Posts

Mugangal

Image
  வாழ்க்கைஎன்பதுஎல்லோருக்கும்,எப்போதும் ஒரே மாதிரி அமைவதில்லை. அப்படித்தான் எல்லோர் முகங்களும் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அவர்கள் எதிர் கொள்ளும் சம்பவங்களுக்கு தகுந்தவாறு அவர்களின் முகங்களும் மாறுகின்றது. அகம் தூய்மையாக இருந்தால் முகமும் தூய்மையாக இருக்கும். அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்  கடுத்தது காட்டும் முகம். தூய் மையான மனதின்  சொந்தக்காரர்களின் முகத்தில் ஒரு தேஜஸ் இருக்கும். மற்றவர்களை அது எளிதில்  ஈர்த்து விடும். விவேகாநந்தர் போன்ற பெரிய ஞானிகளின் ஒளி பொருந்திய முகங்களே இதற்கு சான்று. ஆண்டவனால் படைக்கப்பட்ட எல்லாருக்கும் முகம் உண்டு. அவன் படைப்பில் அழகு என்பது எல்லோருக்கும் ஏதோ ஒரு உறுப்பில் உள்ளது  மற்றவர்களை கவரக்கூடிய முகத்தில் கூட ஏதாவது குறை இருக்கலாம். ஆனால் அதேசமயம் மற்றவர்களால் விரும்பாத முகத்தில் கூட ஏதாவது ஒரு உறுப்பு அழகாக இருக்கலாம்.அது தான் இறைவன் படைப்பின் ரகசியம். நாம் வாழும் காலங்களில் இறைவன் கொடுத்த முகத்தோடு மட்டும் நாம் வாழ்வதில்லை.சந்தர்பங்களுக்கு தக்கவாறு பல  முகங்களை போட்டுக்கொண்டுதான் நாம் வாழ வேண்டியுள்ளது. இது ...

கல்வி

Image
எண்ணெண்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்  கண்ணெண்ப வாழும் உயிர்க்கு " Education is the perfection which is already in man"- ---இது சுவாமி விவேகானந்தரின் கல்வியை பற்றிய கூற்று. ஆம்! கல்வி என்பது நமக்குள்ளே புதைந்திருக்கும் அறிவினை ஒளிரசெய்வதேயாகும். பிறந்த குழந்தைக்கு தவழ,நடக்க,யார் கற்றுக்கொடுக்கிறார்கள்? வாயில் வைக்கும் உணவை,மெல்லவோ, முழுங்கவோ யார் கற்றுக்கொடுக்கிறார்கள்? அதேமாதிரித்தான் பள்ளியில் ஆசிரியர்களும், புத்தகங்களும் கற்க வேண்டுபவற்றை எடுத்து கூறுகின்றனர். நாம்தான் நம் அறிவின் துணைகொண்டு அவற்றை புரிந்துகொள்கிறோம்.  கல்விஎன்பதுஏட்டோடுநின்றுவிடுவதில்லை.அதையும் தாண்டி செய்முறை பயிற்சினால் கிடைக்கும் அனுபவத்தால் நன்கு புரிந்துக்கொள்கிறோம்.இந்த அனுபவங்கள் நம் வாழ்க்கையிலும் பல பாடங்களை கற்றுத்தருகிறது. படிப்போடு நுண்ணறிவு,நுண்திறன்(softskill) உள்ளவர்களே  வாழ்க்கையில் ஏறு முகத்தில் உள்ளனர். பேச்சுக்கலை என்பது யாரிடத்து, எப்போது,எவ்வாறு ,சுருக்கமாக,தெளிவாக பேசவேண்டும் என்பதாகும். படித்ததை நன்றாக உள்வாங்கிக்கொண்டு எதிரில் இருப்பவர்கள்குழப்பமும் இல்லாது தெளிவாக,அதேசமயம்கவர்ச...
Image
  அழுக்கு அழகுக்கு எதிரி.அழுக்கை யாரும் விரும்புவதில்லை. கண்ணாடியில் அழுக்கு படிந்தால்  பிம்பம் சரியாக தெரிகிறதா? இல்லையே! அதை தூய்மை படுத்தாவிட்டால் அது உபயோகமற்றதாகி விடுகிறது.அது மாதிரி தான் மனதில் அழுக்கு படிந்தால் , புறத்தே எவ்வளவு அழகாக இருந்தாலும் நம்மை ஒருவரும் விரும்பமாட்டார்கள் அழுக்கான எந்த பொருளின் எடையும் கூடுதலாகத் தான் இருக்கும். மனதில்அழுக்கு இருந்தாலும் மனபாரம்அதிகரிக்கத்தான் செய்யும்.  உதாரணமாக, நாம் ஒருவரைப்பற்றி புறம்கூறினோம் என்றால் அந்த பொய் நம் மனத்தை அழுத்திக் கொண்டுதான் இருக்கும்.  இந்த மன அழுக்குகள் பிறப்பிலேயே வருவதில்லை. நாம் வளர,வளர நம்முடன் தொடர்பில்உள்ளவர்கள் மூலமே இவை நிகழ்கிறது.  குழந்தை பிராயத்தில், தன் தாய் தன்னைவிடுத்து வேறு ஒரு குழந்தையின்பக்கத்தில் கவனத்தை செலுத்தும் போது ,அது பொறுக்காமல்,அழ ஆரம்பிக்கிறது. இங்கேதான் மனிதனின் நிர்மலமான மனதில் முதல் கறை படிகிறது.  அழுக்காறு அவா வெகுளி இன்னா சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்.  பொறாமையின் விளைவாக ஆசை தலைதூக்கும். ஆசை நிறைவேறாவிட்டால், கோபம் தலை தூக்குகிறது. ...

மண் மகள்

Image
 ஆசையின் பிறப்பிடம் மண் தான். இந்த மண் நமக்கு பல பாடங்களை கற்றுக் கொடுக்கிறது. நாம்தான்அதை சரியாகபுரிந்து கொள்வதில்லைஅல்லது ஏற்றுக்கொள்வதில்லை. மண்ணில் தோன்றிய யாவும் மண்ணில் நிலைத்து நிற்பதில்லை. உதாரணமாக , ஒரு விதையை மண்ணில் ஊன்றி வைக்கிறோம். அது மண்ணை கிழித்துக்கொண்டு விருக்ஷமாக வளர்கிறது,பலன் கொடுத்து முடிந்தவுடன், "என்னிலிருந்துதானே வந்தாய், என்னிலேயே  அடங்குவாய்" என்று மண் மகள் அழைத்துக்கொள்கிறாள்.  மனிதனின் கதையும் இவ்வாறே முடிகிறது. வந்த காரியம் முடிந்தவுடன், மண் மாது அணைத்துக்கொள்கிறாள். மண் கற்றுக்கொடுக்கும் பாடம். 1) உலகத்தில் தோன்றியது எதுவும் நிலையானது இல்லை. 2)தோன்றிய இடத்திலேயே  தான் மறைய வேண்டும். 3) சேர்த்த பொன் , பொருள் , எதுவும் நாம் புறப்படும் போது எடுத்துக்கொண்டு போக முடியாது. ஐம்பூதங்களில் ஒன்றுதான் மண் என்பதனை நாம் அனைவரும் அறிவோம். ஆகாயத்தை தவிர மற்ற மூன்றும்  மண்ணின் மூலமாக சம்பந்தப்பட்டது தான்.மண்ணின் சம்பந்தமே ஆசையை வளர்க்கிறது. மண்ணின் மேல் பிறந்த இந்த பூதவுடல் மண்ணிலேயே புதைக்கப்படுகிறது அல்லது எரியூட்டப்படுகிறது. இது நம் ஒவ்வொருவரும...

உயிரே! உடம்பே!

Image
  ஒரு செயலை செய்ய வேண்டுமானால் அதற்கு கருவி ஒன்று வேண்டுமல்லவா!. உதாரணமாக சமைக்கவேண்டுமானால்நெருப்பு,பாத்திரம்,அடுப்பு, முதலியன வேண்டும். கூட்டத்தில் உரையாற்ற ஒலி பெருக்கி வேண்டும். கருவிகளை நன்கு பராமரித்தால் தான் காரியத்தை செவ்வனே முடிக்க முடியும்.  உடலைப்  பாதுகாத்தலே உயிரைப் பாதுகாக்கும் வழி.  உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். உடம்பில் நோய் வந்தால், அது மனத்தையும் சேர்த்து பாதிக்கும். வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி அகவலில்,  "உயிருறும் உடலையும், உடலுறும் உயிரையும் அயர்வறக் காத்தருள் அருட்பெரும் ஜோதி...'  என வேண்டுகிறார். மனிதனுக்கு வாழ வீடு வேண்டும். வீடு என்று ஒன்று இருந்தால் தான் வாழ்க்கையை செம்மையாக வாழ முடியும்.  சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும் என்பது பழமொழி.  சித்திரம் எழுதக்கூடிய சுவர் எப்படி இருக்க வேண்டும்?  மேடு பள்ளமற்று சுத்தமாக இருந்தால்தான் சித்திரம் காண்போர் கண்ணை கவரக்கூடியதாக அமையும். எல்லா உயிரினங்களுக்கும் உடல் என்ற ஒன்று உண்டு. அது நம் உயிர் பிரியும் வரை நம்முடனே இருந்து பல பணிகளை செய்கிறது. முக்கியமாக நம...

அநுபவங்கள்

Image
அனுபவம் என்பது பட்டறிவு என்பதனை நாம் எல்லோரும் அறிந்ததே. இந்த அனுபவங்களை, தான் கற்ற பாடங்களாக  ஏற்று, விழிப்புடன் செயல்படுபவர்கள் வாழ்க்கை என்னும் கடலில் நீந்தி கரை சேர்கிறார்கள். அனுபவங்களின் முக்கியத்துவம்.   கல்வி என்பது கல்விக்கூடங்களில் கற்றுக்கொடுக்கும் கல்வி மட்டுமல்ல. ஒருவன் பட்டங்கள் பல பெற்றிருக்கலாம்,ஆனால் வாழ்க்கையில் வெற்றி பெற்றவராக  இருப்பதில்லை. அதனால் தான் நம் பெரியவர்கள் ," ஏட்டுசுரைக்காய் ,கறிக்கு உதவாது". என்று கூறினர்.  ஏட்டில் சுரைக்காய் நிறம்,வடிவம், சுவை பற்றிய விவரங்களை அறியலாம். ஆனால் இதைக்கொண்டு  ( அந்த ஏட்டைக்கொண்டு) நாம் அடுப்பில் வைத்து சாப்பிடக்கூடிய கறியை சமைக்க முடியாது.  நாம் ஆசிரியர்களிடம் எவ்வளவு கற்றுக்கொண்டாலும், செய்முறை பயிற்சி மூலம் கற்றுகொண்டதற்கு ஈடாகாது. அது எளிதில் மறக்கவும் மறக்காது. அனுபவங்களை ஒரு மனிதனின் வாழ்க்கையில் மூன்று  பருவங்களில் ஏற்படுவதாக பிரித்துக்கொள்வோம்.  1) குழந்தை பருவம்.  2)  இல்லறபருவம் 3)  முதுமை பருவம். குழந்தை பருவம்:-    இந்த பருவத்தில் மனது துடைத்து வை...

கடவுளை தேடலாமா!

Image
 கடவுளை தேடும் முன் அப்படி ஒருவர் இருக்கிறாரா? என்பதை தெளிவு படுத்துதல் நலம் இல்லையா? ஸ்வாமி விவேகனந்தரும் இக்கருத்தை தான் கொண்டிருந்தார். கடவுள் என்ற ஒன்று இருப்பதற்கு ஆதாரங்கள் உள்ளதா? அப்படி இருக்கும் பட்சத்தில் நாம் அவரை பார்க்க முடியுமா? அவருடன் பேச முடியுமா? பார்த்தவர்கள் எவ ரேனும் உள்ளனரா?  இத்தனை கேள்விகளும் விவேகானந்தருக்கு மட்டுமல்லாது நம்மில் பலருக்கும் உள்ளது. இந்த சந்தேகங்களுக்கு விடையளிக்க விவேகானந்தருக்கு ஒரு ராமகிருஷ்ணர் இருந்தார். கடவுளை பார்த்துள்ளீரா? என்ற கேள்விக்கு ஒரு கணம் கூட தாமதிக்காது ,"ஏன்,உன்னை நான் இப்போது பார்த்துக்கொண்டிருப்பதை விட மிகத் தெளிவாக பார்த்திருக்கின்றேனே ". இந்த மாதிரியான ஒரு தெளிவான அதே சமயம் , உறுதியான பதிலுக்காகக் தான் எங்கெங்கோ அலைந்து திரிந்தார்.இப்போது மனம் சற்றே நிம்மதி அடைந்தது. இந்த பதிலின் நம்பகத்தன்மையை உறுதி படுத்த இராம கிருஷ்ணரை பல வகையிலும் சோதித்தித்த பிறகே அவரை தன் குருவாக ஏற்றுக்கொண்டார்.   சாதாரண மனிதர்களாகிய நாம்,இந்த பிரபஞ்சத்தை கூர்ந்து நோக்கஆரம்பித்தாலே கடவுளை பற்றிய ஒரு தெளிவு பிறக்கும். பின் வரும் கே...