கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

 



கூட்டு அமைப்பிற்கு எப்போதும் வலிமை அதிகம். உதாரணத்திற்கு  தனிநபர் கோரிக்கைகள் எந்த இடத்திலும் எடுபடாது. அதுவே ஒரு கூட்டு அமைப்பான சங்கத்தின் மூலம் அணுகினால் பலன் விரைவில் கிட்டும். கூட்டு பிரார்த்தனை செய்தால் ,அது இறைவனை உடனே சென்றடைகிறது என்பது கண்கூடான உண்மை. அது போலவே கூட்டு குடும்பத்திலும் நன்மைகள் அதிகம்

இல்+அறம்= இல்லறம்

வீடு என்பது வெறும் கட்டிடம் தான்.அதற்கு உயிரோ,உணர்ச்சியோ கிடையாது. ஆனால் இல்லம் என்பது அதில் வசிக்கும் மனிதர்களை குறிக்கிறது. அந்த இல்லம் எப்படி இருக்க வேண்டும் என்றால் அறத்தை சார்ந்து இருக்க வேண்டும்.

இல்லம் என்பதை அதில் வாழும் குடும்பத்தினரை தான் குறிக்கிறது. வசிக்கும் வீடு  என்பது அதில் வாழும் குடும்பத்தினரின் ஒரு அடையாளம். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா,அக்கா,தங்கை, அண்ணன், அண்ணி, தம்பி சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா,மாமா, அத்தை இவர்களெல்லாம் சேர்ந்ததே குடும்பம். கடந்த காலத்தில் குறைந்த பட்சம் மூன்று தலைமுறைகளாவது ஒரே வீட்டில்  வசிக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இன்று காலத்தின் கட்டாயத்தில தனி தனி வீடுகளில் வசிக்க வேண்டியுள்ளது. இது ஏன்?

1)கல்வி

2) மேல் நாட்டு நாகரீகத்தின் தாக்கம்

3) தொலை தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி.

4)அயல் நாட்டில் இருக்கும் வேலை வாய்ப்புகளும் அதனால் கிடைக்கும் தனி நபர் பொருளாதார வளர்ச்சியும், சௌகரியங்களும்.

   கல்வியும்,மேல் நாட்டு நாகரீகத்தின் தாக்கமும்,

இப்பொழுது எல்லா மக்களும் உயர் கல்வி கற்கும்  வாய்ப்பை பெற்றுள்ளனர். இளைய சமுதாயமும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற துடிக்கின்றனர். ஆதலால் உலகின் எந்த மூலைக்கும் செல்ல தயங்குவதே இல்லை. வேலை நிமித்தம் குடும்பத்தை விட்டு பிரிகின்றனர். சென்ற இடம் ,சொந்த இடத்தை விட வாழ்வதற்கு எல்லா வளமையும் அளிப்பதாக இருப்பின் அங்கேயே நிரந்தரமாக தங்கி விடுகின்றனர். அங்கேகிடைக்கும் வசதிகள் , அவர்களின் கலாசாரத்திற்கு அடிமையாகி விடுகின்றனர். கூட்டுக்குடும்பத்தில் privacy கிடைக்காது,தன் விருப்பப்படி நடக்கமுடியாது என்று எண்ணி தனிக்குடித்தனத்தையே விரும்புகின்றனர்.

அவர்கள் ஒன்றை மறந்து விடுகின்றனர்.நீ எங்கே வசித்தாலும் , குடும்ப பெரியவர்களின் பாதுகாப்பில் இருந்தால், உனக்கு ஒரு ஆபத்து என்று வந்தால் ஒட்டுமொத்த குடும்பமே உன் பக்கம் நின்று அந்த இக்கட்டிலிருந்து தப்புவதற்கு தோள் கொடுக்கும்.

தொலை தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி.

இக்காலத்து விஞ்ஞான வளர்ச்சி உலகத்தையே கைப்பிடியுள் கொண்டுவந்துள்ளது.உலகத்தில் நீ எந்த மூலையில் இருந்தாலும் உன் குடும்பத்தாருடன் உள்ள தொடர்பு விட்டு விடக்கூடாது. குறிப்பிட்ட இடைவெளியில் உன் ஊருக்கு வந்து குடும்பத்தார் ஒன்று சேர்ந்து கூடி மகிழ வேண்டும்.

ஒரு குடும்பம் ஒன்று சேர்வது என்பது ஒரு நிகழ்வாக மட்டும் இருக்க கூடாது. அது உணர்வுகளின் சங்கமமாக இருக்க வேண்டுவது அவசியம். 

மற்றவர்களை அனுசரித்து போகும் போக்கு, குடும்பத்தின் மூத்தவர்களிடம் காட்டும் அன்பு,பரிவு, மரியாதை, அவர்களின் ஆலோசனைகளை கேட்டல் என்பது மற்ற வளரும் இளம் பருவத்தினர்க்கு கற்கும் பாடமாக அமைய வேண்டும்.

சமூக வலைதளங்களில மூலம் ஒருவர் முகத்தை ஒருவர்பார்த்துபேசிக்கொண்டாலும் நேரில் பார்த்து பேசுவது போல் நிறைவை தராது. 

கூட்டு குடும்பத்தில் தான் அன்பு,பாசம், அறிவு, பொறுமை,விட்டுகொடுத்தல், போன்ற பண்புகள் வளரும். வீட்டில் உள்ள மூத்த குழந்தைகளை பார்த்து இளைய குழந்தைகள் நிறையவிஷயங்களைகற்றுக்கொள்கின்றன.செய்யும் தவறுகள் எளிதில் கண்டுபிடிக்கப்பட்டு திருத்தப்படும்.

ஆகையால் தான் தனியாக அம்பானியாக வாழ்வதைவிட  அன்பான கூட்டுகுடும்பத்தில் நிம்மதியாக வாழ்வதே சாலச்சிறந்தது.  என்று கூறுகிறார்கள்.

.





.









Comments

Popular posts from this blog

பீஷ்மம்

அலகிலா விளையாட்டுடையான்

தவம் என்பது யாதெனில்........