பெண்
பெண்ணின் நிலை:-
பெண்ணின்நிலை சமூகத்தில் நான்காக பிரிக்கப்படலாம்.
1)வேத காலத்தில்
2) இடைபட்ட காலத்தில்
3) 19-ம்நூற்றாண்டில்
3) இன்றைய காலத்தில்
வேத காலம்:-
பெண்கள் அறிவிற்சிறந்தவர்களாக , ஆண்களுக்கு நிகராக,அவர்களுடன் சரிசமமாக வாதம் செய்யும் உரிமையையும் , தகுதியையும் பெற்றிருந்தனர். கணவனிடம் இம்மைக்குஉதவும் செல்வத்தை விட மறுமையில் உதவும் ஞான செல்வமே பெரிது என வேண்டி பெற்றவள் மைத்ரேயி என்ற மங்கை.ஆண்களும் தயங்கிய கூட்டத்தில் தைரியமாக எதிர்த்து வாதாடியவர் கார்கி என்ற காரிகை.பெண்கள் வேத காலத்தில் இரு பிரிவுகளாக இருந்தனர்.
1)திருமணத்திற்கு முன்பாக வேதத்தை கற்றவர்.
2)வேதம் கற்றுக்கொள்வதற்காகவே திருமணம்செய்துக்கொள்ளாதவர்கள்.
வேதத்தை கற்றதனால் அந்த காலத்தில் ,
நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும்.... உடையவர்களாக பாரதியின் புதுமை பெண்ணாக திகழ்ந்தனர்.அவர்கள் தேவியின்அம்ஸமாகவேகருதப்பட்டனர்.
இடைபட்ட காலம்:- அந்நியர்படையெடுப்பு கலாசாரமாற்றம்தலைதூக்கியகாலம்.இக்காலகட்டத்தில் கூட வேதம் கற்பதற்கு உரிமை மறுக்கப்பட்டதே ஒழிய மற்ற எந்த உரிமையும் மறுக்கப்படவில்லை.
கணவனுக்கு உறுதுணையாக தான் இருந்தாள். அவர்களுக்கு துணைநின்றுபெருமைசேர்த்தனர்.ராமாயணத்தில்சீதை,மண்டோதரி,தாரை,போன்றோரின் வாழ்க்கையை பார்க்கும் போது இது விளங்கும்.
சீதை ஒருநிமிடத்தில் ராவணனை அழித்திருக்கதிருக்க முடியும். ஆனால் அவள் அப்படி செய்திருந்தால் ராமனுக்கு ராவணனை வென்றபெருமைவந்திருக்காது
மண்டோரி
இராவணன் சீதையை சிறை பிடித்திருந்த போதும் அவனை வெறுக்கவில்லை,மாறாக போரில் இறந்த தன்கொழுநன் மீது விழுந்து கதறுகிறாள்.ராமனிடத்தில் கேள்விகணைகளை தொடுக்கிறாள்.
அகலிகை தான் செய்ததது குற்றமில்லை என்று தெரிந்தும் கணவனின்சாபத்தைஏற்றுக்கொள்கிறாள்.இந்த பணிவுதான் அவளை கற்புக்கரசியாக உயர்த்திவிடுகிறது .
கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழ்ந்த இக்கால மகளிரை பிற்காலத்தில் உலகமே கொண்டாடும் ஒழிய மூலையில் உட்கார்த்தி விடவில்லை.
சக்தியொரு பாதியாய்ச் சிவனுமொரு பாதியாய்த்
தர்மத்தில் இணைந்து வாழ்வோம்
கத்திவழி நேர்மையாய்ப் பண்புவழி மேன்மையாய்ப்
பாரெல்லாம் வணங்க வாழ்வோம்!
பள்ளியறை கொள்வதில் பரமனடி சேர்வதில்
பக்கத்தில் பங்கு கொள்வோம்!
பாதாதி கேசமும் சீரான நாயகன்
பளிச்சென்று துணைவி வாழ்க!
படுவதொரு துயரேனும் வருவதொரு சுகமேனும்
பாதியாய்த் துணைவன் வாழ்க!
தாய்வீடு விட்டபின் தன்வீடு தாய்வீடு
என்றெண்ணியே தலைவி வாழ்ந்த காலம். இந்தகாலம்.
19 ம் நூற்றாண்டில் பெண்கள்
கல்வி முழுவதுமாக பெண்களுக்கு மறுக்கப்பட்டது. மிக இளவயதிலேயே திருமணம் முடிக்கப்பட்டு,ஆணுக்கு சேவையாற்றம்,குடும்பத்தை பேசுவதும் பெண்களின் தலையாய கடமை என்று சொல்லப்பட்டது.அவர்களுக்கு எந்த உரிமையும் சமுதாயத்தில் கொடுக்கப்படவில்லை.அன்னை சாரதா தேவியின் வரலாறு இந்த இருண்ட காலத்திற்கு சிறந்த உதாரணம்.
தற்காலம்:- சொத்திலிருந்து எல்லாவற்றிலும் பெண்களுக்கு சம உரிமையுண்டு என்று சட்டமே வந்துவிட்டது.இன்றைய பெண்களிடம் ஆணுக்கு சமமாய் வாழ வேண்டும் என்ற துடிப்பு உள்ளது.ஆனால் விட்டு கொடுத்து வாழ்வதில் நாட்டமில்லை.சமஉரிமை மட்டும் வேண்டும், ஆனால் விட்டு கொடுக்க மாட்டேன் என்றால் குடும்பநல நீதிமன்றத்தில் வழக்குகள் தான் குவியும்.வயதான பெற்றோர்களை சுமையாக நினைத்தால் முதியோர் இல்லங்கள் பெருகாமல் என்ன செய்யும்?உரிமையை கேட்டு போராடுபவர்கள், கடமையை செய்யவும் தயாராக இருக்க வேண்டும்.பெண்கள் இன்று எல்லா துறைகளிலும் கால் பதித்து சிறப்பாக செயல் பட்டு வருகின்றனர்.
இன்று நாட்டின் நிதியமைச்சரே ஒரு பெண் தான் என்பதில் பெருமை கொள்கிறோம். இவ்வாறு நாட்டை ஆள்வதிலும், சட்டங்கள் செய்வதிலும் .பாரதியின் கனவு நனவாகியுள்ளது .மேலே குறிப்பிட்ட குறைகளை தவிர்த்து மனநிலையை இன்றைய பெண்கள் மாற்றிக்கொண்டால் பாரதியின்பெண்உயிர்த்தெழுவாள்.
வாழ்க பெண்மை!
Comments
Post a Comment