குணம்


ஒருவருடைய குணங்கள் தான் அவருடைய இயல்பு என்ன என்பதை காட்டுகிறது.குணங்கள் எண்ணிலடங்காதிருப்பினும் அவைகளை மூன்றாக பிரித்தனர் நம் முன்னோர்கள்.அவை,

1) ரஜோ குணம்

2)தமோ குணம்

3)சத்வ குணம்

இந்த மூன்றில் ஒரு குணத்துடன்தான் நாமெல்லாம் பிறக்கிறோம். இதைத்தான் பிறவிகுணம் என்கிறோம்.

இதை சிறிய உதாரணத்துடன் விளக்கலாமா!

ஏழை ஒருவன் பசியால் வாடி வேலை ஒன்றும் கிடைக்காமல் திண்டாடிக்கொண்டிருக்கும் போது அவனைப்பார்த்து இரக்கமில்லாது , "நீ வாங்கி வந்த வரம் அப்படி! பேசாமல் எங்கேயவது மடத்தில் சேர்ந்து விடு,சோறாவது கிடைக்கும்".இது இரக்கமில்லாது பேசுபவர்கள் ரஜோ  குணத்தவர்.ஏன் இப்படி இரக்கமே இல்லாது பேசுகிறாய் என்று கேட்டால்,அவர்களிடம் சண்டை போடுவர்.இவர்கள் எப்போதும் சுறுசுறுப்பாகவேஇருப்பார்கள்.பேச்சிலும்,செயல்களிலும் வீச்சும்,வேகமும் இருக்கும்.

இரண்டாவது வகையினர் ,யார் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் கண்டுக்கவே மாட்டார்கள்.எந்த இழப்பு யாருக்கு ஏற்பட்டாலும் இவர்கள் கண்டுக்கவே மாட்டார்கள் . கும்பகர்ணன் போல சாப்பிடுவதில்,தயங்குவதில்லை மிகுதியான சோம்பலிலேயே வாழ்நாளை கழிப்பர்.இவர்கள் தமோ குணத்தவர்.

மூன்றாம் வகையினர் எல்லோரும் விரும்பப்படும் விதத்திலே இணக்கமாக இருப்பர்.யாருக்கும் எந்த தீங்கும் செய்ய மாட்டார்கள்.இவர்கள் சத்வ குணத்தவர்.இந்த சுபாவம் எப்படிமனிதனுக்குபிறவியிலே வருகின்றது என்றால், அவர்களது முற்பிறவி வினைப்பயனால் வருகின்றது என்று சான்றோர் கூறுகின்றனர்.இதைத்தான் வாசனை என்கிறோம்.நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் அப்படியே சித்தத்தில் பதிவுகளாக பதிந்துவிடுகிறது.நிறைவேறாத செயல்கள் தான் இப்பிறவியில் ஆசையாக மனதில் உருவெடுக்கிறது. ஆசை அதிகம் ஆக,ஆக அதை அடையும் செயல்பாடுகளும் அதிகரித்துக்கொண்டே போகிறது.

ஆசை  என்பது நம் மனத்தில் உள்ள மலம்.நா ம் உண்ணும் உணவில் சத்துக்கள்  உறுஞ்சப்பட்டுவேண்டாத கழிவு மலமாக மாறுவதைப்போல நாம் கேட்கும் விஷயங்களிலும் வேண்டாத  விஷயங்கள் மலமாக நம் உள்ளத்தில் தங்கி விடுகின்றன.உடலுக்கும் உள்ளத்திற்கும் ஊறு விளைவிப்பது மனமே. மனதின் மலமே வேண்டாதஆசையாகஉருவெடுக்கிறது.வேண்டாத ஆசை பெருக,பெருக ரஜோ குணம் பெருகுகிறது.

சரி, ரஜோ,தமோ குணம் நீங்கி சத்வ குணம் வளர  நாம்  நாஎன்ன செய்ய வேண்டும்? நாம் நம் மன ஆசைகளை அடக்க முயல வேண்டும். அது நமக்கு இறைவன் கொடுத்த கொடையான அறிவினால்தான் முடியும்







.

Comments

Post a Comment

Popular posts from this blog

பீஷ்மம்

அலகிலா விளையாட்டுடையான்

தவம் என்பது யாதெனில்........