உன் வாழ்க்கை உன் கையில்
ஆம்! இன்றைய பொழுது போனது, போனதே!
எவ்வளவு அழுது புரண்டாலும் இன்று பேசின பேச்சை நாளை திரும்ப வாங்க முடியாது. நாளை என்ன நடக்கும் என்பதும் தெரியாது. அதனால் தான் நாம் பேசுமுன் பல முறை யோசித்து வார்த்தைகளை வெளியில் விட வேண்டும்.வாழ்க்கை என்பது என்ன? யாரால் அது தீர்மானிக்கப்படுகிறது?
பிறப்பு தான் நம் கையில் இல்லை,ஆனால் வாழ்க்கையோ நம் கையில் தான் உள்ளது! அது எப்படி?
இந்த உலகம் இயங்க வேண்டுமெனில் செயல்கள்இருக்கவேண்டும்.நம்மூலமாகத்தான் ஆண்டவன் செயல்களை செய்விக்கிறான். நாம் எல்லோரும் கடவுளின் செயல்களை செய்யும் கருவிகளே!எவன்இதைஉணர்ந்துசெயல்களைசெய்கிறானோ, அவனுக்கு இனிமையான வாழ்க்கையை இறைவன் பரிசளிக்கிறான்.
வாழ்க்கை இனிமையாக அமைய மிக முக்கியமான விஷயங்கள் மூன்று:-
1)செய்யும் செயல்களில் ஊக்கமும் , ஈடுபாடும்.
2)நம்மை சுற்றியுள்ளவர்களிடத்து அன்பும் , ஆதரவும்
3) ஈசன் திருவடிகளில் சரணம்.
நாம் செய்யும் செயல்கள் எப்படி இருக்க வேண்டும்?
படிக்கும் படிப்பாகட்டும்,செய்யும் தொழிலாகட்டும், நம்மனம் எந்த துறையில் ஈடுபாடு கொண்டுள்ளதோ அந்த துறையை தேர்ந்தெடுத்து வினையாற்றினால் ஒழிய வாழ்க்கைசுவாரசியமாகஅமையாது.செய்யும்
தொழில் ஈடுபாடு இருந்தால் தான் வாழ்வில் முன்னேற்றத்தைகாணமுடியும்.அப்படியில்லாது மற்றவர்களின் விருப்பதற்கோ, அல்லது ஆலோசனை பேரிலோ செயல்பட்டால் வெற்றி என்பது எட்ட நின்று வேடிக்கைதான் பார்க்கும்.நம் வாழ்க்கை பாலைவனமாவதோ, சோலைவனமாவதோ, நம் கையில் தான் உள்ளது.புவியியலில்ஈடுபாடுகொண்டமாணவனை,கணிதத்தில் சேர்த்து விட்டால் ஈடுபாடு எவ்வாறு வரும்?புரியாத பாடத்தை படித்தால் சோம்பலில்லாது,தகாத பழக்கங்களும் தான் வளரும்.பின்பு அவனது வாழ்க்கை மட்டும் நரகமாகாது,அவனை சேர்ந்திருப்பவர்களின் வாழ்க்கையும் நரகமாகும்.
வாழ்வாங்கு வாழ்வதற்கு நம்மைசுற்றியுள்ள யா வரிடத்திலும் அன்பாகவும்,ஆதரவுடனும் பழகவேண்டும். அன்பு உள்ளாரிடத்து தர்மமும் இருக்கும்.
"அன்புஈனும் ஆர்வம்உடைமைஅதுஈனும்
நண்பன்னும் நாடா சிறப்பு."
அன்பு நட்பை வளர்க்கும்.நற்பெயரை சம்பாதித்து கொடுக்கும்.
நாம் நம்மை சுற்றியுள்ளோரை
மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டாலே நம் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
கோபமும்,பொறாமையும் நம் அமைதியான வாழ்க்கைக்கு ஜென்ம எதிரிகள். சற்றே நினைத்து பாருங்கள்.குழந்தைகள் தவறு செய்வது சகஜமான ஒன்று.ஒரு பொருளை கவனக்குறைவால் உடைத்துவிடுகிறான் அல்லது தொலைத்தோ விடுகிறான். உடனே கோபம் கொண்டு அடித்து விட்டால் ,இழந்த பொருள் கிடைத்து விடுமா? ஒரு காலும் இல்லை. மாறாக குழந்தை பயத்தினால் உங்களிடமிருந்துவிலகிசென்றுவிடும்.பயத்தினால் தன்னம்பிக்கை இழந்து வாழ்க்கையின் வளர்ச்சி குன்றி விடும். வீட்டில் கோபம் கொண்டவர்கள் இருந்தால் கலகலப்பு குறைந்து ஒருஇறுக்கமான சூழ்நிலையே நிலவும்.ஆகவே மகிழ்ச்சியான உறவு வளர்வதற்கு கோபத்தை அண்ட விடக்கூடாது.
அதே போல் நாம் பிறரைப் போல வாழ ஆசைப்பட்டால் நம் நிம்மதி சுத்தமாக போய்விடும். நட்பு வட்டாரம் சுருங்கிவிடும்.
ஈசன் திருவடிகளில் சரணம்.
நம்சுற்றத்தார்மதிக்கவேண்டும்என்பதற்காகவும்,அவர்களைப் போல வசதியாக வாழ வேண்டும் என்பதற்காக கவலை பட்டால் உன் சந்தோஷம் விலகி விடும்.மனிதப்பிறவி எடுத்தது மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கே! கவலை பட்டு ஆரோக்கியத்தை கெடுத்து கொள்ள இல்லை.
தெய்வம் உண்டு என்பதற்கான ஆதாரங்கள்:-
1)குழந்தை எப்படி பிறக்கிறது?
ஆண் பெண் சேர்க்கையின் என்ற பதில் தான் எல்லோரும் குடுப்பார்கள். ஆனால் உருவாகும் பிண்டத்திற்கு உயிர் கொடுப்பது யார்?
நம் இதயத்தை இயங்க வைக்கும் சக்தியே பிண்டங்கள் அனைத்திற்கும் உயிர் கொடுக்கிறது . அந்த சக்தியே இறைவன்.விதை செடியாக பூமியை கிழித்துக் கொண்டு வருவதும் அந்த சக்தியால் தான்.பூமியின் ஒவ்வொரு இயக்கமும் இறைவனின் அருளால் நடக்கும் போது நம் வாழ்க்கை மட்டும் எவ்வாறு நம்மால் தீர்மானிக்க முடியும்?
பிறவி எடுப்பதும் இறைவனால் தான். அது நற்பிறவியாக அமைய வேண்டுமானால் போன பிறவியில் நல்ல கர்மாக்களை செய்திருக்க வேண்டும். தீய கர்மாக்களின் தாக்கம் குறைய வேண்டுமெனில் இறைவனிடம் தஞ்சம் அடைவதைவிட வேறுவழியில்லை.வாழ்க்கையில் சந்தோஷப்படுவதற்கு எத்தனையோ விஷயங்களை இறைவன் கொடுத்திருக்கிறான் , அதையெல்லாம் விட்டு,விட்டு நமக்கு கிடைக்காத ஒன்றை நினைத்து ஏங்கி,ஏங்கி இருக்கும் சந்தோஷத்தை தொலைத்து விடுவது புத்திசாலிதனமாகுமா?
அவன் ஒருவனே வினைகளை வேரருக்க வவ்லான்.எனவே நம் வாழ்க்கையை அவனிடத்தில் கொடுத்து விட்டால் , நம் வாழ்வு வளம் பெற என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வைப்பான்.
Comments
Post a Comment