எண்ணங்களின் வலிமை
நம் மனதில் எழும் எண்ணங்கள் ஆயிரம்,ஆயிரம்.இதில் எந்த எண்ணம் நம் தூக்கத்தை கெடுக்கிறதோ,எந்த எண்ணம் நம் மனதை முழுதும் ஆக்ரமித்துள்ளதோ அது நல்ல எண்ணமாக இருந்தாலும் சரி,இல்லை கெட்ட எண்ணமாக இருந்தாலும் சரி அதற்கே வலிமை அதிகம். ஒரு எண்ணம் செயல் வடிவம் எடுத்து அதன் பலனை கொடுப்பதற்கு இரண்டு விஷயங்கள் தேவை.
1)மனதில் தெளிவும்
2)விடா முயற்சியும்,மன உறுதியும்.
வினை திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.
எண்ணியஎண்ணியாங்குஎய்துபஎண்ணியார்
திண்ணியராகப்பெறின்.
எண்ணங்களின் ஓட்டமே ஆசையாக வடிவெடுக்கிறது.ஆசை துன்பத்திற்கு மட்டும் காரணமாகாது,இன்பத்திற்கும் அதுவே காரணம் என்பதை அறிய வேண்டும். துன்பத்திற்கு காரணமான ஆசைகளை வளர்க்கும் எண்ணங்களை வளர விடாது முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். மாறாக இன்பம் தரக்கூடிய எண்ணங்களை வளர்க்க வேண்டும்.
அரசியலில் ஈடுபட்ட ஒருவனுக்கு குறுகிய காலத்திலேயே பணம்,பதவி,புகழ் வருகிறது என்று வைத்துக்கொள்வோம்.உடனே நானும் தான் மாறவேண்டும் என்ற தகாத எண்ணத்தை வளர விட்டால்,அது கிடைக்காத பட்சத்தில்எஞ்சுவதுஏமாற்றமும்,பணவிரயமும்தான். அதேசமயத்தில் ஒருவன் தன்னிலும் கற்றானை கண்டு காமுற்றால் அந்த எண்ணம் அவனை மேலும்மேலும் கற்க வைத்து அவனை உயர்த்தும்.
நல்ல எண்ணங்களை வளர்ப்பது எப்படி?
மனதினில் எழும் எண்ணங்களை செயலுக்கு கொண்டு வருமுன் பகுத்து ஆராய வேண்டும்.நாம் ஒருவரிடம் பேசும் போது கூட இன்ன வார்த்தைகளை பேசினால் அவருக்கு தேவையான ஆறுதல் அல்லது முன்னேற்றத்திற்கான உந்துதலோ கிடைக்கும் என்றால் பேசலாம். அதை விடுத்து நம் வார்த்தைகள் அவரை காயப்படுத்தும் என்றால் அவரிடம் பேசும் எண்ணத்தையே விட்டு விடுதல் நல்லது.
எண்ணங்கள் வளம் பெற:-
1)நல்லோருடன்நட்பை வளர்க்க வேண்டும்.
அவர்களின் செயல்களை ஊன்றி கவனிக்க வேண்டும். அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது அவசியம்.
2) ஒரு எண்ணத்தை செயல் படுத்துமுன் பெரியவர்களின் ஆசியும், அறிவுரையும் அவசியம் தேவை.
3) ஒரு எண்ணத்தை செயல் படுத்த வேண்டும் என்றால் அதை குறிக்கோளாக மாற்றுதல் நலம்.
4)குறிக்கோளை அடைய விடா முயற்சி தேவை.
5)பல எண்ணங்களை ஒரே சமயத்தில் செயல் படுத்த முயற்சிக்க கூடாது.
மாடியை அடைய பல படிக்கட்டுகள் இருந்தாலும்,கடைசி படிக்கட்டில் முதல் அடியை வைத்து ஒவ்வொரு படிக்கட்டாக ஏறினால் தான் மாடியை அடையலாம்.
6) நாம் சேரும் இடத்தைப் பொறுத்துதான் நம் எண்ணங்களும் அமையும்.
ஒலி,ஒளி அலைகள் எப்படி அதற்கான கருவிகளின் வழியே நம்மை அடைகிறது, அப்படித்தான் மற்றவர்களின் எண்ணங்களும் அவர்களின் வார்த்தைகள் நம் மனதை அடைந்து தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஆகையால் தான் நல்ல வார்த்தைகளையே கேட்டால் நமக்கும் நல்ல எண்ணங்களே உதிக்கும்.
கீழே நின்று மலையைப்பார்த்தால் அதன் மேல் இருப்பது கண்ணுக்கு தெரியாது,ஆனால் அதுவே மலைமேல் ஏறி கீழே பார்த்தால் கீழே இருப்பவை தெரியும். அது மாதிரி உயர்ந்த எண்ணங்கள் இருந்தால் நாம் கண்டிப்பாய் வாழ்வில் உயர்ந்த இடத்தைஅடையலாம்.கீழ்மையானஎண்ணங்களைதெளிவாககண்டுஅதைவிலக்கிவிடலாம்.
நல்ல எண்ணங்களை வளர்த்து வலிமை சேர்த்தால் தான் நாமும் வலிமையானவர்களாக உயர்ந்து வாழ்க்கையில் வளம் காண்போம்!!!
அருமை
ReplyDeleteThank u.
Delete