ஆச்சாரிய தேவோ பவ

 


  
யார் ஆச்சாரியர்கள்?

யார் நம்முள் உறங்கிக்கிடக்கும் அறிவினை தூண்டுகிறார்களோ அவர்களே ஆச்சாரியர்கள். பள்ளியில் கற்றுக்கொடுப்பவர்களை ஆசிரியர் என்ற பெயரால் அழைக்கிறார்கள் . நல்ல மாணவர்களை இந்த சமுதாயத்திற்கு கொடுப்பதின் மூலம் நல்ல நாட்டை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். 

நல்லாசிரியர்:-
1)நல்லாசிரியர் என்பவர் தான் கற்றது எல்லாம் மாணவர்களுக்கு கொடுப்பதோடு, புதிதாக ஏற்படும்மாற்றங்களையும் கற்று தெளிந்து, தன்மாணவர்கள்  up -to-dateஆக இருக்க செய்கிறார்கள்

2) He must be ,
Ever forgiving,
Never irritable,
Soft& tolerant.

3) கற்றல் குறைபாடு இருப்பதற்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும். பொருளாதார சிக்கலா, குடும்ப சூழ்நிலையா  என்பதை ஆராய வேண்டும். மாணவர்களை மனம் திறந்து பேச வைக்க வேண்டும்.  இது அவ்வளவு எளிதான விஷயமல்ல. இதற்கு முதலில் ஆசிரியரிடம் மாணவர்களுக்கு முழு நம்பிக்கை ஏற்படும் வகையில் ஆசிரியர்கள் நடந்துகொள்ள வேண்டும்.
4)  தன் சொந்த காரணங்களால் மனம் சோர்வுற்றிருந்தாலும், பள்ளி வளாகத்திற்குள் நுழையும் போது மலர்ந்த முகத்துடன் மாணவர்களை எதிர் கொள்ள வேண்டும்.
5) வகுப்பறையில் நுழையும் போது மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ,கொடுக்கும் பதில் அவர்களின் சந்தேகங்களுக்கு உரிய பதிலாக அமைய வேண்டும். 
6) ஆசிரியர்களை கண்டால் பயம் வராமல் மரியாதை வர வேண்டும்.
7) தனக்குதெரிந்தஎல்லாவிஷயங்களையெல்லாம் கொட்டி விட வேண்டும் என்று நினைக்காது, மாணவர்கள் level க்கு இறங்கி வந்து basic conceptஐ புரிய வைக்க வேண்டும். 

மாணவர்களுக்கிடையே ஆசிரியர்கள் வகிக்கும் இடம். 
மாணவர்களுக்கிடையே ஆசிரியர்கள்  வகிக்கும் இடம் மிகவும் மகத்தானது. இந்த பந்தம் உணர்வுபூர்வமானது. மிகவும் உணர்ச்சி மிக்கது.
ஆசிரியர்கள் எவ்வாறு செயல் பட வேண்டும்?
1)தன்னுடைய மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெற்று ஒரு நல்ல நிலையில் 
 இருக்கும் போது ஈன்ற போதில் பெரிதுவக்கும் தாயைப்போல் பெருமிதம் கொள்கின்றர். 
எப்படி ஒரு தாய் தான் பெற்ற எல்லா பிள்ளைகளையும் ஒரேமாதிரி நேசிக்கிறாளோ, அவ்விதமே தன் மாணவர்களை பாடுபாடு இல்லாது ஒன்று போல நேசிக்க வேண்டும். 
2)கற்றலில் , கற்றவற்றை நினைவு கூர்வதில்  எல்லா பிள்ளைகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. பின் தங்கும் பிள்ளைகளை தட்டிக்கொடுத்து உன்னால் முடியும் என்று ஊக்கம் கொடுத்து, கை கொடுக்க வேண்டும்.
3)தவறு செய்யும் போது ஒரு தந்தையையப் போல் கண்டித்து திருத்த வேண்டும். இங்கே தான் உடற்கல்வி ஆசிரியர்களின் பெருமை தெரிகிறது. மாணவர்களின் ஒழுக்கத்திற்கும் நேர மேலாண்மைக்கும், கட்டுப்பாடான வாழ்க்கைக்கும் இவர்களே பொறுப்பு. 
ஓவிய ஆசிரியர்களும்,பாட்டு, கைவினை ஆசிரியர்களும் வாழ்க்கையை ரசிக்க கற்றுககொடுக்கிறார்கள். 
4)குரு எவ்வாறு தன் சீடனின் கவலைகளை போக்குவற்கு வழி காட்டுகிறார்களோ, அவ்வாறே ஆசிரியர்களும்,நண்பனாய், மாணவர்களின் பிரச்சனைகளை தீர்க்கும் வடிகாலாக விளங்க வேண்டும். 
சுருக்கமாக சொன்னால் தாய் பூனை தன்னுடனேயே எவ்வாறு வாயில் கவ்விக்கொண் டு பத்திரமாக அடுத்த இடத்திற்கு கொண்டு செல்கிறதோ அது மாதிரி தன் மாணாக்கர்கள் அடுத்த கட்ட நகர்தலுக்கு உதவ வேண்டும். 

பெற்றோர்களின் பொறுப்பு:-
ஒரு குழந்தை வீட்டில் இருப்பதை விட பள்ளியில் இருக்கும் நேரமே அதிகம். ஆசிரியர்களை மரியாதையுடன் குறிப்பிட வேண்டும். குழந்தைகள் ஆசிரியரை பற்றி குறை கூறினால் அதை entertain  பண்ணக்கூடாது. வளரிதம்பருவத்தில் ஏற்படும் பிரச்சனைகளை ஆசிரியருடன் கலந்து தீர்க்க வழி காண வேண்டும்.

நிர்வாகத்தின் பொறுப்பு:-
ஆசிரியர்கள் குறைந்தது இரண்டு வருடமாவது தன் மாணாக்கர்களுடன் சேர்ந்து பயணிக்கும் வகையில் வகுப்புகளை ஒதுக்க வேண்டும்.




Comments

Popular posts from this blog

பீஷ்மம்

அலகிலா விளையாட்டுடையான்

தவம் என்பது யாதெனில்........