ஒருவனே தேவன்
ராமனே கிருஷ்ணன்,கிருஷ்ணனே ராமன்.
இவ்வுலகில் மதங்கள் பல உள்ளன.ஒவ்வொரு மதத்திலும்
வழிபடும் தெய்வங்கள் பல உள்ளன.மக்கள் தம்,தம் மதங்கள் உயர்வானது,தாம் வழிபடும்
தெய்வங்களே உண்மையான தெய்வம் என்று நினைத்து மற்ற,தெய்வங்களை
அலட்சியப்படுத்துகின்றனர். அதனால்தான் அவ்வப்போது ஸ்ரீராமகிருஷ்ணர் போன்ற மகான்கள் தோன்றி தாமே கிருத்துவனாக,முகமதியனாக
வாழ்ந்து ,எல்லா மதங்களும் ஒன்றே,அவர் தம்
கடவுளர்களும் ஒன்றே என்று நிரூபித்துள்ளனர்.அவர்சொல்லுவார்,”நீறு,பானி,வாட்டர்,வெள்ளம்” எல்லா சொற்களும்
ஒரே பொருளான தண்ணீரைத் தான் குறிக்கின்றன.அவ்வாறே
இறைவனை பல பெயர்களால் அழைத்தாலும்,ஒரே இறைவனைத்தான்குறிக்கிறது. இதைத்தான்
திருமூலர்,”ஒன்றே குலம், ஒருவனே தேவன்”என்கிறார்.மாணிக்க வாசகரோ,”ஒருவன் என்னும்
ஒருவன்காண்க”என்கிறார்.இதை நிரூபிக்க பல
நிகழ்வுகள் சான்றாக உள்ளது.இங்கே இதற்கு சான்றாக ஒருகதையை காண்போம்.
மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலுக்கருகே ஒரு சிற்றரசன் தன்
ராணியுடன் வசித்து வந்தான்.அவன் சிறந்த கிருஷ்ண பக்தன்,ராணியோ ராம
பக்தை.இருந்தாலும் ஒருவருக்கொருவர் மிகுந்த அன்பு பூண்டு வாழ்ந்து வந்தனர்.ஒரு நாள்
ராஜா பிருந்தாவனத்திற்கு போகலாம் என்று தன் ராணியை அழைத்தான்.ராணியும்
உற்சாகத்துடன் புறப்பட்டாள்.அங்கு பிருந்தாவனத்தை அடைந்ததும் ,மற்றபக்தர்களுடன்சேர்ந்துக்கொண்டு
கண்ணனின் புகழை பாடி, ஆடிக்கொண்டிருக்கும் போது நடுவில் ஒரு கண்ணனும் ராதாவும்
ஆடினர்.அப்போது வானத்திலிருந்து பூமாலை பொழிய நடுவில் நின்ற கண்ணனும் ராதையும் மறைந்து
போயினர். இதை பார்த்ததும் நடுவில் நின்று ஆடியது கண்ணனும், ராதையுமே என்பதனை
மன்னனும் உணர்ந்து மகிழ்ச்சியில்திளைத்தான்.கண்ணன் தரிசனம்
கிடைத்த சந்தோஷத்தில் ராணியுடன் நாடு திரும்பினான் நாட்கள் நகர்ந்தன.இப்போது ராணிக்கு
தன் ராமனை காண வேண்டும், அயோத்திக்கு செல்ல வேண்டும் என்ற அவா எழுந்தது. அயோத்திக்கு
செல்லும் முன் தன் ராமனுக்கு ஒரு அழகிய கோயிலை தன் நாட்டில் கட்டினாள். பின்பு அரசனிடம்
“அயோத்திக்கு செல்லலாம் வாருங்கள்”என்று கூப்பிட்டாள்.ஆனால் அரசன்
தனக்கு கண்ணனே காட்சி கொடுத்து விட்டான்.அந்த காட்சியேமனம்நிறைந்துள்ளது.வேறு தெய்வம்
எதுவும் இல்லை, கண்ணன் ஒருவனே
உண்மையான தெய்வம். நீ வேண்டுமானால் உன் ராமனை இங்கே அழைத்து வந்தால், என் கண்ணனை
தவிர வேறு தெய்வம் உள்ளது என்று நம்புகிறேன்”என்று சொல்லி
அவளுடன் அயோத்திக்கு செல்வதை தவிர்த்து விட்டான்.அரசியும்மேற்கொண்டு அவனைவற்புறத்தாதுஅயோத்திக்கு
சென்று அங்குள்ள கோவிலில் பல நாட்கள் தவமாய் தவமிருந்து ராமனை தன்னுடன்வருமாறுகெஞ்சுகிறாள். ராமன் அசைந்து
கொடுக்கவில்லை.ஏமாற்றத்தில் மனம் துவண்டு, அங்குள்ள
சரயு நதியில் தன் இன்னுயிரை மாய்த்துக் கொள்ள எண்ணி நதியில்இறங்கிவிடுகிறாள்.அப்போது இரண்டு
பிஞ்சு கைகள் அவளது இரண்டு கால்களையும் இறுக கட்டிக்கிட்டு“அம்மா,என்ன காரியம்
செய்ய நினைத்தனை? என்னுடன் வா,வா என்று கூப்பிட்டாயொழிய
என்றைக்கு என்று சொன்னாயா?” உடனே குழந்தையைகட்டிவாரியணைத்துக்கொண்டு,” என் செல்லமே! இப்போதே புறப்படலாமடா” என்று கூற, குழந்தை,மூன்று கட்டளைகளை
இடுகிறது.
1)மாதத்தில் நான் சொல்லும் நக்ஷத்திரத்தில் மட்டுமே பயணம் செய்ய
வேண்டும்.
2)தன்னுடன் இருக்கும் பக்தர்களும் உடன் வர அனுமதிக்க வேண்டும்.
3)எக்காரணத்தை கொண்டும் தன்னை கீழே இறக்கி வைக்கக்கூடாது.
அரசியும் இதற்கு உடன் பட்டு,ராமனை இடுப்பில் வைத்துக்கொண்டு நடக்க தொடங்கினாள்.இவளுக்கு மட்டும்தான்ராமன்குழந்தையாக தோன்றினான்.மற்றவர் கண்களுக்குவெறும்சிலையாகத்தான் தெரிந்தான்.
அரசி குழந்தைக்கு உண்ண உணவும் பருகநீரும்கொடுத்துக்கொண்டே தன்நாட்டைஅடைந்தாள்.அரசனும் இவளை வரவேற்று,”என்ன ராமனை அழைத்து வருவதாய் கூறி விட்டு சிலையை எடுத்து வந்துள்ளாய்?என் கண்ணன் ரத்தமும் சதையுமாக எனக்கு காட்சி கொடுத்தானே!” என்று எக்காளமாய் கேட்டான்.உன் ராமன் வெறும்சிலையாகத்தான் இருக்கிறான்?.” என்று கேட்க, ராணி பதிலேதும் கூறாது,களைப்புடன் இடுப்பிலிருந்த ராமனை பக்கத்திலிருந்த கட்டிலில் உட்கார வைத்தாள்.
பிறகுதன்னைசற்றுஆசுவாசப்படுத்திக் கொண்டு ராமனை கோவிலில் வைக்க முற்படும் போது ராமனை என்ன முயன்றும் கட்டிலிலிருந்து தூக்க முடியவில்லை.
அப்போது அசரீரியாக ஒரு குரல்,” அம்மா உன்னை
விட்டு நான் எங்கும் வரமாட்டேன்.நீ உன் கணவன் பிருந்தாவனத்திற்கு கூப்பிட்டபோது மறுப்பேதும்
சொல்லாது அவனுடன் சென்றாய்.ஆனால் உன் கணவன் கண்ணன் தான் உண்மையான கடவுள் என்று சொல்லி அயோத்திக்கு என்னை காணவரமறுத்துவிட்டார்.உனக்கு இருக்கும்
நம்பிக்கை அவருக்கு இல்லை.நானே ராமன், நானே கண்ணன்”.என்று சொல்லி
ஒரு கையில் புல்லாங்குழலும், மறுகையில் வில்லுடனும் அவள் கணவனுக்கு காட்சி கொடுத்தான். மன்னனும்
மனம் தெளிவுற்று அதே இடத்தில் ஒரு கோயிலை கட்டி பூசித்து வந்ததற்கு அடையாளமாக இன்றும்
அங்கு உட்கார்ந்த நிலையில் அருள் ராமன் பாலித்துக்கொண்டு உள்ளார்.
நம் தமிழ்நாட்டில் கூட இறைவன் ஒன்றே என்பதற்கு சாட்சியாகசங்கரநாராயணன்,அர்த்தநாரீஸ்வரர்
உள்ளனர்.
ஒன்றேகுலம்,ஒருவனேதெய்வம்

Sooper , great thoughts put into words
ReplyDeleteThank u gayu
ReplyDelete