பிறவிகள் ஏன்?
பிறவி எடுப்பது என்பது நம் கையில் தான் உள்ளது. ஆனால் நம்மில் பலரும், கடவுள் கொடுப்பது தான் பிறவி என்று எண்ணிக்கொண்டுள்ளோம். நாம் என்னவாக,தாவரமாகவோ, விலங்காகவோ மனிதராகவோ, பிறப்பது என்பது தான் இறைவன் எடுக்கும் முடிவு. இதில் நம் விருப்பம் ஒன்றுமில்லை . நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்பத்தான் கடவுள் பிறப்பை முடிவு செய்கிறான்.
நாம் எத்தகைய பிறவி எடுக்க வேண்டும் என்பதை நம் முப்பிறவியில் நாம்செய்த செயல்களை வைத்துதான் இறைவன் முடிவெடுக்கிறார். இதை தான் கர்மவினை என்கிறார்கள்
கர்ம வினையை பற்றி என் சிந்தனை:-
படைக்கும் கடவுளுக்கு தானே, தான் படைத்தவற்றின் மேல் ஆளுமை இருக்கும்? அப்படியிருக்கும் போது மனிதனை நற்செயல்களை செய்ய வைத்து சந்தோஷத்தை மட்டும் கொடுக்கலாமே! பின் ஏன் நல்லதல்லா செயல்களையும் செய்ய வைத்து பிற பிறவிகளில் துன்பத்தை கொடுக்கிறான்?. இது நியாயமா?.
சிந்தித்தேன். ஒரு தெளிவும் அவனருளால் கிடைத்தது.
நவ நிதிகளை இறைவன் நாம் பிறக்கும் போதே நம்முடன் வைத்து அனுப்புகிறான்.அதில் ஒன்று தான் அறிவு. அதை (கஸ்யப நிதி)சரியான முறையில் பயன்படுத்துவது நம் கையில் தான் உள்ளது.
மனதை இயக்குவது அறிவு. அவ்வை கிழவி அன்றே சொன்னாள், மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம் என்று. என்ன ஒரு அருமையான அறிவுரை, என்ன ஒரு அருமையான அறிவுரை. நினைத்து நினைத்து, என்மனம் ஆனந்தம் அடைகிறது . நான் ஏன் மனம் மகிழ்கிறது என்று கூறவில்லை? காரணம்:- மகிழ்ச்சி என்பது நிலையானது இல்லை, ஏதாவது நிகழ்வு நடக்கும் போது மட்டும் தான் மகிழ்வுறும், பின் மறைந்துவிடும். அதாவது அது அந்த க்ஷண உணர்ச்சியின் வெளிப்பாடு. ஆனால் சந்துஷ்டியடைந்தால் நினைக்கும் போதெல்லாம் மனம் நிறையும்.
தவறு செய்யாத மனிதனும் இல்லை, துன்பத்தை எதிர் கொள்ளாத மனிதனும் இல்லை. இது ஏன் நடக்கிறது?
இதுவும் உலகம் சீராக நடப்பதற்காக இறைவன் நமக்கு வைக்கும் சோதனையா? ஆம்! அவன் கொடுத்த அறிவினை சரியான வழியில் உபயோக படுத்துகிறோமா? என்பதாக இருக்குமோ? தவறுகளை செய்ய வைத்துஅதைஉணரவைத்து,திருத்துவதற்குவாய்ப்பளிக்கிறான்.இப்பிறவியில் திருந்தா விடில் , திருந்தி, உணரும்வரை பிறவிகளை எடுத்துக் கொண்டே தான் இருக்கவேண்டும். துன்பத்தைக்கொடுத்து இன்பத்தின் அருமையை உணர வைக்கிறான், பல பாடங்களையும் கற்க வைக்கிறான். கற்கா விட்டால், பிறவிகளும் தொடரும்.
உதாரணமாக, தான் எடுத்த அவசர முடிவால் ஒருவன் பெரும் இழப்பை சந்திக்கிறான். பிறகு சிந்திக்கும் போது தன் தவறை உணர்ந்து , அடுத்த முறை அத்தவறை செய்யாது கவனமாக செயல் படுகிறான். அது போலவே தவறான பழக்கத்திற்கு அடிமையானவர்களையும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக நிறுத்தி பின் விளைவுகளை பற்றி சிந்திக்க வைத்து இவ்வுலகை திருத்துகிறான்,
இன்பம் மிகுந்தால், துன்பமும் தொடரும்.
துன்பத்தை தொடர்ந்து இன்பமும் வரும். இவ்வாறு இரண்டும் கலந்துதான் மனித வாழ்க்கை.
ஆகவே பிறவிகளை ஒழிக்க அவன் தாளே சரணம் என்று இன்பத்தில் துள்ளி குதிக்காமலும், துன்பத்தில் துவண்டு போகாமலும், வாழ்க்கையை நடத்திக்கொண்டு போனால் பிறவிகள் ஒழிந்து இன்ப,துன்பமற்ற அவன் தாளின் கீழ் இளைப்பாறலாம்.
யார் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இவ்வுலகம் இயங்கிக்கொண்டுதான் இருக்கும். ஏனென்றால் இவ்வுலகம் இறைவனுடையது.
தொல்லை இரும் பிறவி சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே
எல்லை மறவா நெறியளிக்கும் வாதவூர் எம்கோன்
திருவாசகம் எனும் தேன்.
ஆம். பிறவிகள் வேண்டாம் என்றால் திருவாசகத்தை படித்து தெளிவு பெற்று , வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, பிறவியில்லா நிலையை அடைய முயல வேண்டும்.
Comments
Post a Comment