நமசிவாய
அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை விட பெரிய சொத்து ஒன்றும் இவ்வுலகில் கிடையாது.ஆகவே கிடைத்தற்கரிய பெரிய சொத்துஇம்மகாமந்திரத்தில்தான்அடங்கியுள்ளது.
நமசிவாயத்தைஉருவேற்றுவதுஎங்ஙனம்?
நமசிவாயத்தை உண்ணும் போதும், உறங்கும்போதும்,நின்றாலும்,நடந்தாலும்,மென்றாலும்துயின்றாலும்,இடைவிடாது ஜெபிக்க,ஜெபிக்க அது நம் உணர்வில் ஊறி,ஊறி எந்த வேலை செய்துக்கொண்டிருந்தாலும் அந்நாமம் நம் நாவில் ஒட்டிக்கொண்டுவிடும்.
அவன் மலர் பாதம் ஒன்றே நம் நெஞ்சில் நிலைத்து நின்றுவிடும்.
பலன்கள்:-
1)யார் நம்மை அலட்சியபடுத்தி இகழ்ந்தாலும் அது நம் மனதை பாதிக்காது.
2)மனதில் ஆழ்கடல் அமைதியை உணர முடியும்.
3) பகைமையை ஒழிக்கும்.தீங்கு செய்வாரிடம்
போக விடாது ஒதுங்கியிருக்கச்செய்யும்.
4)இவ்வுலக பற்றினை அறுக்கும். செய்யும் கடமைகளை பற்றின்றி செவ்வனே செய்ய வைக்கும்.
5)நல்லது,தீயதை பிரித்து பார்க்கும் வலிமையை கொடுக்கும்.
6) உயிரினங்கள் யாவற்றிலும் இறைவனை காண வைக்கும். அன்பின் மகத்துவத்தை புரிய வைக்கும்.
7)மனத்தில் உள்ள குற்றங்கள் யாவையையும் நீக்கிவிடும்.
8) ஆசையையருத்து துன்பமில்லா இன்ப வாழ்க்கையை பரிசாக கொடுக்கும்.
9)பகைவனையும் தன் சுற்றமாக பார்க்கும் மனநிலையை அருளும்
10)இறுதியாகநம்கையில்ஒன்றுமில்லை,நாம் இறைவனின் திட்டத்தை செயல்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஒரு கருவியே என்ற பேருண்மையை உணர வைக்கும்.
ஓம் நமசிவாய!
Informative and. Short and sweet 🙏🙏
ReplyDelete