன்.இவனுக்கு தோற்றமும் இல்லை , மறைவும் இல்லை.பந்தமும் இல்லை பாசமும் இல்லை.அதனால் தான் நாபியிலிருந்துவாய் வழியாக "அ" என்னும் ஓசை வெளி வரும் போது எதனுடனும் ஒட்டுவதில்லை.
உ-முயர்ச்சி:-முயற்சி இருந்தால்தான் வளர்ச்சி இருக்கும்.உதடுகளை குவித்தால்தான் உ என்ற ஓசையே வரும் . முயர்ச்சி என்பது மனிதனால்எடுக்கப்படும் செயல்.ஒவ்வொரு மனிதனுக்கும் நல்லபடியாக வாழ அவன் மேற்கொள்ளும் முயர்ச்சி காரணமாக அமைகிறது. எடுத்த காரியங்களுக்கும் இலக்கையடைய உழைக்க வேண்டும்.ஒரு வீடு கட்ட நினைப்பு இருந்தால் மட்டும் பத்தாது,அதற்கு உண்டான பணம் சம்பாதிக்க வேண்டும்.
ம்-ஒடுக்கம்:- ம் சத்தத்தில் எந்த அசைவும் இல்லை.நாக்கு,உதடுகள் எதுவும் அசைவதில்லை. ,கடமைகள் முடிந்து இறைவையடையும்போது அவனுள் இந்த ஜீவாத்மா இறைவனை நெருங்கும் போது எந்த ஓசையும் காதிற்கு கேட்பதில்லை. சப்த நாடியும் அடங்கி மௌனமே எஞ்சுகிறது. வார்த்தையில் வருணிக்க முடியாத ஆனந்தத்தையே உணருகிறோம். இந்த உணர்விலிருந்து வெளியே வர மனதை கீழ்நிலையில் இறக்கினால் ஒழிய முடிவதில்லை. ஸ்ரீராமகிருஷ்ணர் இந்த சமாதி நிலையிலிருந்து வெளியேறவதற்கு மற்றவர்கள் அவர் காதில் இறைவனின் திருநாமத்தை ஓதுவார்கள்.இவரும் குடிப்பதற்கு ஏதாவது தருமாறு கேட்பார்.
ஆகவே இந்த ஓம் என்ற மந்திரம் தன்னுள் அடக்கி செயல்படுவது.இதை ஓயாமல் ஓதினால் நாம் கடவுளை அடைவது உறுதி.
Comments
Post a Comment