அன்பின் பரிமாணம்
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.
அன்பில்லாது வாழும் இல்வாழ்க்கை பாலை வனத்தில் காய்ந்து போன மரத்தின் துளிர் போன்றது.
அன்பு என்பது உள்ளத்தில் ஊற்றெடுக்கும் ஒரு அற்புதமான உணர்வு.உண்மையான அன்புகாலத்தையும்கடந்துநிற்கும்.இதற்கு சரித்திர சான்றுகள் பல உள்ளன. தன் நண்பனான புலவன் உயிர்விட்டதையறிந்து தானும் வடக்கிருந்து உயிர் துறந்த மன்னனின் கதையை நாம் அறிவோம். செஞ்சசோற்று கடனை கழிப்பதற்காக மட்டும் கர்ணன் , துரியோதனன் பக்கம் நிற்க வில்லை,இருவரிடையே இருந்த நட்பு என்னும் அன்பே இருவரையும் இணைக்கும் பாலமாக இருந்தது. அதனால் தான் துரியன் மனைவி பானுமதி ஆட்டத்தில் தோற்று எழும் போது கர்ணன் முத்துமாலையை இழுத்து அவளை போகாமல் தடுக்கும் போது மாலை அறுபட்டு முத்துக்கள் சிதற , உள்ளே நுழைந்த துரியன் இந்நிலை பார்த்து சிரித்துக்கொண்டே "எடுக்கவோ கோர்க்கவோ"என்கிறான். இதைவிட சிறந்த நட்பிற்கு வேறு என்ன உதாரணம் வேண்டும்?.
அன்பு என்பது சூழ்நிலையை பொறுத்து வெவ்வேறு பெயர்களில் அறியப்படுகிறது.
1)உற்றார் ,உறவினர்களிடம் காட்டும் அன்பு பாசம்.
2)கணவன் மனைவிடையே இருப்பது---காதல்
3) நலிந்தோரிடம் காட்டுவது-‐-----இரக்கம்,
4) வாயில்லா ஜீவன்களிடத்தும், தொடர்பே இல்லாதவரிடத்தும் காண்பிப்பது-------பரிவு,காருண்யம்.
5) இறைவனிடம் காட்டுவது-----‐-பக்தி:-
பாசம்:- குடும்பத்தில் முதன்முதலில் பெற்றோரிடமிருந்து பிறந்த குழந்தைக்கு கி டைக்கிறது .தான் பெற்ற குழந்தைகளை கண்ணின் இமை போல் வைத்து காப்பாற்றுகிறார்கள்.பாசம் குடும்ப உறுப்பினர்களை ஒன்றாக பிணைக்கிறது. பாசம்
பொறுமையை வளர்க்கிறது.எப்படி? தவறான வழியில் தான் பெற்ற பிள்ளைகள் போகும் போது பெற்றவர்கள் திருத்தமுற்படுகிறார்கள்
அது பயனற்று போகும் போது என்றாவது ஒரு நாள் திருந்த மாட்பார்களா? என்று ஏக்கத்துடன்,பொறுமையுடன் அந்த விடிவுக்காககாத்திருக்கின்றனர்.செயல்படாத போதும் வெறுப்பதில்லை , விலகி நிற்க பழகிக்கொள்கிறார்கள். ஒரு கதை நினைவிற்கு வருகின்றது.தாயை கொன்று விடுகிறான் தனையன்.தாயின் இதயம் கீழேவிழுந்து துடித்துக் கொண்டுள்ளது.தன் பிள்ளை அதை தாண்டி போகும் போது தாயின் இதயம் மகனை எச்சரிக்கிறது , மகனே!கல் ஒன்று பக்கத்தில் உள்ளது, தடுக்கி விடப்போகிறது. பாசம் இல்லா மகன் கூறுகிறான்"நான் விழுந்தால் சந்தோஷம் தானே? உனக்கு?"என்கிறான்
ஈன்றெடுத்த பெரிதுவக்கும் தன் மகனைப்
சான்றோன் எனக்கேட்ட தாய்
தான் பெற்ற பொழுது அடைந்த சந்தோஷத்தைவிட ஊரார் அவனை சான்றோன் என்று கூறும் போது பெரிதும் மகிழ்சியடைகிறாள். குழந்தை வயிற்றில் இருக்கும் போதிலிருந்தே குழந்தைக்கு ஆகாதஎந்தபொருளையும்தாய்எடுத்துக்கொள்வதில்லை.தாங்கள் ஆசைப்பட்ட வாழ்க்கை தங்களுக்கு கிடைக்காவிட்டாலும் அவையெல்லாம் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என்று தங்கள் தேவைகளையும சுருக்கிக் கொண்டு மாடாய்உழைக்கிறார்கள். இந்த தியாகத்திற்கு வேறு ஏதாவது ஈடாகுமா?
காதல்:- எங்கோபிறந்து, எங்கோ வளர்ந்த இருவர்திருமணபந்தத்தில்பிணைக்கப்படுகிறார்கள். ஒருவருக்காக ஒருவர் வாழ ஆரம்பித்து, ஒருவர் இல்லாது மற்றவர் வாழமுடியாது என்றநிலையைஎட்டுகிறார்கள். கணவன் மனைவியின் சுகத்திற்காகவும், மனைவி கணவனின் சுகத்திற்காகவும் வாழ்வதே உண்மையான காதல். உண்மையான காதலில் எந்த விஷயமும் மறைக்கப்படுவதில்லை.கருத்து
பரிமாற்றங்கள் வெளிப்படை தன்மை கொண்டதாக இருக்கும். முடிவு ஒரு விஷயத்தில் எடுப்பதாக இருந்தால் ஒருவருக்கு ஒருவர் கலந்து பேசியே முடிவெடுப்பர் . எந்த விஷயத்திலும் , எப்போதும்மற்றவர்களுக்குஒருவருக்கொருவர் விட்டு கொடுக்கவே மாட்டார்கள்.
இது உடல் சம்பந்தப்பட்ட விஷயமல்ல, உள்ளம் சம்பந்தப்பட்டது.
நட்பு:-
செயற்கரிய யாவுள நட்பின்......
நல்ல நண்பர்களை பெறுவதை விட அரிய செயல் ஒன்றுமில்லை.இன்பத்தில் மட்டுமல்லாது துன்பத்திலும் தோள் கொடுப்பனே உண்மையான நண்பன். தவறு செய்யும் போது கண்டித்து நல் வழியில் திருத்துபவனே உண்மையான நண்பன். ஆபத்து என்று வரும் போது ஒதுஙகி நில்லாது "நான் இருக்கிறேன் ,என்று தைரியம் கொடுப்பனே உண்மையான நண்பன்.
பரிவு:-
மன்னுயிர்ஓம்பிஅருளாள்வார்க்குஇல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.
உலகிலுள்ள உயிர்களிடம் அன்பும் இரக்கமும்கொண்டு காப்பாற்றுவதற்காக தன் உயிர் நடுங்கும் படியான தீ வினைகள் தோன்றாத.
"வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்" என்றார் வள்ளலார். நலிந்த மனிதர்களை காணும் போதாதல்லாது, கஷ்டப்படும் எந்த உயிரை கண்டாலும் மனம் மெழுகு போல் உருக வேண்டும். தன்னால் முடிந்த உதவியினை தயங்காமல் செய்பவனே மனிதன்.
பக்தி:-
பக்தி ஏன் செய்ய வேண்டும். ? பலரின் கேள்வி இது.இவ்வுலகத்தில் எதுவும் நாம் வரும் போதோ, அல்லது விட்டு போகும் போதோ வருவதில்லை. நாம் செய்யும் நற்செயல்கள் தான் நம்முடன்வருகின்றது.
மனிதனால் கட்டுப்படுத்த முடியாத , அழிக்க முடியாத பல விஷயங்கள் உள்ளன. இன்றைய கால கட்டத்தில் குரானா என்ற கொள்ளை நோயை தடுக்க முடிந்ததா? இல்லையே! பூரணமாக ஒழிக்கத்தான் முடிந்ததா? இல்லையே! இது நாள் வரைக்கும் போராடிக்கொண்டுதான் உள்ளோம். பெய்யும் மழையை நிறுத்த முடியுமா இல்லை காயும் வெயிலை தான் குளிர்விக்க முடியுமா? இந்த சக்தியை சக்தி என்று பெயரிட்டு அழைத்தாலும் சரி இறைவா என்று இறைஞ்சினாலும் சரி. விஷயம் ஒன்றே! அந்த பரிபூரணமே நம்மை உய்விப்பது என்ற உண்மையை உணர்ந்து வாழ்வதே பக்தி. குடும்பத்திற்காக மலரும் அன்பு, சொந்தங்கள் விரிவடையும் போது அன்பும் விரிந்து சொந்தம் தாண்டி மற்றைய ஜீவன்களிடத்து அருளாக,மலர்கிறது. மனிதன் இவ்வாறாக அருளாளனாக மாறும் போதுதான் இறை தன்மை எய்துகிறான். மனிதனக்கு இறைதன்மை வந்து விட்டால் உலகில் அமைதியை தவிர வேறெதுவும் இருக்காது.
உலகில் அமைதியை நிலை நாட்ட அன்பின் வழி நிற்போம்.
ஓம் நமசிவாய!
Sooper post
ReplyDelete