பொறாமை
டேய்! இங்கே பாருடா! அவனுக்கும் உன் வயசு தானே! எப்படி படித்து நல்ல மதிப்பெண்களை பெற்று எல்லோருக்கும் பிடித்தவனாக இருக்கிறான்!நீ ஏன்டா இப்பிடி இருக்கிறே!இப்படிபட்ட வார்த்தைகள் தான் பொறாமைக்கு வித்தாக அமைகிறது.
பொறாமை என்பது நாம் பிறக்கும் போதே நம்முடன் பிறப்பதில்லை . அது பிறரது அறியாமையால் விதைக்கப்படுகிறது. நீங்களே யோசியுங்கள். எந்த தாயோ,தந்தையோ தன் குழந்தை பொறாமையுடன்இருக்கவேண்டும் என்றா விரும்புகிறார்கள்? நிச்சியமாக இல்லவே இல்லை.அவர்கள் எதிர் பார்ப்பதெல்லாம் தன் குழந்தைகள் பிறர் மெச்சும்படிவளரவேண்டும் என்பதை தவிர வேறொன்றுமில்லை. அதனால் தான் மற்ற குழந்தையுடன் ஒப்பிட்டாலாவது போட்டி மனப்பான்மையால் தன் குழந்தையும் நன்றாக இருக்கும் என்றஆசையால் இந்த தவறை செய்கிறார்கள். அடிக்கடி மாற்றார் குழந்தையை பாராட்டும் போது இந்த குழந்தை தன் செயலை ஏன் பாராட்டுவதில்லை என்று ஏங்குகிறது,காலபோக்கில் பொறாமை என்ற தீ எதிரியின் மீது வளர ஆரம்பித்து விடுகிறது.
இந்த குணம் வளர விடாமல் பார்த்துக் கொள்வது வளர்ந்தவர்களின் கடமை என்பதை உணர வேண்டும். எப்படி?
ஆண்டவன் இவ்வுலகத்திற்கு அனுப்பும் போதே ஏதாவது ஒரு திறமையை நம்முள் வைத்துதான் அனுப்புகிறான் என்பதை புரிய வைக்க வேண்டும்.
டேய்!jஅவனைப்போல நீ இரு க்கவேண்டியதில்லை.நீ உன்னைப்போல இரு. என்று சொல்லியே வளர்க்க வேண்டும். எதிரியேயாயினும் அவனிடமூள்ள நல்லவனவற்றை பின்பற்றுவதால் உன் வளர்ச்சி தான் கூடும் என்பதை உணர வைக்க வேண்டும்.
உதாரணத்திற்கு மேலைநாட்டின் கலாசாரம் நம்மிடமிருந்து பல வகையில்வேறுபட்டிருந்தாலும்,சுத்தத்திலும்,நேரம் தவறாமையிலும் அவர்களை பாராட்டாமல் இருக்க முடியுமா சொல்லுங்கோ!
எல்லோரும் நீட் தேர்வு எழுதுகிறார்கள் என்று அதில் சிறிதும் விருப்பமே இல்லாதவனையும் கட்டாயப்படுத்தினால் அதில் தேர்ச்சி பெறுவது குதிரைகொம்பு தான்! டாக்டருக்கு சேரும் அவர்களிடம் பொறாமை பட செய்கிறார்கள். மாறாக, படிக்கவே பிடிக்கவில்லை என்றால் கட்டாயடுத்தாதீர்கள். நுண்கலைகளிலோ ,குறிப்பிட்ட விளையாட்டிலோ ஆர்வமிருந்தால்,ஊக்கப்படுத்தங்கள். தப்பே இல்லை! அதில் கவனம் செலுத்ததொடங்கினால் மற்றவர்களை பார்த்து பொறாமை பட மனமோ,நேரமோ இருக்காது.
பொறாமை ஒரு ஆட்கொல்லி.
தான் தேர்ந்தெடுத்த துறையில் மேலே,மேலே முன்னேற விடாது, மன ஆரோக்கியத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் ஒருங்கே கெடுக்கும்.
தாழ்வு மனப்பான்மையை வளரச் செய்யும்.
கஷ்டபடும் காலங்களில் தோள் கொடுத்து தூக்கி விடுவதற்கு நண்பர்கள் கிடைப்பார்களா?
ஐயோ! அவனுக்கா? கொள்ளிக் கண்ணு. அவன் சங்காத்தமே வேண்டாமடா சாமி! மற்றவர்களை பார்த்து வயிரெரிந்தற்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்றல்லவா நினைப்பார்கள்.
பொறாமை இருக்கும் இடத்தில் ஆணவம் தலை தூக்கும்.
ஆணவம் இருக்கும் இடத்தில் விவேகம் இருக்காது.
விவேகம் இல்லா இடத்தில் அமைதியோ,வளர்ச்சியோ இருக்காது.

Comments
Post a Comment