உயிரே! உடம்பே!
ஒரு செயலை செய்ய வேண்டுமானால் அதற்கு கருவி ஒன்று வேண்டுமல்லவா!. உதாரணமாக சமைக்கவேண்டுமானால்நெருப்பு,பாத்திரம்,அடுப்பு, முதலியன வேண்டும். கூட்டத்தில் உரையாற்ற ஒலி பெருக்கி வேண்டும். கருவிகளை நன்கு பராமரித்தால் தான் காரியத்தை செவ்வனே முடிக்க முடியும்.
உடலைப் பாதுகாத்தலே உயிரைப் பாதுகாக்கும் வழி. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.உடம்பில் நோய் வந்தால், அது மனத்தையும் சேர்த்து பாதிக்கும்.
வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி அகவலில்,
"உயிருறும் உடலையும், உடலுறும் உயிரையும்
அயர்வறக் காத்தருள் அருட்பெரும் ஜோதி...'
என வேண்டுகிறார்.
மனிதனுக்கு வாழ வீடு வேண்டும். வீடு என்று ஒன்று இருந்தால் தான் வாழ்க்கையை செம்மையாக வாழ முடியும்.
சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும் என்பது பழமொழி.
சித்திரம் எழுதக்கூடிய சுவர் எப்படி இருக்க வேண்டும்?
மேடு பள்ளமற்று சுத்தமாக இருந்தால்தான் சித்திரம் காண்போர் கண்ணை கவரக்கூடியதாக அமையும்.
எல்லா உயிரினங்களுக்கும் உடல் என்ற ஒன்று உண்டு. அது நம் உயிர் பிரியும் வரை நம்முடனே இருந்து பல பணிகளை செய்கிறது. முக்கியமாக நம் வாழ்க்கையின் முடிவாக இறைவனை காண உதவுகிறது.இறைவன்நம்முள்ளேயே,இந்த உடம்பினுள்ளேயே உறைகிறான் அல்லவா! அப்படியானால் அந்த உடம்பை எப்படி பேணி காக்க வேண்டும் என்பதனை நம் சித்த புருஷர்களும் , ஞானிகளும் கூறியுள்ளார்கள். இளமையில் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்று தகுந்த உடற்பயிற்சியில் நாக்குக்கு அடிமையாகி நோய்களை இலவசமாக பெற்றால் தள்ளாமை வரும் போது மனம் உடல் உபாதைகளை நினைத்து வருத்தப்பட்டு இருக்குமா? அல்லது இறைவனைநினைக்குமா?உடல் நலம் நன்றாக இருக்கும்போது கோயில், குளம் என்று போகாது, beach,resort என்று ஊர் சுற்றினால்,அது தளர்வுறும் போது கோயில்படி கூட ஏற முடியாது. நினைவுமங்கி,வார்த்தை குளறும் போது எப்படி அவன் புகழை பாட முடியும்?
அதனால் தான் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் நாராயணா என்னும் நாமம் என்று சொன்னார்கள்
உடம்பை நன்கு பாதுகாக்காவிடில் மெய்பொருளாம் அந்த இறைவனை அடையமுடியாது.ஆதலால் இந்த உடம்பை நன்கு வளர்த்து உயிராகிய அந்த பரம்பொருளின் அங்கத்தை வளர்க்க வேண்டும் என்கிறார் திருமூலர்.மேலும் அவர்,
.உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்பு
பழந்தமிழகத்தில் மக்கள் உடல்நலம் பேணியமையால் தான் ஈரஉள்ளமும், வீர உணர்வும் மிக்கவராக இருந்தனர்
கண்ணுக்கு தெரியாத இறைவன் உறையும் மனதை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்
உடம்பார் அழியின் உயிரார் அழிவார்
திறம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடல் வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.
என்கிறார் திருமூலர்.
உடம்பை நன்கு பாதுகாக்காவிடில் மெய்பொருளாம் அந்த இறைவனை அடையமுடியாது.ஆதலால் இந்த உடம்பை நன்கு வளர்த்து உயிராகிய அந்த பரம்பொருளின் அங்கத்தை வளர்க்க வேண்டும் என்கிறார் திருமூலர்.மேலும் அவர்,
உடலைப் பாதுகாத்தலே உயிரைப் பாதுகாக்கும் வழி ஆகையால், வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி அகவலில்,
"உயிருறும் உடலையும், உடலுறும் உயிரையும்
அயர்வறக் காத்தருள் அருட்பெரும் ஜோதி...'
என வேண்டுகிறார்.
கடுவெளிச் சித்தரின் பரவலாக அறியப்பட்ட ஒரு பாடல்...
"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி...'
இதன் பொருள், ஆண்டி என்கிற உயிர், பரம்பொருளிடம் பத்து மாதங்கள் யாசித்து, தோண்டி என்ற உடலைப் பெற்றது. ஆனால், அந்த உடலைச் சரியாகப் பாதுகாக்காமல், கேளிக்கைகளுக்கு ஆட்படுத்தி, வீணடித்து விட்டது என்பதாகும். இப்படி உடலை வீணாக்காது, நம் அவயங்கள் ஒவ்வொன்றையும்இறைவனைஅடைவதற்கான உபாயமாக உபயோகப்படுத்த வேண்டும் .
கண்களைஇறைவனின்திருவுருவத்தைபார்ப்பதற்கும்,வாய்அவன்நாமத்தைசொல்வதற்கும், செவிகளை அவன் புகழை கேட்பதற்கும், சிறுவயதிலிருந்தேபழக்கவேண்டும்.அப்படியல்லாது,வேண்டாததிரைப்படகாட்சிகளையும்,பாடல்களையும் கேட்டால், அவைதான் நம் மனதில் பதியும். எண்ணம் போல் வாழ்வு என்று சொல்வார்கள். சீரிய எண்ணங்களை வளர்க்க வேண்டும். அது நம் சொற்களையும் சீர் படுத்தும். நம் வாயிலிருந்து எந்த தகாத வார்த்தையும் வராது.மாறாக இறைவனின் புகழை பாடுவதில் ருசி ஏற்படும்.
நம்முள் உறையும் கடவுளின் இடத்தை எவ்வாறு வைத்துக்கொள்ளவேண்டும்?
போட்டி, பொறாமை,சோம்பல், ஆசை, கோபம் போன்ற அழுக்குகளை அறவே அகற்றி,அன்பு, கருணை, உழைப்பு, கடமை என்ற தீபங்களை ஏற்றி மனதை ஒளி மிக்கதாக செய்தால் இறைவன் விரும்பி நம்முள் குடியேறுவான்.

Comments
Post a Comment