அநுபவங்கள்




அனுபவம் என்பது பட்டறிவு என்பதனை நாம் எல்லோரும் அறிந்ததே. இந்த அனுபவங்களை, தான் கற்ற பாடங்களாக  ஏற்று, விழிப்புடன் செயல்படுபவர்கள் வாழ்க்கை என்னும் கடலில் நீந்தி கரை சேர்கிறார்கள்.

அனுபவங்களின் முக்கியத்துவம். 

கல்வி என்பது கல்விக்கூடங்களில் கற்றுக்கொடுக்கும் கல்வி மட்டுமல்ல. ஒருவன் பட்டங்கள் பல பெற்றிருக்கலாம்,ஆனால் வாழ்க்கையில் வெற்றி பெற்றவராக  இருப்பதில்லை. அதனால் தான் நம் பெரியவர்கள் ,"ஏட்டுசுரைக்காய்,கறிக்கு உதவாது". என்று கூறினர். 

ஏட்டில் சுரைக்காய் நிறம்,வடிவம், சுவை பற்றிய விவரங்களை அறியலாம். ஆனால் இதைக்கொண்டு ( அந்த ஏட்டைக்கொண்டு) நாம் அடுப்பில் வைத்து சாப்பிடக்கூடிய கறியை சமைக்க முடியாது. 

நாம் ஆசிரியர்களிடம் எவ்வளவு கற்றுக்கொண்டாலும், செய்முறை பயிற்சி மூலம் கற்றுகொண்டதற்கு ஈடாகாது. அது எளிதில் மறக்கவும் மறக்காது.

அனுபவங்களை ஒரு மனிதனின் வாழ்க்கையில் மூன்று  பருவங்களில் ஏற்படுவதாக பிரித்துக்கொள்வோம். 

1) குழந்தை பருவம். 

2)  இல்லறபருவம்

3)  முதுமை பருவம்.



குழந்தை பருவம்:-   இந்த பருவத்தில் மனது துடைத்து வைத்த கரும்பலகையை போலிருக்கும். நல்லது, தீயதை, மனம் உடனே பற்றிக்கொள்ளும். பெற்றோர்கள்மூலமாகத்தான் அனுபவங்களை பெற்றுக்கொள்கிறது. இனிப்போ,கசப்போ அதன் வாயில் வைத்து சுவைக்கசெய்து பெற்றோர்கள் புரிய வைக்கிறார்கள். நெருப்பை தொடும் போது சுடுதல் எப்படி உள்ளது என்பதை புரிந்துகொள்கிறார்கள். ஆகையால் பெற்றோர்கள் அனுபவங்களை கொடுத்து, கொடுத்து குழந்தைகளை புரிந்துகொள்ள வைப்பதால்  வாழ்க்கையின் சவால்களை தைரியத்துடன் எதிர்க கற்றுக்கொள்கிறது. சவால்களை சந்திக்க விட வேண்டும். அப்படியல்லாது குழந்தைக்கு நேரும் சங்கடங்களை காண சகிக்காது பெற்றோரே அதைவிலக்கிக்கொடுத்தால் பிற்காலத்தில் தான் ஒருவனாக நிற்கும்  போது எப்படி சமாளிப்பார்? நடக்க பழகும் போது கீழே விழுந்து அடிபடத்தான் செய்யும். அப்போதுதான் எதையாவதை பிடித்துக்கொள்ளும்  சாதுர்யத்தை குழந்தை கற்றுக்கொள்கிறது.

இல்லறபருவம்:-மாணவபருவத்தில் அடி எடுத்து வைக்கும் போது புதியதோர் உலகை மனிதன் காண்கின்றான். நட்பு வட்டத்தில் புகுகின்றான். பலதரப்பட்ட சமூக பழக்க வழக்கங்களைகொண்டநண்பர்களிடமிருந்துபலவிதமான கோட்பாடுகளை கற்கிறான் . தனக்கு உகந்தவற்றை ஏற்றுக்கொள்கிறான்.

மனையாள் தன் வாழ்க்கையில் வரும் போது தனக்காக வாழ்வதை ஒதுக்கி வைத்து விட்டு குடும்பத்திற்காக வாழ ஆரம்பிக்கிறான். மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ தான் எப்படி இருக்க வேண்டும்,சுயநலமாக வாழ்ந்தால் என்ன,என்ன இழப்புகள் ஏற்படும் என்பதை உணருகிறான். இந்த கால கட்டத்தில் தான் கடவுளின் மீது பக்தி ஏற்படுகிறது.

முதுமை காலம்:-  இந்த காலத்தில் தான் தன் கடமைகளையும முடித்து விட்டோம், இனி நம்மை , நம் மக்கள் பார்த்துக்கொள்வார்கள், என்றஎண்ணம்ஏற்படும்போது,நாமேஅவர்களுக்கு சுமையாக இருக்கிறோமோ என்ற ஐயம்எழுகிறது.நம்சுகமோ,துக்கமோ,பகிர்ந்துகொள்ள   இங்கே யாரும்கிடையாது.அவரவர் வாழ்க்கையை அவரவர் தான் வாழ்ந்தாக வேண்டும், என்ற உண்மை தெரியும் போது காலம் கடந்து விடுகிறது.  அப்போது தான் நம்மைரட்சிக்கஇறைவன்காத்துக்கொண்டிருக்கிறான் என்பதனை உணர்கிறோம்.

வாழ்க்கையில் பட்ட அடி, அது தந்த வலி,வடு, நம்மை சிந்தித்து செயல் படுவதையும், பேச்சில் நிதானத்தைக கற்றுக் கொடுக்கிறது.

மூத்தோர்சொல்லை மதிப்போம் மூத்தோர் சொல்லும் முழு நெல்லிக்காயும் முன்னர் கசக்கும், பின்னர் இனிக்கும்,என்ற உண்மையை உணரும் காலம்.

இப்போது என்ன வயதா ஆகிவிட்டது? எல்லாம் 60 வயதிற்கு மேல் பூஜை, புனஸ்காரம்,கோயில் என்றிருக்கலாம் என்றில்லாது,சிறு வயதிலிருந்தே இதை பழக வேண்டும்.வயது ஏறி விட்டால் மனம் இருந்தாலும்,உடம்பு ஒத்துழைக்காது, மார்கமும் இருக்காது.

அப்போதிக்கு இப்போதே சொல்லி வைத்தேன் நாராயணா என்னும் நாமம்.

ஆஹா!எவ்வளவு யதார்த்தமான வார்த்தை!. 

 பாசமும் பற்றருத்து பாரிக்கும் ஆரியனை கைதொழுதால், வந்த வினையும் வருகின்ற வல்வினையும் விலகி இன்பமாய் இறைவனடி சேர்வது சத்தியம் என்பதனை உணர்ந்து, பாசத்தை உண்மைபொருளும், ,தோன்றா பொருளுமாகிய எம்பிரானிடத்து வைத்து உய்வோமாக!. 





Comments

Popular posts from this blog

பீஷ்மம்

அலகிலா விளையாட்டுடையான்

தவம் என்பது யாதெனில்........