Posts

Showing posts from October, 2026

பொறாமை

Image
டேய்! இங்கே பாருடா! அவனுக்கும் உன் வயசு தானே! எப்படி படித்து நல்ல மதிப்பெண்களை பெற்று எல்லோருக்கும் பிடித்தவனாக இருக்கிறான்!நீ ஏன்டா இப்பிடி  இருக்கிறே!இப்படிபட்ட வார்த்தைகள் தான் பொறாமைக்கு வித்தாக அமைகிறது.  பொறாமை என்பது நாம் பிறக்கும் போதே நம்முடன் பிறப்பதில்லை . அது பிறரது அறியாமையால் விதைக்கப்படுகிறது. நீங்களே யோசியுங்கள். எந்த தாயோ,தந்தையோ தன் குழந்தை பொறாமையுடன்இருக்கவேண்டும் என்றா விரும்புகிறார்கள்? நிச்சியமாக இல்லவே இல்லை.அவர்கள் எதிர் பார்ப்பதெல்லாம் தன் குழந்தைகள் பிறர் மெச்சும்படிவளரவேண்டும் என்பதை  தவிர வேறொன்றுமில்லை. அதனால் தான் மற்ற குழந்தையுடன் ஒப்பிட்டாலாவது போட்டி  மனப்பான்மையால் தன் குழந்தையும் நன்றாக இருக்கும் என்றஆசையால் இந்த தவறை செய்கிறார்கள். அடிக்கடி மாற்றார் குழந்தையை பாராட்டும் போது இந்த குழந்தை தன் செயலை ஏன் பாராட்டுவதில்லை என்று ஏங்குகிறது,காலபோக்கில் பொறாமை என்ற தீ  எதிரியின் மீது வளர ஆரம்பித்து விடுகிறது. இந்த குணம் வளர விடாமல் பார்த்துக் கொள்வது வளர்ந்தவர்களின் கடமை என்பதை உணர வேண்டும். எப்படி? ஆண்டவன் இவ்வுலகத்திற்கு அனுப்பும்...