கல்வி
எண்ணெண்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணெண்ப வாழும் உயிர்க்கு
"Education is the perfection which is already in man"----இது சுவாமி விவேகானந்தரின் கல்வியை பற்றிய கூற்று. ஆம்! கல்வி என்பது நமக்குள்ளே புதைந்திருக்கும் அறிவினை ஒளிரசெய்வதேயாகும். பிறந்த குழந்தைக்கு தவழ,நடக்க,யார் கற்றுக்கொடுக்கிறார்கள்? வாயில் வைக்கும் உணவை,மெல்லவோ, முழுங்கவோ யார் கற்றுக்கொடுக்கிறார்கள்? அதேமாதிரித்தான் பள்ளியில் ஆசிரியர்களும், புத்தகங்களும் கற்க வேண்டுபவற்றை எடுத்து கூறுகின்றனர். நாம்தான் நம் அறிவின் துணைகொண்டு அவற்றை புரிந்துகொள்கிறோம்.
கல்விஎன்பதுஏட்டோடுநின்றுவிடுவதில்லை.அதையும் தாண்டி செய்முறை பயிற்சினால் கிடைக்கும் அனுபவத்தால் நன்கு புரிந்துக்கொள்கிறோம்.இந்த அனுபவங்கள் நம் வாழ்க்கையிலும் பல பாடங்களை கற்றுத்தருகிறது.
படிப்போடு நுண்ணறிவு,நுண்திறன்(softskill) உள்ளவர்களே வாழ்க்கையில் ஏறு முகத்தில் உள்ளனர். பேச்சுக்கலை என்பது யாரிடத்து, எப்போது,எவ்வாறு ,சுருக்கமாக,தெளிவாக பேசவேண்டும் என்பதாகும். படித்ததை நன்றாக உள்வாங்கிக்கொண்டு எதிரில் இருப்பவர்கள்குழப்பமும் இல்லாது தெளிவாக,அதேசமயம்கவர்ச்சியாக,கவனமாக பேச பழக வேண்டும். இதற்கு ஒரு சிறுகதை சான்றாக விளங்குகிறது.
ஒரு மீனவனுக்கு அதிசயமீன்ஒன்று சிக்குகிறது.அதை வெளியில் எடுக்க முயற்சிக்கும் போது , அது தன்னை மீண்டும் கடலில் விட்டுவிட்டால் வரமொன்று கொடுப்பேன் என்கிறது.மீனவனும் சரி வீட்டில்உள்ளவர்களிடத்து கேட்டுக்கொண்டு வந்து வரத்தை கேட்கிறேன் என்றுகூறி வீட்டில் உள்ளவர்களிடம் வந்து நடந்ததை கூறுகிறான். மனைவி குழந்தை பாக்கியம் கேட்கிறாள்,தாய் மாடிவீடு வேண்டும் என்கிறாள்,தந்தையோ தனக்கு கண் பார்வை வேண்டுகிறார். கிடைக்கப்போகும் வரமோ ஒன்று,இவர்கள்கேட்பதுகிடைக்கவேண்டுமெனில்மூன்றுவரங்களைகேட்கவேண்டும்.என்னசெய்வது என்று யோசிக்கிறான்.பின்பு தன் பேச்சுதிறமையால், மீனிடம் வந்து , இவ்விதம் வேண்டுகிறான்,"என் பெற்றோர்கள் என்வீட்டு மாடியில் நின்றுக்கொண்டு என் மகன் கீழே விளையாடுவதை பார்க்க வரம் தா!" மீனும் அவ்வரத்தை கொடுத்தது.
தொழிற்கல்வி:- ஒரு நாட்டின் வளர்ச்சி என்பதுதொழிலும்அதைசார்ந்தவணிகத்தையுமே சார்ந்துள்ளது. மாணவர்கள் ஒரு 15 வயது வரை பொதுகல்வி கற்க வேண்டும். இந்தகாலகட்டத்தில்அவனுக்குஎந்ததுறையில் அதிக ஆர்வமுள்ளது என்பதை தெரிந்துக்கொள்ளலாம். அதன் பிறகு அந்த துறையில் உள்ள தொழிற்கல்வியை கற்க வேண்டும். உதாரணமாக, ஒருவனுக்கு இயந்திரங்களை இயக்குவதிலோ, அல்லது புதுசெயல்பாட்டினை கண்டுபிடிப்பதில் ஆர்வமிருந்தால் அதற்குண்டான கல்வியை கற்கலாம்.
அறிதல் என்பதை புரிதல் என்றும் கொள்ளலாம். அறிவு இருந்தும் அதை உபயோகிக்காமல் வாளா இருந்தால் கற்கும் கல்வி பயனற்று போகும்.
தற்போதெல்லாம் மதிப்பெண்களை குறி வைத்துதான்பாடங்களைசொல்லிக்கொடுக்கிறார்கள்,மாணவர்களின் மனநிலையும் இதையொட்டிதான் உள்ளது. நல்லமதிப்பெண்களை பெற்றால் நல்ல வருவாயுள்ள வேலையில் அமர்ந்து, கஷ்டமில்லா சொகுசு வாழ்க்கை வாழலாம்,என்பதுதான் இதற்கெல்லாம் காரணம். இத்தகைய கல்வி , அறிவை கூர்மைபடுத்துமா?
ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இத்தகைய கல்வி தான் கற்பிக்கப்பட்டது. தங்கள் அரசாங்கத்தை நடத்த குமாஸ்தாக்கள் தேவைப்பட்டனர். சிந்தனையை தூண்டும் கல்வியை கொடுத்தால் எங்கே நாம் கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுவோமோ, என்று அத்தகைய கல்வி மறுக்கப்பட்டது.
கல்வி என்பது எவ்வளவு அவசியம்?
பொதுவாக கல்வி என்றாலே படிக்கும் படிப்பாகத்தான் புரிந்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் இதையும் தாண்டி, பல விஷயங்கள் உள்ளது.
ஒருவனை கல்விமான் என்று அவன் படித்த,பெற்ற பட்டங்களை வைத்து அளவிட முடியாது. ஏட்டுக்கல்வியோடு அனுபவ கல்வியும் தேவை. கல்விமான் தான்கற்ற கல்வியோடு வாழ்க்கை கற்றுக் கொடுக்கும் பாடங்களையும் தன்னுள் இருக்கும் அறிவினால் பொருத்தி தெளிவதே வாழ்க்கையில் வெற்றியின் பாதைக்கு வழி வகுக்கும்.
இவ்வாறுஇல்லாது தற்காலத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் உள்ள அதீத பாசத்தினால் அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை தாங்களே செய்துக்கொடுத்து அவர்களின் தோல்விக்கு இவர்களே வழி வகுக்கிறார்கள்.
கல்வியைஆதாரமாக வைத்து அறிவோடு செயல்படுபவர்களே உண்மையான கல்விமான்கள்.
கல்வியறிவு இல்லாது புத்தியின் துணையோடு தமிழகத்தையேயாண்ட காமராஜர் போன்ற ஆளுமைகள் தேசத்தின் தலைமையைக் தேர்ந்தெடுத்த வரலாறும் உண்டு. ஆகவே பெயருக்கு பின்னால் பட்டங்களை சேர்ப்பதில்லை கல்வி. அது வேலை வாங்குவதற்கு வேண்டுமானால் உதவலாம், புரிந்துகொள்ளாமல் படிக்கும் படிப்பு வாழ்க்கைக்கு உதவாது.
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது முற்றிலும் உண்மை.
பெரிய படிப்பு படிப்பவர்கள் மட்டும் சாதனை படைப்பதில்லை. மிகச்சாதாரணவர்கள் கூட தம்மிடம் இருக்கும் அறிவினை வைத்து மிகப்பெரியசாதனைகளை செய்துள்ளனர். உதாரணமாக,சேலம்மாவட்டத்தில் சேலத்தில் இயங்கக்கூடிய சாரதா கல்வி ஸ்தாபனத்தை உருவாக்கிய யதீஸ்வரி சாரதாபிரியா அவர்கள் எந்த பள்ளிக்கும் செல்லவில்லை. ஆனால்,தன்அறிவினால்,வியத்தகு நினைவாற்றலுடன் கூடிய ஆளுமையினால் ஒன்றல்ல, இரண்டல்ல, 15க்கும் மேற்பட்ட கல்விக்கூடங்களை உருவாக்கி சேலத்திற்கு பெருமை சேர்த்த பெண்மணி. உலகெங்கிலும் உயர்பதவி வகிக்கும் சேலத்து பெண்மணிகள் அவருக்கு என்றென்றும் கடமை பட்டவர்கள். கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக இருந்த சேலம் மாவட்டத்தை பெண் கல்வியில் தனி இடத்தை பிடிக்க வித்திட்டவர்.
2)ஆராய்ச்சியில் ஆர்வம் ஏற்பட்டு விஞ்ஞானம் வளர்கிறது.
3)ஆன்மீகத்தில் நாட்டம் உடையோருக்கு அறிவு தூண்டப்பட்டு உண்மைபொருளை அறிய உதவுகிறது.
ஸ்வாமி ராமகிருஷ்ணர் போன்ற பெரிய மகான்கள் பள்ளிகல்வியாலா மிகப்பெரிய தத்துவங்களை இவ்வுலகத்திற்கு அளித்தனர்? இல்லையே! அவர்களின் புத்தியே அவர்களுக்கு மிக சிறப்பான இடத்தை இவ்வுலகில் கொடுத்தது. ஆகவே நம் புத்தியோடு இயைந்த கல்வியே வெற்றியை தரும்.

நல்ல அருமையான பதிவு. வாழ்க வளமுடன்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete