மனம் ஒரு குரங்கு
ஆம்!இது முற்றிலும் உண்மை தானே!
குரங்கின் இயல்பு பற்றி எல்லோருக்கும் தெரியும். மனமும் அவ்வாறே ஒரு நினைப்பில் நிலைத்து நிற்பதில்லை. இது நம்மை போன்ற சாதரண மக்களுக்கானது. இதே, சாதனையாளர்களுக்கு பொருந்தாது. அவர்களின் சாதனைக்குவேர் , நிலைத்த புத்தியே. அதனால் தான் சுவாமி விவேகானந்தர் போன்ற அருளாளர்கள் இறைவனிடம், பொன், பொருளை கேட்பதில்லை. மாறாக,வைராக்கியமான நிலைத்த புத்தியினை தான் வேண்டுகின்றனர்.
மனம் என்றால் என்ன?
மனம் என்பது நம் எண்ணங்களே ! இதை மற்ற உறுப்புகளை ,புறக்கண்ணால் பார்க்கும்படி இல்லை, உணரத்தான் முடியும்
மற்றவர்கள் அடுத்தவர்களின் மனதை படிக்க முடியுமா என்றால் , முடியும்.
யாருக்கெல்லாம் முடியும?
யார் ஒருவரின் மனம் கள்ளம்,கபடு இல்லாது செம்மையாக உள்ளதோ, அவர்களுக்கு மற்றவர்களின் மனபோக்கை அறிய முடியும்.
அதனால் தான் அகத்தியர்கூறுகிறார்.
மனமது செம்மையானல் மந்திரங்கள் ஜெபிக்க வேண்டாம்
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாம்
மனமது செம்மையானால்வாசியை நிறுத்த வேண்டாம்
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே.
என்று கூறுகிறார்.
மனம் குற்றமற்று இருக்குமானால், மந்திரம், பிராணாயாமம், வாசியோகம் போன்ற எதுவுமே தேவையில்லை. குற்றமற்றமனதின் சொந்தக்காரர் உதிர்க்கும் ஒவ்வொரு சொல்லும் மந்திரத்தை போல பலிக்கும்.
செம்மையான மனதின் நன்மைகள்.
1) அடுத்தவருக்கு தீமை நினைக்காது.
2) அமைதியான மனதில் எதிர்பார்ப்போ, பயமோ இருக்காது.
3) சமூகம் இவர்களை மிக்க மதிப்புடன் நடத்தும்.
மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம். என்பது முதுமொழி.
ஆகவேஅலையாத உடலும் , அலையும் மனமும் கெடும்.
மனதில் பேராசையை வளர்த்துக்கொண்டு,மனதைகண்டபடி அலைய விட்டு,தானும் கெட்டு, பிறரையும் கெடுப்பதை விட துரோகம் வேறெதுவும் இல்லை. வேண்டாத குப்பைகளை மனதில் திணித்து, திண்டாடிக்கொண்டு வாழ்க்கை சக்கரத்தை ஓட்டி குடும்பத்தாரை நடு வீதியில் தவிக்க விட்டு, விட்டு போய் சேர்வதை விட , சுத்தமான மனதை கொண்டு தானும் ,தன் குடும்பத்தாரும் அமைதியான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வோமாக!
Comments
Post a Comment