Posts

உயிரே! உடம்பே!

Image
  ஒரு செயலை செய்ய வேண்டுமானால் அதற்கு கருவி ஒன்று வேண்டுமல்லவா!. உதாரணமாக சமைக்கவேண்டுமானால்நெருப்பு,பாத்திரம்,அடுப்பு, முதலியன வேண்டும். கூட்டத்தில் உரையாற்ற ஒலி பெருக்கி வேண்டும். கருவிகளை நன்கு பராமரித்தால் தான் காரியத்தை செவ்வனே முடிக்க முடியும்.  உடலைப்  பாதுகாத்தலே உயிரைப் பாதுகாக்கும் வழி.  உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். உடம்பில் நோய் வந்தால், அது மனத்தையும் சேர்த்து பாதிக்கும். வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி அகவலில்,  "உயிருறும் உடலையும், உடலுறும் உயிரையும் அயர்வறக் காத்தருள் அருட்பெரும் ஜோதி...'  என வேண்டுகிறார். மனிதனுக்கு வாழ வீடு வேண்டும். வீடு என்று ஒன்று இருந்தால் தான் வாழ்க்கையை செம்மையாக வாழ முடியும்.  சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும் என்பது பழமொழி.  சித்திரம் எழுதக்கூடிய சுவர் எப்படி இருக்க வேண்டும்?  மேடு பள்ளமற்று சுத்தமாக இருந்தால்தான் சித்திரம் காண்போர் கண்ணை கவரக்கூடியதாக அமையும். எல்லா உயிரினங்களுக்கும் உடல் என்ற ஒன்று உண்டு. அது நம் உயிர் பிரியும் வரை நம்முடனே இருந்து பல பணிகளை செய்கிறது. முக்கியமாக நம...

அநுபவங்கள்

Image
அனுபவம் என்பது பட்டறிவு என்பதனை நாம் எல்லோரும் அறிந்ததே. இந்த அனுபவங்களை, தான் கற்ற பாடங்களாக  ஏற்று, விழிப்புடன் செயல்படுபவர்கள் வாழ்க்கை என்னும் கடலில் நீந்தி கரை சேர்கிறார்கள். அனுபவங்களின் முக்கியத்துவம்.   கல்வி என்பது கல்விக்கூடங்களில் கற்றுக்கொடுக்கும் கல்வி மட்டுமல்ல. ஒருவன் பட்டங்கள் பல பெற்றிருக்கலாம்,ஆனால் வாழ்க்கையில் வெற்றி பெற்றவராக  இருப்பதில்லை. அதனால் தான் நம் பெரியவர்கள் ," ஏட்டுசுரைக்காய் ,கறிக்கு உதவாது". என்று கூறினர்.  ஏட்டில் சுரைக்காய் நிறம்,வடிவம், சுவை பற்றிய விவரங்களை அறியலாம். ஆனால் இதைக்கொண்டு  ( அந்த ஏட்டைக்கொண்டு) நாம் அடுப்பில் வைத்து சாப்பிடக்கூடிய கறியை சமைக்க முடியாது.  நாம் ஆசிரியர்களிடம் எவ்வளவு கற்றுக்கொண்டாலும், செய்முறை பயிற்சி மூலம் கற்றுகொண்டதற்கு ஈடாகாது. அது எளிதில் மறக்கவும் மறக்காது. அனுபவங்களை ஒரு மனிதனின் வாழ்க்கையில் மூன்று  பருவங்களில் ஏற்படுவதாக பிரித்துக்கொள்வோம்.  1) குழந்தை பருவம்.  2)  இல்லறபருவம் 3)  முதுமை பருவம். குழந்தை பருவம்:-    இந்த பருவத்தில் மனது துடைத்து வை...

கடவுளை தேடலாமா!

Image
 கடவுளை தேடும் முன் அப்படி ஒருவர் இருக்கிறாரா? என்பதை தெளிவு படுத்துதல் நலம் இல்லையா? ஸ்வாமி விவேகனந்தரும் இக்கருத்தை தான் கொண்டிருந்தார். கடவுள் என்ற ஒன்று இருப்பதற்கு ஆதாரங்கள் உள்ளதா? அப்படி இருக்கும் பட்சத்தில் நாம் அவரை பார்க்க முடியுமா? அவருடன் பேச முடியுமா? பார்த்தவர்கள் எவ ரேனும் உள்ளனரா?  இத்தனை கேள்விகளும் விவேகானந்தருக்கு மட்டுமல்லாது நம்மில் பலருக்கும் உள்ளது. இந்த சந்தேகங்களுக்கு விடையளிக்க விவேகானந்தருக்கு ஒரு ராமகிருஷ்ணர் இருந்தார். கடவுளை பார்த்துள்ளீரா? என்ற கேள்விக்கு ஒரு கணம் கூட தாமதிக்காது ,"ஏன்,உன்னை நான் இப்போது பார்த்துக்கொண்டிருப்பதை விட மிகத் தெளிவாக பார்த்திருக்கின்றேனே ". இந்த மாதிரியான ஒரு தெளிவான அதே சமயம் , உறுதியான பதிலுக்காகக் தான் எங்கெங்கோ அலைந்து திரிந்தார்.இப்போது மனம் சற்றே நிம்மதி அடைந்தது. இந்த பதிலின் நம்பகத்தன்மையை உறுதி படுத்த இராம கிருஷ்ணரை பல வகையிலும் சோதித்தித்த பிறகே அவரை தன் குருவாக ஏற்றுக்கொண்டார்.   சாதாரண மனிதர்களாகிய நாம்,இந்த பிரபஞ்சத்தை கூர்ந்து நோக்கஆரம்பித்தாலே கடவுளை பற்றிய ஒரு தெளிவு பிறக்கும். பின் வரும் கே...

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

Image
  கூட்டு அமைப்பிற்கு எப்போதும் வலிமை அதிகம். உதாரணத்திற்கு  தனிநபர் கோரிக்கைகள் எந்த இடத்திலும் எடுபடாது. அதுவே ஒரு கூட்டு அமைப்பான சங்கத்தின் மூலம் அணுகினால் பலன் விரைவில் கிட்டும். கூட்டு பிரார்த்தனை செய்தால் ,அது இறைவனை உடனே சென்றடைகிறது என்பது கண்கூடான உண்மை. அது போலவே கூட்டு குடும்பத்திலும் நன்மைகள் அதிகம் இல்+அறம்= இல்லறம் வீடு என்பது வெறும் கட்டிடம் தான்.அதற்கு உயிரோ,உணர்ச்சியோ கிடையாது. ஆனால் இல்லம் என்பது அதில் வசிக்கும் மனிதர்களை குறிக்கிறது. அந்த இல்லம் எப்படி இருக்க வேண்டும் என்றால் அறத்தை சார்ந்து இருக்க வேண்டும். இல்லம் என்பதை அதில் வாழும் குடும்பத்தினரை தான் குறிக்கிறது. வசிக்கும் வீடு  என்பது அதில் வாழும் குடும்பத்தினரின் ஒரு அடையாளம். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா,அக்கா,தங்கை, அண்ணன், அண்ணி, தம்பி சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா,மாமா, அத்தை இவர்களெல்லாம் சேர்ந்ததே குடும்பம். கடந்த காலத்தில் குறைந்த பட்சம் மூன்று தலைமுறைகளாவது ஒரே வீட்டில்  வசிக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இன்று காலத்தின் கட்டாயத்தில தனி தனி வீடுகளில் வசிக்க வேண்டியுள்ளது. இத...

ஒருவனே தேவன்

Image
  ராமனே கிருஷ்ணன் , கிருஷ்ணனே ராமன் . இவ்வுலகில் மதங்கள் பல உள்ளன . ஒவ்வொரு மதத்திலும் வழிபடும் தெய்வங்கள் பல உள்ளன . மக்கள் தம் , தம் மதங்கள் உயர்வானது , தாம் வழிபடும் தெய்வங்களே உண்மையான தெய்வம் என்று நினைத்து மற்ற , தெய்வங்களை அலட்சியப்படுத்துகின்றனர் . அதனால்தான் அவ்வப்போது ஸ்ரீராமகிருஷ்ணர் போன்ற மகான்கள்   தோன்றி தாமே கிருத்துவனாக , முகமதியனாக வாழ்ந்து , எல்லா மதங்களும் ஒன்றே , அவர் தம் கடவுளர்களும் ஒன்றே என்று நிரூபித்துள்ளனர் . அவர்சொல்லுவார் ,” நீறு , பானி , வாட்டர் , வெள்ளம் ” எல்லா சொற்களும்  ஒரே பொருளான தண்ணீரைத் தான் குறிக்கின்றன.அவ்வாறே இறைவனை பல பெயர்களால் அழைத்தாலும் , ஒரே இறைவனைத்தான்குறிக்கிறது . இதைத்தான் திருமூலர் ,” ஒன்றே குலம் , ஒருவனே தேவன் ” என்கிறார் . மாணிக்க வாசகரோ , ” ஒருவன் என்னும் ஒருவன்காண்க ” என்கிறார் . இதை நிரூபிக்க பல நிகழ்வுகள் சான்றாக உள்ளது . இங்கே இதற்கு சான்றாக ஒருகதையை காண்போம் . மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலுக்கருகே ஒரு சிற்றரசன் தன் ராணியுடன் வசித்து வந்தான் . அவன் சிறந்த கிருஷ்ண பக்தன் , ராணியோ ராம பக்தை . இருந்தாலும் ஒரு...

அன்பின் பரிமாணம்

Image
  அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று. அன்பில்லாது வாழும் இல்வாழ்க்கை பாலை வனத்தில் காய்ந்து போன மரத்தின் துளிர் போன்றது. அன்பு என்பது உள்ளத்தில் ஊற்றெடுக்கும் ஒரு அற்புதமான உணர்வு.உண்மையான அன்புகாலத்தையும்கடந்துநிற்கும்.இதற்கு சரித்திர சான்றுகள் பல உள்ளன. தன் நண்பனான புலவன் உயிர்விட்டதையறிந்து தானும் வடக்கிருந்து உயிர் துறந்த மன்னனின் கதையை நாம் அறிவோம். செஞ்சசோற்று கடனை கழிப்பதற்காக மட்டும் கர்ணன் , துரியோதனன் பக்கம் நிற்க வில்லை,இருவரிடையே இருந்த நட்பு என்னும் அன்பே இருவரையும் இணைக்கும் பாலமாக இருந்தது. அதனால் தான் துரியன் மனைவி பானுமதி ஆட்டத்தில் தோற்று எழும் போது கர்ணன் முத்துமாலையை இழுத்து அவளை போகாமல் தடுக்கும் போது மாலை அறுபட்டு முத்துக்கள் சிதற , உள்ளே நுழைந்த துரியன் இந்நிலை பார்த்து சிரித்துக்கொண்டே "எடுக்கவோ கோர்க்கவோ"என்கிறான். இதைவிட சிறந்த நட்பிற்கு வேறு என்ன உதாரணம் வேண்டும்?.  அன்பு என்பது சூழ்நிலையை பொறுத்து வெவ்வேறு பெயர்களில் அறியப்படுகிறது. 1)உற்றார் ,உறவினர்களிடம் காட்டும் அன்பு பாசம் . 2)கணவன் மனைவிடையே இருப்பது--- காதல் 3...

நம்மில் ராமாயணம்

Image
  ராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் 1)ராமர்--பரமாத்மா,இவ்வுலகில் ஒருவன் எப்படி வாழ வேண்டும் என்பதனை வாழ்ந்துகாட்டிய மகான்.  2)சீதை--ஜீவாத்மா 3)ராவணனன்---மனம் 4)அனுமன்--------குரு. சரி, இக்கதாபாத்திரங்கள் எவ்வாறு நம்மோடு பொருந்தும்? ராவணனின் மனம் ஆசையால் அலைகழிக்கப்படுகிறது.ராவணனுக்கு, பலர் பிறன் மனையை விழைவது தவறு,சிறை பிடித்தது தவறு என்று எடுத்யுரைகின்றனர். கேட்டானா? இல்லையே! மனதுள்ளே இருந்த  ஆசை, ஆங்காரமாய் எழுந்து நின்று , உற்றார் ஒவ்வொருவரையும் இழக்க வைக்கிறது.  ஜீவாத்மாகிய நம் மனமும்,கட்டுப்பாட்டை இழந்து ஆசை வலையில் அகப்பட்டு இங்கும் அங்கும் அலைகழிக்கப்பட்டு துன்புறுகிறது. ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் தகுதியுள்ள ஒருவன் இலட்ச ரூபாய்க்கு ஆசைபடுகிறான்.அதற்காக போகாத வழிக்கெல்லாம் போய் அல்லலுற்று இருப்பதையும் இழந்து தவிக்கிறான்." நான் அதிர்ஷ்டமில்லா பாபி,எனக்கு மட்டும் ஏன் இந்த கஷ்டம்" என்று அரற்றுகிறான். நாம் எல்லோரும் இறைவனின் வீட்டில் வாடகைக்குஇருப்பவர்கள் தான்.வந்தவேலை முடிந்தவுடன்,புறப்படும்போது,காதருந்த ஊசியைக்கூடநம்முடன் கொண்டு செல்ல முடியாது,என்பதை எல்லோரும...