கடவுளை தேடலாமா!
கடவுளை தேடும் முன் அப்படி ஒருவர் இருக்கிறாரா? என்பதை தெளிவு படுத்துதல் நலம் இல்லையா? ஸ்வாமி விவேகனந்தரும் இக்கருத்தை தான் கொண்டிருந்தார்.
கடவுள் என்ற ஒன்று இருப்பதற்கு ஆதாரங்கள் உள்ளதா? அப்படி இருக்கும் பட்சத்தில் நாம் அவரை பார்க்க முடியுமா? அவருடன் பேச முடியுமா? பார்த்தவர்கள் எவ ரேனும் உள்ளனரா? இத்தனை கேள்விகளும் விவேகானந்தருக்கு மட்டுமல்லாது நம்மில் பலருக்கும் உள்ளது. இந்த சந்தேகங்களுக்கு விடையளிக்க விவேகானந்தருக்கு ஒரு ராமகிருஷ்ணர் இருந்தார்.
கடவுளை பார்த்துள்ளீரா? என்ற கேள்விக்கு ஒரு கணம் கூட தாமதிக்காது ,"ஏன்,உன்னை நான் இப்போது பார்த்துக்கொண்டிருப்பதை விட மிகத் தெளிவாக பார்த்திருக்கின்றேனே".
இந்த மாதிரியான ஒரு தெளிவான அதே சமயம் , உறுதியான பதிலுக்காகக் தான் எங்கெங்கோ அலைந்து திரிந்தார்.இப்போது மனம் சற்றே நிம்மதி அடைந்தது. இந்த பதிலின் நம்பகத்தன்மையை உறுதி படுத்த இராம கிருஷ்ணரை பல வகையிலும் சோதித்தித்த பிறகே அவரை தன் குருவாக ஏற்றுக்கொண்டார்.
சாதாரண மனிதர்களாகிய நாம்,இந்த பிரபஞ்சத்தை கூர்ந்து நோக்கஆரம்பித்தாலே கடவுளை பற்றிய ஒரு தெளிவு பிறக்கும். பின் வரும் கேள்விகளுக்கான பதிலை தேடினால் இறைவன் யார் என்பதற்கான பதில் கிடைக்கும்.
1)இவ்வுலகம் ஐம்பூதங்களால் ஆனது என்பதை மறுக்க முடியாது. அப்படியானால் இது தோன்றியது எப்படி?
2)இயற்கை சீற்றங்கள் எதனால் ஏற்படுகிறது?
3)தாயின் கருப்பையில் பிண்டமாக உருவாகும் நாம் எப்படி உயிருள்ள குழந்தையாக வெளிவருகிறோம்?
4)இதயத்தை துடிக்க வைக்கும் சக்தி எது?
கடவுள் உள்ளார் என்பதற்கான ஆதாரங்கள்
ஐம்பூதங்களால் ஆன இவ்வுலகம் எப்படி , யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்பதை யாரால் சொல்லமுடியும். டார்வின் தியரி உலகின் பரிமாண வளர்ச்சியை வேண்டுமானால் விளக்கலாம்,ஆனால் எப்படி, யாரால் என்பதை சொல்லவே முடியாது.
அவன்"வேற்றாகி விண்ணாகி நிற்பவன்".
சுனாமி,பூகம்பம்,வெள்ளம்,,புயல்,எரிமலை போன்றவை வரப்போவதை வேண்டுமானால் முன் கூட்டியே அறிய வேண்டுமானால் முடியும், ஆனால் வராமல் தடுக்க முடிகிறதா?.
இதயம் துடிக்கிறது,துடிக்க வைக்கும் சக்திதான் இறைவன். இதுதான் நான் உணர்ந்த உண்மை.
இறைவன் உயிரோடுஉணர்வுபூர்ணமாவன்.நம் வசதிக்காக அவனை பல உருவங்களில் வணங்குகிறோம். சற்றே கவனித்தால் அவன் நம்முள்ளேயே மனசாட்சியாக உள்ளதை உணரமுடியும்.மனம்எந்ததவறையும்நியாயப்படுத்தும,ஆனால் மனசாட்சி அப்படி இல்லை. தவறு என்றால் தவறு என்றுதான் சொல்லும். தீயவர்களுக்கும், திருடனுக்கும் கூட தான் செய்வது தவறு என்று மனசாட்சி சொல்லும், ஆனால் மனதின் குரல் இதை அடக்கிவிடும்.
உள்ளத்தில் ஓங்கார ஸ்வரூபம் நிற்பதை காண்கின்றார், மாணிக்கவாசகர்.
தோன்றிய எல்லாவற்றிறகும் படைப்பாளி ஒருவன்இருக்க வேண்டும். அவனைத்தான் இறைவன் என்று அழைக்கிறார்கள்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
"அ" என்ற உயிரெழுத்து எப்படி மற்ற எழுத்துக்களும் சொற்களும் உருவாவதற்கு முக்கியமோ, அதுபோலத்தான் இறைவனும் மற்ற உயிர்கள் உருவாவதற்கு ஆதாரமாய் உள்ளான்.
சரி , இறைவனை நாம் ஏன் நினைக்க வேண்டும், வணங்க வேண்டும்? அதனால் நமக்கு என்ன பயன்?
இதற்குடைய விடையையும் நம் மாணிக்க வாசகரே மிகவும் எளிதாக புரியும்படி கூறுகிறார்
பொய்யாயனவற்றை போக்கி மெய் ஞானத்தை அருளுபவன்.
மானிடரான நாம் அளவில்லா ஆசைகளுடனே வாழ்கிறோம்.நம்மைவிடவசதியானவர்களைபார்த்துஅவர்களைப்போலவாழமுயற்சிக்கிறோம். அது நடக்காத போது வாழ்க்கையை வெறுக்கிறோம். இறைவன் ஒரு குருவின் மூலமாக அல்லது இயற்கையின் சீற்றத்தின் மூலமாக இவையெல்லாம் நிலையில்லாதது என்பதனை சில நிகழ்வுகளின் வாயிலாக உணர்த்துகிறார். சுனாமி கற்றுகொடுக்காத பாடமா?உறவும் பொய், உடைமையும் பொய் என்றானது. அப்போதுதான் நம்மை மீறிய சக்திக்குமுன் நாமெல்லாம் பூஜ்ஜியமே என்ற மெய்ஞானத்தை பெற்றோம்.
அல்லல் பிறவி அறுப்பவன்.
வாழ்க்கை என்பது விரித்து வைத்த மலர் படுக்கையியில்லை. கல்லும், முள்ளும் நிறைந்ததே.
ஆறாத புண்களும், வடுக்களும் ஏராளம்,ஏராளம். இந்த துன்பம் நிறைந்த வாழ்க்கையிருந்து நம்மையெல்லாம் விடுவித்து மறுபிறவி இல்லாமல் செய்பவன் இறைவன் ஒருவனே!.
அவனது குணங்களை வெறும் எண்ணிக்கையில் அடக்க முடியாது.
என்னில் இருந்த ஒன்றை நான் அறிந்து கொண்ட பின் நானே நீ , நீயே நான்.
கனத்த இதயத்துடன் பல பிரச்சைகளோடே கோவிலுக்கு செல்கிறோம். ஸ்வாமியை தரிசித்துவிட்டு வெளியே வரும் போது அப்படியே இதயம் லேசாக விடுகிறது. இந்த மாயாஜாலம் இறைவனின் கருணையால் அன்றோ நடக்கிறது.
இம்மைக்கு மட்டுமல்லாது மறுமையிலும் துணையாய் நிற்பவன் அவன் ஒருவனே. பிறக்கும்போதும்ஒன்றும்கொண்டுவருவதில்லை,இறக்கும் போதும் ஒன்றும் கொண்டு போவதல்லை. ஆகையால் நமக்கு எதுவும் சொந்தமில்லை.எல்லாம் அவருடையது! தாயும் தந்தையும் இல்லா அந்த இறைவன் ஒருவன் மட்டுமே நமக்குதோழன்,தாய்,தந்தை ,சேவகன்,மற்ற பிற உறவுகளாக எப்போதும் நம்முடன் நிற்கிறான்.
ஆகவே, நம் மனசாட்சியாக இருக்கும் இறைவனை சார்ந்து வாழ்ந்தால் நம் வாழ்க்கையில் துன்பம் என்பதே இருக்காது.
வேண்டுதல் வேண்டாமை இலாதனடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
Comments
Post a Comment